கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.06.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.06.2024 - School Morning Prayer Activities...

 

திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :கல்வி

குறள் எண்:398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

பொருள்:ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப் பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும்.


பழமொழி :
Failure is the stepping stone to success .

தோல்வியே வெற்றிக்கு முதல் படி.



இரண்டொழுக்க பண்புகள் :

1.நல்ல ஆரோக்கிய உணவுகள், பழங்கள் உண்டு நன்கு நீரும் அருந்துவேன்.

2.ஆரோக்கியமற்ற துரித உணவுகள், பொரித்த உணவுகள் தவிர்ப்பேன்.



பொன்மொழி :

தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் வெல்ல முடியும்.”

-- அப்துல் கலாம்



பொது அறிவு :

1.ஜப்பானின் தலைநகரம் எது?

விடை: டோக்கியோ

2. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?

விடை: கோலா


English words & meanings :

coherent- தெளிவும் எளிமையும் கொண்ட,

   lucid- நன்கு விளக்குகிற



வேளாண்மையும் வாழ்வும் :

அலைந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்த மனிதனை ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்ய வைத்து நாகரிகத்தை நிறுவுவதில் விவசாயம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.



ஜூன் 20

கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.


நீதிக்கதை

நம்பிக்கை

ஓர் அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன.  மெலிதாய் காற்று வீசிக்கொண்டிருந்தது காற்றைக் கண்டதும்  'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி  ஐயோ காற்று வீசுகிறதே!நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமான குரலில் கூறிக்கொண்டே அணைந்தது.

'அன்பு' என்ற இரண்டாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறிக் கொண்டே அணைந்தது.

'அறிவு' என்னும் மூன்றாவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடி இறுதியில் அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்றுடன்  எதிர்த்து  கடுமையாக போராடி பின்பு பிரகாசமாக  எரிந்தது.

அப்போது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான்.  அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்து  விட்டது என்று கவலையுடன் கூறினான்.

அப்போது எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி  "கவலைப்படாதே என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக் கொள்" என்றது.

உடனே சிறுவன் நான்காவது  மெழுகுவர்த்தியை பார்த்து உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டான். என் பெயர் "நம்பிக்கை" என்றது நான்காவது மெழுகுவர்த்தி.

நாம் எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது.




இன்றைய செய்திகள்

20.06.2024

* காற்றாலை மின் நிலையங்களை அதிகளவு அமைத்ததற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து விருது கிடைத்துள்ளது.

* மறுவாழ்வு வசதிகளை செய்யும் வரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் ஜூன் 22, 23 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

* அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை சிகிச்சை மையங்களை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

* கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* பெர்லின் ஓபன் டென்னிஸ்; பெலாரஸ் வீராங்கனை அசரென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: போர்ச்சுக்கல், துருக்கி அணிகள் வெற்றி.



Today's Headlines

* Tamil Nadu has received an award from the central government for setting up more wind power plants.

*  The High Court has ordered that the Mancholai tea plantation workers should not be evicted until rehabilitation facilities are provided.

* The Chennai Meteorological Department has informed that heavy to very heavy rain is likely to occur in Tamil Nadu on June 22 and 23.

* Union Health Minister J P Natta has ordered the establishment of special heat wave treatment centers in all central government hospitals.

* According to Saudi officials, around 550 pilgrims have died this year due to the extreme heat.

*:Berlin Open Tennis;  Azarenka of Belarus advances to 3rd round.

* European Football Championship: Portugal and Turkey Team won.


Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...