கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-08-2024...

  

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-08-2024  - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம் : காலம் அறிதல்

குறள் எண்489

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

பொருள் : கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும்.


பழமொழி :


Better an open enemy than a false friend

போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்


இரண்டொழுக்க பண்புகள் : 

*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .    

*எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.


பொன்மொழி :

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். –ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்


பொது அறிவு :

1. முட்டையில் உள்ள செல்களின் எண்ணிக்கை

விடை: ஒரு ஹேப்பிளாய்டு செல்( one haploid cell)

2. தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனம் அமைந்துள்ள இடம்

விடை: டெல்லி


English words & meanings :

bang-இடி,

tinkle-மணியின் ஒலி



வேளாண்மையும் வாழ்வும் :

சைமன்ஸ் மழைமானி (Symon's Rain Gauge)

அமைப்பு

ஓரிடத்தில் பெய்கின்ற அப்போதைய மழையின் அளவினை அளப்பதற்கு சைமன்ஸ் மழைமானி பயன்படுகின்றது. திறந்த வெளியில் நிலமட்டத்திற்கு மேலே 30 செ.மீ., உயரத்தில், நீளம், அகலம், உயரம் முதலியவை 60 செ.மீ. இருக்குமாறு கான்கிரிட் தளம் அமைக்கப்பட்டிருக்கும். கான்கிரீட் தளத்தின் மையத்தில் கண்ணாடி ஜாடியும் அதனுள் ஒரு புனலும் ஒரு சிலிண்டர் அமைப்பினுள் வைக்கப்பட்டிருக்கும். புனலின் அகன்ற பகுதி சிலிண்டரின் மேல் பகுதியில் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த புனலின் அகன்ற வாய்ப்பகுதியின் பரப்பளவு 200 ச.செ.மீ ஆகும்.


செயல்படும் விதம்

மழை பெய்யும் பொழுது புனலில் விழுகின்ற நீர் மழைமானியில் உள்ள ஜாடியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது 200 ச.செ.மீ பரப்பளவில் விழுகின்ற மழைநீர் ஜாடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அளவு ஜாடியைப் பயன்படுத்தி இதன் கன அளவு கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து மழையின் மூலம் நிலம் பெற்ற நீரின் அளவையும் கண்டறியலாம்.



ஆகஸ்ட் 23

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம்  குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



நீதிக்கதை

சக்கரம் தாங்கி

ஒருநாள் நான்கு சீடர்கள் காட்டு வழியாக ஒன்றாக பயணம் செய்து  ஆசிரமத்திற்கு சென்றார்கள். சுவாமி பைரவா நந்தா அந்த நான்கு சீடர்களிடம் கேட்டார், “நீங்கள் யார் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள்?”.  அதற்கு அந்த சீடர்கள் சொன்னார்கள், “சுவாமி, உங்களுடைய அதிசய சக்தி பற்றி நாங்கள் கேள்வி பட்டு இருக்கிறோம். உங்களை பார்த்த நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறோம்”.

“நாங்கள், உங்களுடைய சீடர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவை” என்றனர். அதைக்கேட்ட சுவாமி பைரவா நந்தா அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அவர் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று நான்கு மண் வாரி எடுத்துக் கொண்டு வந்தார்.

அந்த நான்கு மண்  வாரியை சீடர்களுக்குக் கொடுத்து சொன்னார், “கிராமத்திற்கு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது, அந்த குளத்தின் கரையில் ஒரு பெரிய மரம் உள்ளது அந்த மரத்தின்  அருகே உள்ள செம்மண்ணை இந்த மண்வாரி வைத்து தோண்டுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா என்று பார்க்கலாம்“ என்றார்.

அந்த நான்கு சீடர்களும் மண் வாரியை எடுத்துக்கொண்டு குளத்திற்கு அருகில் உள்ள செம்மண்ணை தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு சீடர் அங்கே  தோண்டிய இடத்தில்செம்பு இருப்பதை பார்த்து ஆச்சரியம் உற்றார். அவர் மற்ற சீடர்களிடம் சொன்னார் “நமக்கு நிறைய செம்பு கிடைத்துள்ளது. நாம் இதை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக்கொள்ளலாம்”

என்றார். ஆனால்,  மற்றொரு சீடர் சொன்னார், “நாம் இங்கே தங்கத்தை தேடி தான் வந்துள்ளோம். அதனால் நீ வேண்டுமென்றால் இதை எடுத்துக் கொண்டு செல் “.

அந்த செம்பை கண்டுபிடித்த முதல் நபர் அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். மற்ற மூன்று பேரும் திரும்ப தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது மற்றொரு சீடருக்கு வெள்ளி கிடைத்தது. அவர் சந்தோஷத்தில், “ஐயோ கடவுளே! நான் மிகவும் அதிர்ஷ்டம் உள்ளவன் எனக்கு  வெள்ளி கிடைத்துள்ளது, என்று சொல்லிக்கொண்டு மற்ற இரண்டு பேரிடம் நாம் இந்த வெள்ளியை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக் கொள்ளலாம் வாங்க” என்றார்.

ஆனால் மற்ற இருவரும் தங்கம் qகிடைக்கும் வரை  தோண்டி பார்க்கலாம், நீ வேண்டும்  என்றால் அந்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு செல் என்றனர். அந்த இரண்டாவது சீடரும் கிடைத்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக சென்றார். மற்ற இரண்டு சீடர்களும் மீண்டும் மண் வாரி எடுத்து தோண்ட ஆரம்பித்தார்கள்.

அப்போது மூன்றாவது சீடர் அங்கே தங்கம் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அவர் மற்ற சீடரிடம் நாம் இந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு இங்கிருந்து செல்லலாம் என்றார். ஆனால் அவரோ, “இல்லை இங்கே  செம்பு, வெள்ளி, மற்றும் தங்கம் கிடைத்துள்ளது, எனவே இன்னும் தோண்டினால் வைரம் கிடைக்கும்” என்று சொன்னார்.

தங்கம் கிடைத்த சீடர் அந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். அந்த நான்காவது சீடர் மண்வாரி எடுத்து மீண்டும் தோண்ட ஆரம்பித்தார். தோண்டிக் கொண்டே இருக்கும்போது ஒரு பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டு அந்த ஓட்டைக்குள் அவர் கீழே போய் விழுந்தார். அந்த நான்காவது சீடர் எழும்பி பார்த்தபோது அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் தலையில் ஒரு  சக்கரம் சுற்றிக் கொண்டே இருந்தது. அதை பார்த்த இந்த சீடர் கேட்டார், “நீங்கள் யார்? அந்த சக்கரம் ஏன் உங்கள் தலையில் சுற்றிக் கொண்டு உள்ளது?” என்றார்.

அப்படி கேட்டவுடனே அந்த சக்கரம் இந்த சீடர் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. பேராசை பிடித்த அனைவரும் கடைசியில் இங்கே தான் வருவார்கள். பேராசையால், வைரத்திற்கு ஆசைப்பட்டு, இந்த குழியில் வந்து விழுந்தேன். அந்த சக்கரம் என் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. இனி ஏதாவது ஒரு பேராசை பிடித்தவன் வந்து  இங்கே விழும்போது போது அந்த சக்கரம் உன்னை விட்டு அகன்று விடும்”, என்று கூறிக்கொண்டு அந்த சீடர் வந்த ஓட்டை வழியாக  இந்த மனிதன் மேலே சென்றார்.

நீதி: பேராசை பெரும் நஷ்டம்.



இன்றைய செய்திகள்

23.08.2024

* 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் விலக்கு: தமிழக அரசு ஆணை பிறப்பிப்பு.

* ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை இனி காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும்: தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்.

* மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களையும் தமிழக அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது.

* பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் அனுப்பிய 11 ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா.

* சென்னையில்  டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகள் தொடங்கியது.

* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு.

* இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பி.சி.சி.ஐ.


Today's Headlines

* Exemption from re-writing departmental exam for differently abled government employees those who have crossed 50 years : Tamil Nadu Govt issued order.

* The payment should be paid only by cheque or DD if the Electricity bill exceeds more  than 5000/-


Tamil Nadu Electricity Board Informed.

*Tamil Nadu Chief Minister M. K. Stalin ordered to nationalize all the books of the late former Chief Minister Karunanidhi without any royalty.

* The 2nd indigenously built 700 MW nuclear reactor started production at full capacity yesterday.

* The Union Home Ministry announced that applications for the Padma Awards 2025 can be submitted till September 15.

* Russia shoots down 11 drones sent by Ukraine to attack Moscow

* Table Tennis League starts in Chennai.

* The Odisha State Government felicitated the Indian hockey team who won the bronze medal in the Paris Olympics.

* BCCI released the schedule for 5 Test matches against England.


Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...