கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளி மாணவ/மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ ( Bonafide Certificate ) அளித்தல்‌ குறித்து அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 001358/எம்‌1/1/2024, நாள்‌ 26.07.2024...


 அரசுப்பள்ளி மாணவ/மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ ( Bonafide Certificate ) அளித்தல்‌ குறித்து அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 001358/எம்‌1/1/2024, நாள்‌ 26.07.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -6
ந.க.எண்‌. 001358/எம்‌1/1/2024, நாள்‌ 26.07.24

பொருள்‌ : பள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி மாணவ/மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ ( Bonafide Certificate ) அளித்தல்‌ குறித்து அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பாக

பார்வை 1. அரசாணை (நிலை) எண்‌.438 மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை, நாள்‌ 29.10.2010

2. அரசாணை (நிலை) எண்‌:167 உயர்கல்வித்துறை, நாள்‌ 31.08.2021


பார்வையிற்காணும்‌ அரசாணைகளின்படி அரசுப்பள்ளிகளில்‌ பயின்ற மாணவ/மாணவியர்க்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ சேர்வதற்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்காக அம்மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகளில்‌ உறுதிச்சான்றிதழ்‌  (Bonafide Certificate ) பெறுவதற்கு அணுகும்போது அவற்றை வழங்குவதற்கு காலதாமதம்‌ ஏற்படுவதாக தெரிய வருகிறது. அம்மாணவர்கள்‌ 6-8 ஒரு பள்ளியிலும்‌, 9-12 வகுப்புகள்‌ வேறு பள்ளியிலும்‌ பயின்றுள்ள நிகழ்வுகளில்‌ கடைசியாக பயின்றுள்ள பள்ளியிலிருந்து மேற்படி சான்றிதழ்கள்‌ உடன்‌ வழங்கப்படாமல்‌ காலதாமதம்‌ ஏற்படுவதாகவும்‌ தெரிகிறது.

எனவே, இதுபோன்று வெவ்வேறு பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்கள்‌ சார்பான விபரங்களை கல்வி மேலாண்மை தகவல்‌ மையத்‌ (EMIS) தளத்திலிருந்து பெற்று அதனடிப்படையில்‌ மேற்படி உறுதிச்‌ சான்றிதழை (Bonafide Certificate ) எவ்வித தாமதமின்றி உடனுக்குடன்‌ சம்பந்தப்பட்ட மாணவ/மாணவியர்களுக்கு வழங்கிடுமாறு சார்ந்த பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள்‌ வழங்குமாறும்‌ மேற்படி சான்றிதழை சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ உடன்‌ மேலொப்பம்‌ செய்து வழங்குமாறும்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்‌வி இயக்குநர்‌.


பெறுநர்‌

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌

நகல்‌

திரு. மகேஷ்‌, Chief Technical Officer

கல்வி மேலாண்மை தகவல்‌ மையம்‌ (EMIS)
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை - 6.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...