கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு - விவிபேட் இயந்திரங்களில் பதிவாகிய ஓட்டுச் சீட்டுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்கு எண்ணும் பணி...




கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வருகிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட 81 மற்றும் 224 ஆகிய வாக்குச்சாவடி மையத்திற்கு உட்பட்ட மின்னணு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 151ல் இருந்த மின்னணு இயந்திரம், சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கபுரம், நகராட்சி விநாயகபுரம் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் கோளாறு, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாவலூர் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் ஆகியவற்றில் கோளாறு காரணமாக எண்ணும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோளாறு ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகிய ஓட்டுச் சீட்டுகளை கொண்டு வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்

  💰 பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்! உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் கணக்கு 10+ ஆண...