கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நோட்டாவிடம் தோல்வி அடைந்த 803 வேட்பாளர்கள்...


 NOTAவிடம் தோல்வி அடைந்த 803 வேட்பாளர்கள்...


 புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நோட்டாவிடம் 803 வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி நோட்டாவுக்கு 4 லட்சத்து 76 ஆயிரம் 468 பேர் வாக்களித்துள்ளனர். அந்தவகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர்அலிகான் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். திருவண்ணாமலையில் 27 பேர், அரக்கோணம் தொகுதியில் 22 பேர், ஆரணியில் 25 பேர், ஈரோடு தொகுதியில் 27 பேர், கோவையில் 33 பேர், கள்ளக்குறிச்சி 16 பேர், சேலம் 21 பேர், புதுவையில் 21 பேர், நெல்லையில் 18 பேர், தூத்துக்குடியில் 24 பேர், தென்காசியில் 12 பேர், கன்னியாகுமரியில் 17 பேர்.திருப்பூரில் 9 பேர், பொள்ளாச்சியில் 11 பேர், நீலகிரியில் 12 பேர், விருதுநகரில் 23 பேர், மதுரையில் 11 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், ராமநாதபுரத்தில் 19 பேர், சிவகங்கையில் 18 பேர், தேனியில் 21 பேர், நாமக்கலில் 36 பேர், தர்மபுரியில் 20 பேர், கடலூரில் 14 பேர், விழுப்புரத்தில் 13 பேர், சிதம்பரத்தில் 10 பேர்,கிருஷ்ணகிரியில் 23 பேர், கரூரில் 50 பேர், பெரம்பலூர் 19 பேர், திருச்சியில் 30 பேர், தஞ்சையில் 7 பேர், நாகை 5 பேர், மயிலாடுதுறையில் 12 பேர், மத்திய சென்னை 27 பேர், தென் சென்னையில் 37 பேர், வடசென்னையில் 31 பேர், பெரும்புதூர் 27 பேர், திருவள்ளூரில் 10 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் என மொத்தம் 803 வேட்பாளர்கள் நோட்டாவிடம் தோற்றுள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...