கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்...



மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் Transfer Certificate கேட்டு வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்...


ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்டு வலியுறுத்தக் கூடாது என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.


அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...