கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.06.2024 - School Morning Prayer Activities...

 


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் : கல்வி

குறள்எண்:399

தாம் இன் புறுவது உலகுஇன் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு ,
கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.



பழமொழி :


Small rudders guide great ships.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.



இரண்டொழுக்க பண்புகள் :

1.நல்ல ஆரோக்கிய உணவுகள், பழங்கள் உண்டு நன்கு நீரும் அருந்துவேன்.

2.ஆரோக்கியமற்ற துரித உணவுகள், பொரித்த உணவுகள் தவிர்ப்பேன்.



பொன்மொழி :

ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம் என்ற வலிமையான காரணம் வேண்டும்.. அப்போது தான் நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்.!”------ அப்துல் கலாம்



பொது அறிவு :

1.அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?

விடை: தாய்லாந்து

2. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?

விடை: நார்வே



English words & meanings :

coerce - கட்டாய,

force - கட்டாயப்படுத்து



வேளாண்மையும் வாழ்வும் :

விவசாயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
அதன் பரிணாம வளர்ச்சியானது பரவலான காலநிலை, நாகரிகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.



ஜூன் 21

உலக இசை நாள்

உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.



பன்னாட்டு யோகா நாள்

பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார்.



நீதிக்கதை

செய்யும் செயல்

தையல்காரர்  ஒருவர்  தனது கடையில் துணிகள் தைத்துக் கொண்டிருந்தார்.  அவருடைய மகன் அருகில் இருந்து  அதனை கவனித்து  பார்த்துக் கொண்டிருந்தான்.

தையல்காரர் புது துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால்  வெட்டினார். பின்பு கத்தரிக்கோலை  காலடியில் வைத்து விட்டு துணியை தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் ஊசியை எடுத்து தனது தலையில் இருந்த தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார்.

அதைப் பார்த்து அவருடைய மகன் கேட்டான் "அப்பா! கத்தரிக்கோல் மிகவும் அழகானது! விலை அதிகமானது அதை காலடியில் போட்டு விட்டீர்கள் ஆனால் ஊசியோ சிறியது மிகவும் மலிவானது அதை தலையில் குத்தி வைத்துக் கொண்டிருக்கிறீர்களே  ஏன்?"

"நீ சொல்வது உண்மைதான். என்ற தையல்காரர் பின்பு  கத்திரிக்கோல் மிகவும் அழகாகவும்,விலை அதிகமாகவும் இருந்தாலும் அதனுடைய செயல் வெட்டுவது அதாவது பிரிப்பது

ஆனால் ஊசி சிறியதாக இருந்தாலும் விலை மலிவாக இருந்தாலும் அதனுடைய செயல் சேர்ப்பது".

ஒருவருடைய மதிப்பு அவர்  உருவத்தில் இல்லை அவர் செய்யும் செயலால் நிர்ணயிக்க படுகிறது.

நல்லதே செய்வோம்.

நலமாய் வாழ்வோம்.



இன்றைய செய்திகள்

21.06.2024

* செப்டம்பர் 14-ல் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

* தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது.

* சொத்து விற்பனையில் உரிமையாளரின் கைரேகை சரிபார்க்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தகவல்.

* நீட் முறைகேடு: ஜூலை 8-க்குள் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

* எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 156 ஹெலிகாப்டர் கொள்முதல்: மத்திய அரசு டெண்டர் வெளியீடு.

* 5-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் செர்பியா வீரர் ஜோகோவிச்.

* இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட கடுமையாக உழைப்பேன் என்று ஆக்கி வீராங்கனை ஷர்மிளா தேவி தெரிவித்துள்ளார்.


Today's Headlines

* Group-2 Prelims on September 14: TNPSC Notification.

* In Tamil Nadu, the Legislative Assembly meeting started yesterday to discuss the department wise grant request.

* The registry informed that the facility of fingerprint verification of the owner has now been introduced in the sale of property.

* NEET malpractice: Supreme Court directs National Examination Agency Center to respond by July 8

* Procurement of 156 helicopters from HAL: Central Govt issues tender.

* Djokovic of Serbia is participating in the Olympics for the 5th time.

* Hockey player Sharmila Devi has said that she will work hard to continue to perform well for the Indian team.


Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...