கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்று சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்று சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கேட்டு வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்...



மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் Transfer Certificate கேட்டு வற்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்...


ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்டு வலியுறுத்தக் கூடாது என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.


அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.


EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்...


 EMIS Students TC &  Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்:


அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.


பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யவும்


Terminal Classes

📌 *Primary school - 5 std

📌 *Middle Schools - 8 Std

📌 *High Schools - 10 std

📌 *Higher Secondary schools - 10 and 12 std


For Doubts in TC Generation, watch this video, Link 👇🏻 :

https://youtu.be/i72MtMVF0D8


Note: Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes (EMIS Mark Entry, Noon-meal, Uniform, Cycle Entry, Textbook, etc) பதிவுகளை உரிய TNSED Schools App / EMIS-இல் மேற்கொண்ட பின் மட்டும்தான் TC Generation & Promotion மேற்கொள்ளவும்.


📌 Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. (Students menu ➡️ Promotion) 


Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்


🔮குறிப்பு : 1


Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)


🔮 குறிப்பு : 2


Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( School ➡️ Class and Section).


🔮 குறிப்பு : 3


Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும். 


குறிப்பு : Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் "Student is Promoted to the Next class ?" என்ற களத்தில் Discontinued என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.


Promotion work


Point to be noted: 01


Reverse order ல் மட்டுமே promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


🔘 Primary School -  4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


🔘 Middle School -  7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.


🔘 High School -  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std


🔘 Higher secondary School - 11 to 12 std,  9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std


Note: Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும்.


Point to be noted : 02


🔘 UKG வேறு பள்ளியில் பயின்று promotion பணிக்கு முன் 1-ஆம் வகுப்பில் புதிதாக common pool - இருந்து Admit செய்த மாணவர்களின் பெயர் promotion திரையில் தோன்றுகிறது. 1-ஆம் வகுப்பில் இருந்து 2-ஆம் வகுப்பிற்கு promote செய்யும் போது அந்த மாணவர்களை தவறுதலாக promote செய்து விட கூடாது.


For promotion related doubts watch this video, Link 👇🏻:

https://youtu.be/T-aRJInO9jg


Steps to be Followed after Promotion Process


Promotion முடித்த பின் 


🔵 Step 1

School ➡️ Class and Section பகுதியில் தேவையற்ற  Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் Delete செய்ய வேண்டும்.


🔵 Step : 2

School ➡️ Class and Section பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group (Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


Note: EMIS Promotion has to be initiated only after the results are approved by the concerned Officials. Thank You.     


EMIS - TC INSTRUCTIONS - பள்ளிக் கல்வி - EMIS மாணவர் விவரம் - 2022-2023 ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல் (Transition) - 2023-2024 ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (School Education - EMIS Student Profile - Issuance of TC to students who have completed the academic year 2022-2023 and transition of students who have passed other classes to the next class (Transition) - Entry of new admission details for the academic year 2023-2024 in EMIS website - Entry and Uploading - Giving Instructions - Regarding - State Project Director's Proceedings) ந.க.எண்: 2001/ C1/ EMIS/ SS/ 2023, நாள்: 15-05-2023...

 

>>> EMIS - TC INSTRUCTIONS - பள்ளிக் கல்வி - EMIS மாணவர் விவரம் - 2022-2023 ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல் (Transition) - 2023-2024 ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்தல்  - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (School Education - EMIS Student Profile - Issuance of TC to students who have completed the academic year 2022-2023 and transition of students who have passed other classes to the next class (Transition) - Entry of new admission details for the academic year 2023-2024 in EMIS website - Entry and Uploading - Giving Instructions - Regarding - State Project Director's Proceedings) ந.க.எண்: 2001/ C1/ EMIS/ SS/ 2023, நாள்: 15-05-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


EMIS இல் TC தொடர்பான பணிகளை முடித்து அவர்களை Common Poolக்கு (Past Student ) அனுப்பிய பின் அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்பு மாணவர்களை அடுத்து வகுப்பிற்கு மாற்றம் செய்திடும் பணிகளை 31-05-2023க்குள் முடிக்க வேண்டும்.



ஜூன் 1 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு புதிய வகுப்பில் வருகை பதிவை ஆன்லைன் மூலம் செய்திட வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

மாற்று சான்றிதழ் (TC Details Reset) செய்தல் குறித்த தகவல்கள் (Information about TC Details Reset)...

 

மாற்று சான்றிதழ் (TC Details Reset) செய்தல் குறித்த தகவல்கள் (Information about TC Details Reset)...


TC Details Reset

மூன்று முறைக்குமேல் TC details -ல் திருத்தம் செய்ய இயலாது. நான்காவது முறையாக திருத்தம் செய்ய வேண்டுமானால், 1 மணி நேரம் கழித்து தானாக reset ஆகிவிடும். அதன்பிறகு திருத்தம் செய்துகொள்ளலாம். 


இந்த தானாகவே reset ஆகும் வசதி வரும் வெள்ளி கிழமை (12.05.2023)வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கும் வழிமுறைகள் (Procedures for issuing Transfer Certificates to students)...



>>> மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கும் வழிமுறைகள் (Procedures for issuing Transfer Certificates to students)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS வலைதளத்தில் மாற்று சான்றிதழ் தயார் செய்ய தேவையான விவரங்கள் (Details required to prepare a Transfer Certificate on the EMIS website)...

EMIS வலைதளத்தில் மாற்று சான்றிதழ் தயார் செய்ய தேவையான விவரங்கள் (Details required to prepare a Transfer Certificate on the EMIS website)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS - Students TC Transfer & Class Promotion எப்பொழுது செய்வது? - TNSED Appல் மாணவர் வருகை பதிவு செய்வது எப்படி?

 


EMIS - Students TC Transfer & Class Promotion எப்பொழுது செய்வது? - TNSED Appல் மாணவர் வருகை பதிவு செய்வது எப்படி?



மாணவர் இடமாற்றங்கள் & பதவி உயர்வுகள்



 1. பள்ளியின் உயர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் கீழ் வகுப்புகளிலிருந்து பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் (திங்கள் & செவ்வாய்) TC வழங்கவும்.



 2. மாணவர்கள் தானாக அடுத்த வகுப்பிற்கு (புதன்கிழமை) பதவி உயர்வு பெறுவார்கள்.



 3. மாணவர்களின் வகுப்பில் உள்ள பிரிவுகளைத் திருத்துவதற்கும், ஒவ்வொரு பிரிவிற்கும் (வியாழன்) சரியான வகுப்பு ஆசிரியர்களை நியமிக்கவும்.


 4. RTE சேர்க்கைகள் மற்றும் புதிய சேர்க்கைகள் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை)


 DOB / AADHAR / ஃபோன் எண்ணை மாற்ற வேண்டிய மாணவர்களுக்கு, அந்தந்த BEO உள்நுழைவுகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்தத் துறைகளில் BEOக்கள் செய்த அனைத்து மாற்றங்களும் கண்காணிக்கப்படும். எனவே, இந்த முறையின் மூலம் மட்டுமே உண்மையான மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவு புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.


 *மாணவர் வருகை*


 1. திங்கள் முதல் வியாழன் வரை, முந்தைய கல்வியாண்டின் அதே வகுப்பு மற்றும் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான வருகைக் குறிப்பைத் தொடரவும்.


 2. வெள்ளிக்கிழமை முதல், புதிய பிரிவுகள் மற்றும் ஆசிரியர்களின்படி அனைத்து மாணவர்களுக்கும் வருகையைக் குறிக்கவும்.


 3. அடுத்த வாரம் (ஜூன் 20) திங்கட்கிழமை முதல், புதிய கல்வியாண்டு பிரிவுகள் மற்றும் ஆசிரியர்களின்படி அனைத்து வருகையும் குறிக்கப்படும்.


 4. RTE சேர்க்கை முடிந்ததும் அடுத்த திங்கட்கிழமை (ஜூன் 20) முதல் RTE வருகை குறிக்கப்படும்.


 *ஆசிரியர் வருகை*


 1. பரஸ்பர இடமாற்றம் / யூனிட் பரிமாற்றம் மூலம் மாற்றப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் சுயவிவரங்களும் புதிய பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

 

2. திங்கட்கிழமை (ஜூன் 13) HM உள்நுழைவு மூலம் ஆசிரியர் வருகையை வழக்கம் போல் குறிக்கவும்.


Student Transfers & Promotions

1. Issue TC for all students in the highest class of the school and for students who are leaving the school from lower classes (Monday & Tuesday)

2. Students will be promoted automatically to next class (Wednesday)

3. Assign students to correct sections in their class and assign correct class teachers to each section (Thursday)

4. RTE admissions and new admissions (Friday & Saturday)


For students whose DOB / AADHAR / Phone number needs to be changed, it can be done only through the respective BEO logins. All changes made by the BEOs to these fields will be tracked. Therefore, please ensure that authentic and verified data is only updated through this method. 


Student Attendance

1. From monday to thursday, continue marking attendance for the students in the same class & section as previous academic year

2. From friday, mark attendance for all students as per the new sections and teachers. 

3. From Monday next week (June 20), all attendance to be marked as per new academic year sections and teachers. 

4. RTE attendance to be marked from next monday (June 20) after RTE admissions are completed. 


Teacher Attendance

1. All teachers profiles transferred via mutual transfer / unit transfer have been moved to the new schools. 

2. Mark teacher attendance as usual through HM login on Monday (June 13)

மாணவர்களுக்கு EMIS வலைதளத்தில் மாற்றுச் சான்றிதழ் தயார்செய்து வழங்கும் வழிமுறைகள் (Instructions for preparing and issuing Transfer Certificates to students on the EMIS Website)...



>>> மாணவர்களுக்கு EMIS வலைதளத்தில் மாற்றுச் சான்றிதழ் தயார்செய்து வழங்கும் வழிமுறைகள் (Instructions for preparing and issuing Transfer Certificates to students on the EMIS Website)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 EMIS TC  FAQ :

🥏TC applied date, Issue date - எந்த தேதி பதிவிடுவது?

Ans: current date or Future date - பதிவு செய்யலாம் TC வழங்கும்  நாள் அன்று past students menu வழியாக திருத்தம் செய்து வழங்கலாம்.


🥏சில நேரங்களில் class, student list காண்பிப்பதில்லை என்ன செய்வது?

Ans: Use Ctrl+F5 or Ctrl+shift+R for refreshing the Emis page.


🥏long absent students யும் common pool அனுப்ப வேண்டுமா?

Ans: அனைத்து Terminal class மாணவர்களையும் common pool அனுப்ப வேண்டும். தெரியாத தகவல்களுக்கு dummy details பதிவிட்டு common pool அனுப்பிவிடவும். மாணவன் வந்து கேட்கும் பொழுது சரியான தகவல் பதிவிட்டு வழங்கிக்கொள்ளலாம்.

EMISல் TC Generate செய்யும்பொழுது கவனிக்கவேண்டியவை - எழும் ஐயங்களும் அவற்றிற்கான தீர்வுகளும் (Things to look out for when generating TC in EMIS - Doubts that arise and solutions to them)...



>>> EMISல் TC Generate செய்யும்பொழுது கவனிக்கவேண்டியவை - எழும் ஐயங்களும் அவற்றிற்கான தீர்வுகளும் (Things to look out for when generating TC in EMIS - Doubts that arise and solutions to them)...



EMIS TC FAQs:


1.பள்ளியின் உயர் வகுப்பு ( Terminal class ) க்கு மட்டுமே முதலில்  TC தயார் செய்ய வேண்டுமா? 


ஆம்,  அதன் பிறகே கீழ் வகுப்புகளுக்கு கேட்பவர்களுக்கு TC வழங்கலாம்.


2. Promotion செய்யும் பணியும் தற்போது உண்டா  ? 


இல்லை, தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.


3. மேல்நிலை பள்ளிகளில் 10 & 12 இரண்டு வகுப்பு  மாணவர்களையும் இறுதி வகுப்பாக கருதி Common Pool அனுப்பி TC generate செய்ய வேண்டுமா? 


ஆம். கட்டாயம் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு TC GENERATE செய்ய வேண்டும்.





EMIS வலைதளத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் ( Online TC) தயார் செய்து வழங்கும் வழிமுறைகள் (Instructions for preparing and issuing Transfer Certificates to students on the EMIS website)...



>>> EMIS வலைதளத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் ( Online TC) தயார் செய்து வழங்கும் வழிமுறைகள் (Instructions for preparing and issuing Transfer Certificates to students on the EMIS website)...



>>> EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை தயார் செய்ய தேவையான விவரங்கள்...



>>> EMIS வலைதளத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Online TC Generate செய்வதற்கு தேவையான விவரங்கள் மற்றும் வழிமுறைகள் (Step by Step விளக்கம்)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


*🟢🔵தற்போது EMIS TC  Generate  செய்வதில்   சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த கல்வி ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.*


🔹🔸மாணவர்கள் தகவல்களை தயார் நிலையில் வைத்து இருக்கவும்......


முறையான அறிவிப்பு வந்த உடன் EMIS TC Generate செய்யலாம்..


1. LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரும் மாணவர்களுக்கு தற்போது எமிஸ் இணையதளம் வாயிலாக மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குதல் வேண்டும்.


2. முதலில் students - students list வாயிலாக மாணவர்களின் சுயவிவரப் படிவத்தில் (students profile) ஏற்கனவே தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவனின் விவரங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா ? என்பதை சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து save செய்திடல் வேண்டும்.


3. அதனைத் தொடர்ந்து students students TC Details வாயிலாக மாற்றுச் சான்றிதழுக்கு தேவையான விவரங்களை மாணவனின் பெயருக்கு எதிராக இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து. பூர்த்தி செய்தல் வேண்டும்.


இப்படிவத்தில் அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும். *Personal mark of identification_ சார்ந்த மாணவனின் இரு அங்க அடையாளங்களில் ஒவ்வொன்றை 50 எழுத்துக்களுக்குள் பிழையின்றி பூர்த்தி செய்தல் வேண்டும். 


 Student is promoted to the next class_ 10 மற்றும் 12 வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு மட்டும் Refer Marksheet எனவும், பிற வகுப்பு மாணவர்களுக்கு Yes/No/No-discontinued என்பதில் பொருத்தமான ஒன்றையும் தேர்வு செய்தல் வேண்டும்.


'School recognition number_அரசு உதவி பெறும் பள்ளிகள்சுயநிதிப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளி அங்கீகார எண்ணைப்பூர்த்தி செய்தல் வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தவும். (Ex: ந.க.எண் - R.C Number) *Caste/ community/ religion_அரசின் வழிகாட்டுதல் படி மாணவர்களின் மதம்/ இனம் சார்ந்த விபரங்களை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடாமல், Refer community certificate / leave bank/ No caste( communilty) என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்தல் வேண்டும்.


"TC application date & issue date தற்போது எந்த தேதியில் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரிவிண்ணப்பம் அளித்துள்ளாரோ/ தாங்கள் எந்த தேதியில் மாற்று சான்றிதழ்கள் வழங்க இருக்கிறீர்களோ அதனை குறிப்பிடுதல் வேண்டும்.


4. அதனைத்தொடர்ந்து மேற்கண்டவாறு பூர்த்திசெய்து விவரங்கள் அனைத்தும் மிகச்சரியாக உள்ளதை உறுதி செய்த பின் save என்பதை தேர்வு செய்தல் வேண்டும்.


5. அவ்வாறு save செய்த பின்பு, என்பதை தேர்வு செய்து மாணவன் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெறுவதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்தல் வேண்டும். தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு (highest class) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் terminal class என்பதையும், பிற வகுப்பு மாணவர்களுக்கு சரியான காரணத்தையும் தேர்வு செய்தல் வேண்டும். அதனை தேர்வு செய்து save செய்தபின், சார்ந்த மாணவனது விவரங்கள் commonpoolக்கு சென்றுவிடும் தங்கள் பள்ளியில் students listல் இருந்து மாணவனின் பெயர் நீக்கப்பட்டுவிடும்.


6.அதேசமயம் students- students TC details - current student listல் இடம் பெற்றிருந்த மாணவனின் விவரங்களும் past students listக்கு சென்றுவிடும்.


7. தற்போது past students listல் இடம்பெற்றுள்ள சார்ந்த மாணவனது பெயருக்கு எதிரே உள்ள pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் மாற்றுச் சான்றிதழை நகலெடுத்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.


8. Pdf வடிவில் பதிவிறக்கம் செய்த பின்பு மாற்றுச் சான்றிதழில் பிழைகள் கண்டறியப்படின், past students listல் சார்ந்த மாணவனின் பெயருக்கு எதிரே இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து திருத்தங்களை செய்தபின், மீண்டும் pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் திருத்தம் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


9. Student TC detailsல் இடம்பெறும் save optionயை மொத்தமாக மூன்று முறை மட்டுமே பயன்படுத்த இயலும். முதல் முறையில் அங்க அடையாள விபரம் முதல் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் தேதி வரையிலான விவரங்களை பதிவு செய்து save செய்தபின், திருத்தங்கள் கண்டறியப்படும் போது மேலும் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.


10. மாணவனின் பெயரில் 'ஸ்ரீ' என்ற வடமொழி எழுத்து இடம்பெறும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளியின் மாற்று சான்றிதழ் புத்தகத்திலிருந்து மாற்று சான்றிதழ் வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அம்மாணவருக்கு எமிஸ் தளத்தில் மாற்றுச் சான்றிதழ் விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தபின் common poolக்கு அனுப்புதல் வேண்டும் என அனைத்துவகை பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும்  தெரிவிக்கப்படுகிறது.

நன்றி .....

கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது()- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு (Private schools not to refuse to issue Transfer Certificates to students for non-payment of fees - Chennai High Court)...





 கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை அதிகரிப்பு...



மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர்களை சேர்க்க, அரசு அனுமதித்து உள்ளதால், தனியார்பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்வது அதிகரித்துள்ளது.


அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, கடந்த கல்வி ஆண்டுக்கான கட்டணப் பாக்கியை வசூலித்து, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு உள்ளன.இதில், கடந்த ஆண்டு கட்டணம் செலுத்தாமல், பாக்கி உள்ளவர்களில் பலர், கட்டணத்தை செலுத்துவதற்கு பதில், வேறு பள்ளிகளுக்கு மாறி வருகின்றனர்.


பல மாவட்டங்களில், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர், அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். 'கட்டணப் பாக்கி செலுத்தினால் மட்டுமே, மாற்றுச் சான்றிதழ்களை வழங்குவோம்' என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கெடுபிடி காட்டுவதால், மாற்றுச் சான்றிதழ் வாங்காமலேயே, மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாறுகின்றனர்.


தமிழக அரசின் சார்பில், 2010ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளில் சேர்வதற்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என, கூறப்பட்டுள்ளது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை பயன்படுத்தி, தற்போது மாற்று சான்றிதழ் இன்றி, அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதனால், பல ஆயிரம் கட்டணப் பாக்கியில் இருந்து, பெற்றோர் தப்பித்துள்ளனர். அதேநேரம், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளோ, மாணவர்களிடம் கட்டணம் பெற முடியாமல், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.


அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க TC தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு...

 அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க TC தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு...


அரசு பள்ளிகளில் மாணவர்களை 8ம் வகுப்பு வரை சேர்க்க டிசி தேவையில்லை: தனியார் கொடுக்காவிட்டாலும் ஆதார் போதும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது 8ம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 1 வகுப்புகளில் கடந்த 14ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை  நடக்கிறது. கொராேனா தொற்றின் காரணமாக பொதுமக்களிடம் ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருந்து வருகிறது. அதனால், தனியார் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். மாற்றுச் சான்று வழங்க தனியார் பள்ளிகள் மறுப்பு தெரிவித்து, கடந்த ஆ ண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டுமே மாற்றுச் சான்று வழங்கி வருகின்றன.



இந்த பிரச்னையால், மாற்றுச் சான்றை பெறுவதில் பெற்றோர் சிரமப்படுகின்றனர். இதற்கிடையே, தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டை தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் கூறும்போது, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் , தங்கள் பள்ளிகளில் இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் அந்த பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்று கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வித் தகவல் மேலாண்மை இணையத்தில் அந்த மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதிலிருந்து மாணவர்களின் மாற்றுச் சான்றை கேட்கும் போது பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும்.

அனைவரும் கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி  வழங்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்று இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும். மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்.கல்வி மேலாண்மை தகவல் முகமையில் அந்த எண்ணை பயன்படுத்தி  பெற்றுக் கொள்ள  முடியும். தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச் சான்றிதழைஅனுப்ப அந்த பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ம்  வகுப்பு வரையில் மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும் தேவையில்லை. இவ்வாறு ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறும்  மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்களின் மாற்றுச்  சான்றிதழை அனுப்ப அந்த       பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே அரசுப் பள்ளியில் 8ம்  வகுப்பு வரையில்  மாணவர்களை சேர்க்க மாற்றுச் சான்று ஏதும் தேவையில்லை.



TC தயார் செய்து வழங்க வேண்டியது ஆசிரியர்களா? அலுவலகப் பணியாளர்களா? - யாருடைய பொறுப்பு? - CM Cell Reply...

 மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தயார் செய்து வழங்க வேண்டியது ஆசிரியர்களா? அலுவலகப் பணியாளர்களா? - யாருடைய பொறுப்பு? - CM Cell Reply...



மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து மாணவரின் விபரங்களை Common Pool பகுதிக்கு அனுப்பப்பட்ட பிறகு மாணவரது பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தந்தை/ தாய் பெயர், பாலினம் போன்ற விவரங்களில் திருத்தம் செய்வது எவ்வாறு? EMIS _ FAQ...


 EMIS _ FAQ 


1. மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து மாணவரின் விபரங்களை Common Pool பகுதிக்கு அனுப்பப்பட்ட பிறகு மாணவரது பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தந்தை/ தாய் பெயர், பாலினம் போன்ற விவரங்களில் திருத்தம் செய்வது எவ்வாறு?


👉🏻Students → students admission வாயிலாக சார்ந்த மாணவரை மீண்டும் பள்ளியில் admit செய்திட வேண்டும். அவ்வாறு செய்தபின் students → students TC details வாயிலாக அனைத்து விபரங்களையும் சரிபார்த்து திருத்தங்களை  செய்து கொள்ளலாம்.


----------------------------------------

2. மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தயாரிக்கும்போது மாணவரின் புகைப்படத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய தேவை இருந்தால் எவ்வாறு மேற்கொள்வது?


👉🏻மாணவர்களின் புகைப்படத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள students → students listல் சார்ந்த மாணவரது profileல் ஏற்கனவே உள்ள புகைப்படத்திற்கு பதிலாக தற்போது சரியான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து update செய்திட வேண்டும். (Students TC details module வாயிலாகவே மாணவரின் புகைப்படங்களை திருத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்)


----------------------------------------


3. மாணவனின் மாற்றுச் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க காரணம் என்பதில் திருத்தம் மேற்கொள்வது எவ்வாறு?


👉🏻 ஒரு மாணவனின் மாற்றுச்சான்றிதழ் தயார் செய்தபின் மாணவனை common pool பகுதிக்கு அனுப்பும்போது, எந்த காரணத்தை தேர்வு செய்கிறீர்களோ அதுவே மாணவனின் மாற்றுச் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க காரணமாக பதிவு செய்யப்படும். அவ்வாறு தாங்கள் தேர்வு செய்த காரணம் தவறுதலாக தேர்வு செய்யப்பட்டு இருப்பின், திருத்தம் செய்ய past students listல் பெயருக்கு எதிரே உள்ள "->" என்பதை கிளிக்  செய்து மீண்டும் சரியான காரணத்தை தேர்வு செய்வதன் மூலம் மாற்றம் செய்துகொள்ளலாம்.


EMIS Update(TC) – Mobile மூலமாக செய்வதை தவிர்க்கவும்...

 


EMIS Update(TC) – Mobile மூலமாக செய்வதை தவிர்க்கவும்...


தலைமை ஆசிரியர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்,


EMIS இணையதளம் வாயிலாக மாணவர்களின் தேர்ச்சி (Promotion) மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி (TC Generate) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஆசிரியர்கள் மடிக்கணினி (Laptop) அல்லது மேசை கணினி (Desktop) மூலமாக மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் Mobile வழியாக இப்பணியை செய்யக்கூடாது. EMIS இணையதளத்திற்கு Mobile view உருவாக்கப்படவில்லை. மேலும், Mobile இல் தொடு வேகம் (Touch speed) அதிகமாக இருப்பதால் மாணவர்களது தகவல்கள் உள்ளீடு செய்யும் பொழுது தவறுகள் நேரிட வாய்ப்பு உள்ளது.



EMIS Online TC-ல் குறிப்பிட வேண்டிய கடைசி வேலை நாள் குறித்த தகவல்...



 EMIS Online TC-ல் குறிப்பிட வேண்டிய கடைசி வேலை நாள் குறித்த தகவல்...


🛑🛑🛑🛑🛑🛑🛑


Important information regarding Last Working Day on Students TC Generation.


As informed by DEE & DSE 


For Class 1 to 8 -  30.04.2021


For Class 9 to 12 - 24.04.2021


Kindly communicate all HM's and officials.


- State EMIS Team

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...