கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10-06-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10-06-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 100:


இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.


விளக்கம் :


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.



பழமொழி : 


Bend the twig, Bend the tree / You can’t teach old dog new tricks 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?


பொன்மொழி:


நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?

அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.




அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?


விடை: அக்னி


தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?


விடை: இங்கிலாந்து


காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?


விடை: பூம்புகார்


தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?


விடை: கோயமுத்தூர்


சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்


விடை: மெலானின்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Mistake - பிழை 

Mix - கலக்கு 

Mock - மாதிரி

Money - பணம்

Month - மாதம் 


ஆரோக்கியம்


  நம்முடைய உடல் கால்சியத்தை சொந்தமாக உற்பத்தி செய்யாது. எனவே பால், சோயா, பச்சை இலை காய்கறிகள் மற்றும் அத்திப்பழங்கள் போன்ற உணவு மூலங்களை நாம் நம்பியிருக்க நேரிடுகிறது. இந்த நிலையில் கால்சியத்தின் சக்திவாய்ந்த மூலமாக அத்திப்பழங்கள் இருக்கின்றன. எனவே அத்திப்பழங்களை அடிக்கடி டயட்டில் சேர்ப்பது நம்முடைய எலும்புகளை ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது.



இன்றைய சிறப்புகள்


ஜூன் 10


2002 – இரண்டு மனிதர்களின் நரம்பு மண்டலங்களுக்கு இடையில் முதல் நேரடி மின்னணுத் தொடர்புப் பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் கெவின் வாரிக் என்பவரால் நடத்தப்பட்டது.


2003 – நாசாவின் ஸ்பிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.


2017 – உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.


பிறந்த நாள் 

1972 – சுந்தர் பிச்சை, இந்திய-அமெரிக்க கணினி தொழில்நுட்ப மேலாளர்


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

அடிமை ஒழிப்பு நாள் (பிரெஞ்சு கயானா)

படைத்துறையினரின் நாள் (ஜோர்தான்)



நீதிக்கதை 


நான்கு நண்பர்கள் 


முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு அந்தணர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர். 


சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். முதல் மூவரும் சிறந்த அறிவாளிகள்; பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், சிவானந்தன் உண்பதிலும் உறங்குவதிலுமே தன் பொழுதைக் கழித்து வந்தான். அவன் ஒரு முட்டாள் என்றே மற்றவர்கள் கருதினர். 


ஒரு முறை அந்தக் கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறுகளும் ஏரிகளும் வற்றத் தொடங்கின. பயிர்கள் கருகின. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.


 உயிர் பிழைக்க அந்தக் கிராம மக்கள் மற்ற இடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். மற்றவர்களைப் போல் நாமும் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாம் இறந்து விடுவோம், என்றான் சத்தியானந்தன். அவன் கூறியதை மற்ற நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். “சிவானந்தனை என்ன செய்வது?” என்று கேட்டான் சத்தியானந்தன். 



“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல வேண்டுமா ? அவனுக்குப் படிப்பும் இல்லை; எந்தத் திறமையும் இல்லையே” என்று தொடர்ந்து கூறினான் சத்தியானந்தன்.


“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல முடியாது. அவன் நமக்குச் சுமையாக இருப்பான்” என்று பதில் கூறினான் தர்மானந்தன். 


“அவனை இங்கேயே இருக்க விட்டு நாம் மட்டும் எப்படிச் செல்லமுடியும்? நம்முடன் வளர்ந்தவன் அவன். நாம் சம்பாதிப்பதை நம் நால்வரிடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,” என்று வித்தியானந்தன் கூறினான். 


எனவே, சிவானந்தனைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர். தேவையான பொருள்களை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள நகரத்தை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஒரு காடு குறுக்கிட்டது. அதன் வழியே செல்லத் தொடங்கினர். 



ஓர் இடத்தில் ஒரு விலங்கின் எலும்புகளைக் கண்டனர். வியப்படைந்த அவர்கள் அவற்றை அருகில் சென்று பார்த்தனர். 


“இவை ஒரு சிங்கத்தின் எலும்புகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று வித்தியானந்தன் கூறியவுடன் மற்ற மூவரும் அதை ஆமோதித்தனர். 


உடனே, ” நம்முடைய கல்வியறிவைப் பயன் படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, ” என்று சத்தியானந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். 



“இந்த எலும்புகளை என்னால் ஒன்று சேர்க்க முடியும், ” என்று கூறியவாறே சத்தியானந்தன் அந்த எலும்புகளை ஒன்று சேர்த்துச் சிங்கத்தின் எலும்புக் கூட்டை உருவாக்கினான். 


“அதற்கு இரத்தமும் தசையும் என்னால் அளிக்க முடியும்” என்றான் தர்மானந்தன் அவனுடைய திறமையால் உயிரற்ற சிங்கத்தின் முழுமையான உடல் இப்போது அவர்கள் முன்னால் கிடந்தது.


“இந்தச் சிங்கத்தின் உடலுக்கு என்னால் உயிரூட்ட முடியும்” என்று துடிப்புடன் கூறினான் வித்தியானந்தன். 


உடனே முன்னால் ஓடி வந்து சிவானந்தன் அவனைத் தடுத்தான். “வேண்டாம், வேண்டாம். நீ ஒன்றும் செய்ய வேண்டாம்.நீ இந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினால் இது நம்மைக் கொன்றுவிடும், என்று கூறியவாறே அவனைத் தடுக்க முயன்றான் சிவானந்தன். 


” ஏ. கோழையே ! என்னுடைய அறிவையும் திறமையையும் பரிசோதித்துப் பார்ப்பதிலிருந்து நீ என்னைத் தடுக்க முடியாது,” என்று கோபத்துடன் வித்தியானந்தன் கத்தினான். 


தொடர்ந்து, ” நான் மற்றவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டதாலேயே, நீ எங்களுடன் இங்கு வர முடிந்தது. இப்போது என்னையே நீ தடுக்கப் பார்க்கிறாயா ? ” என்று சிவானந்தனைக் கடிந்து கொண்டான்.


 ” இரு, இரு, நான் முதலில் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன், ” என்று பயந்தவாறு கூறிய சிவானந்தன், அருகில் இருந்த மரத்தின் மீது தாவி ஏறினான். 



மரத்தின் உச்சாணிக் கிளையில் அவன் ஏறி அமர்ந்த போது வித்தியானந்தன் தன் திறமையால் அந்தச் சிங்கத்தை உயிர் பெறச் செய்தான். 


பலமாகக் கர்ச்சித்தவாறு எழுந்த சிங்கம் அந்த மூன்று அறிவில் சிறந்த அந்தணர்களையும் தாக்கிக் கொன்றது ! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் அறிவு அவர்களுக்குப் பயன்படவில்லை.


 நீதி : கல்வியறிவைவிடச் சமயோசித அறிவே சிறந்தது.



இன்றைய முக்கிய செய்திகள் 


10-06-2024 


 ஜனாதிபதி மாளிகையில் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்: 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் பதவியேற்பு...


ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு என தகவல்...


தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்: ஒடிசாவில் வி.கே.பாண்டியன் திடீர் அறிவிப்பு...


நான் முதல்வன் திட்டத்தின்கீழ் சிறப்பு பயிற்சி பெற தமிழ்நாடு கல்லூரிகளை சேர்ந்த 25 மாணவர்கள் லண்டன் பயணம்...


நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல் காந்தி...


நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்...


மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு...


முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள நிலையில் ஆந்திராவில் மீண்டும் தலைநகர் அமராவதி பணிகள் தொடக்கம்...


பி.இ விண்ணப்ப பதிவு மேலும் 2 நாள் நீட்டிப்பு: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு...




Today's Headlines:

10-06-2024


 Modi sworn in as PM for 3rd term at President House: 30 Cabinet Ministers, 5 Union Ministers sworn in...


 Terrorist attack on bus in Jammu and Kashmir: 10 people reported dead...


 Retiring from active politics: VK Pandian's sudden announcement in Odisha... 


25 students from Tamilnadu colleges will travel to London to get special training under Nan Muthalvan scheme... 


I will raise my voice in Parliament about NEET exam malpractice: Rahul Gandhi...


No malpractice in NEET exam: National Examinations Agency explains... 


Textbook will be provided to students on the day school opens: School Education Department Announcement... 


As Chandrababu is about to take office as the Chief Minister, the capital Amaravati work has started again in Andhra... 


BE application registration extended by 2 more days: Tamil Nadu Directorate of Technical Education Notification...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...