கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:441

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்: அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.



பழமொழி :
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம

Practice makes perfect



இரண்டொழுக்க பண்புகள் :

*  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                  

*என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.



பொன்மொழி :

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது.----ஆபிரகாம் லிங்கன்.



பொது அறிவு :

1. நிலவு இல்லாத கோள்கள் எவை??

புதன் மற்றும் வெள்ளி

2. அதிக நிலவுகள் கொண்ட கோள் எது?

சனிக் கிரகம்


English words & meanings :

treat-உபசரி,

discuss-விவாதி



வேளாண்மையும் வாழ்வும் :

மூங்கில் அரிசி
உறுதியான எலும்புகள் பெற உதவும். மூட்டுவலி, முதுகு வலி, முழங்காலில் ஏற்படும் வலிகள் அறவே குறையும். மூங்கில் அரிசி, இதன் சுவை கோதுமை போல் இருக்கும்.விளைவிக்க 30 முதல் 40 ஆண்டுகள் ஆகும்.



ஆகஸ்ட் 01

பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்

பால கங்காதர திலகர் சூலை 23, 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.



நீதிக்கதை

சிட்டுக்குருவியும் காகமும்

ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.

அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன

அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது.

அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து.

இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.

இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு விட்டு  பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது.

அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்துக் கொண்டு வந்தார். சிட்டுக்குருவி விவசாயிடம் சொன்னது, “ஐயா… நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் இந்த மரத்தில் சும்மாதான் அமர்ந்திருந்தேன் உங்களுடைய நிலத்தில் உள்ள எந்த சோளத்தையும் நான் உண்ணவில்லை” என்றது.

ஆனால் விவசாயி அந்த சிட்டு குருவியின் பேச்சை கேட்காமல் அந்த கம்பை எடுத்து சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது.

நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை சற்று கேட்க வேண்டும்.



இன்றைய செய்திகள்

01.08.2024

🍁மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கல்வி செயல்பாடுகளுக்காக நியமிக்கப்பட்ட தனி எழுத்தர்கள் இன்று பணியில் சேர உள்ள நிலையில் அவர்களின் பணி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

🍁மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து உபரி நீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடக்கம்.

🍁போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

🍁கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

🍁கர்நாடகாவில் தொடரும் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ .

🍁சீனாவில் கனமழை, வெள்ளம்; 7 பேர் பலி.

🍁ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி.

🍁ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் முன்னேறியுள்ளார்.


Today's Headlines

🍁The school education department has released the job details of the special clerks appointed for educational activities in the district collectorate offices today.

🍁As the Mettur dam reaches its full capacity, the work of releasing the surplus water from the dam and filling  the 56 lakes has started.

🍁School Education Minister Anbil Mahes Poiyamozhi has said that a good decision will be taken after holding talks with the protesting teachers.

🍁 As the death toll in the devastating landslide in Kerala's Wayanad continues to rise, the National and State Disaster Response Force, Air Force, and Firefighters are actively involved in rescue operations.

🍁Heavy rains continue in Karnataka: 'Red Alert' for 5 districts.

🍁Heavy rains, floods in China;  7 people died.

🍁 Olympics: Indian player Sreeja Akula wins table tennis tournament.  Qualified for the pre-quarter-final round.

🍁 Indian athlete Lovlina Borgohain has advanced to the Olympic boxing quarter-finals.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...