ஏதும் தெரியாத முதல் தலைமுறை - இயக்கங்களை போராடாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல் தலைமுறை - AIFETO அறிக்கை...
*AIFETO..04.08.2024..*
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*
*பல தலைமுறை அனுபவங்களை பெற்றுள்ள நாம்... முதல் தலைமுறை இவருக்கு முன்னவர்களும் இல்லை!.. ஆலோசனை சொல்ல பின்னவர்களும் இல்லை!.. இவருக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இருப்பினும் பொதுவானவர்களுக்காக நமது கருத்தினை பதிவு செய்கிறோம்.*
*(எப்படி தினுசு தினுசாக யோசிக்கிறார்களோ?.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.*
*அந்தப் பழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களுக்கு அந்தப் பழக்கம் தான் வரும். அதில் ஒன்றும் வியப்பேதும் இல்லை.*
*அரசாணை 243, நாள் 21.12.2023 அன்று வெளிவந்த போதே பாதகமான அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் உறுதியான கோரிக்கையாகும்.*
*டிட்டோஜாக்கின் கொள்கை முடிவும் அதுதான். தமிழக ஆசிரியர் கூட்டணியின் கொள்கை முடிவும் அதுதான். ஆனால் தொடர்ந்து வெளிவரும் ஐபெட்டோவின் புலனப் பதிவுகள் அனைத்தும் அரசாணை 243 ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையேல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். என்றுதான் எழுதி வந்திருக்கிறோம். காரணம் நீதிமன்றத் தீர்ப்பினால் வெளிவந்த அரசாணையாகும். அதை ரத்து செய்வதற்கு பல சங்கடங்கள் இருக்கிறது. ஆனால் தேவையான திருத்தங்களை வெளியிட வேண்டும்.*
*ஆனால் இவர்கள் நினைக்கிற திருத்தங்கள் அல்ல; ஒன்றிய அளவில்தான் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். முன்னுரிமைப்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். தலைமையாசிரியர்கள் மாறுதலைப் பொறுத்தவரையில் முற்றிலும் நிபந்தனைக்கு உட்பட்டு கல்வி மாவட்டத்திற்குள்ளாக மாறுதல் இருக்கலாம். பதவி உயர்வு ஒன்றிய முன்னுரிமை அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.*
*இவர்கள் நினைக்கும் திருத்தங்களை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!. அரசாணை 243 பாதுகாப்பு இயக்கம் ஆசிரியர்களின் பாதுகாப்பு இயக்கம் அல்ல; உண்மை நிலைமையினை அந்த பாதுகாப்பு இயக்கத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள் ஒருநாள் உணரத்தான் போகிறார்கள்.*
*1985 ஜாக்டீ போராட்டத்தை முன்நின்று நடத்தி சிறைக்குச் சென்றவன். 1988 ஜாக்டீ ஜியோ போராட்டத்தில் மேடையில் பேசியில் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டவன். 2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் நடு இரவில் கைது செய்யப்பட்டு புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவன். எட்டு மாத காலம் நிரந்தர பணி நீக்கத்தில் இருந்தவன்.*
*பள்ளிப் பருவம் தொடங்கிய போதே திராவிட முன்னேற்றக் கழக உணர்வில் இரண்டறக் கலந்தவன். பல சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குவதில் என்னுடைய சிறு பங்களிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. பொது நன்மைகளை தலைவர் கலைஞர் அவர்களிடமும், இனமான பேராசிரியர் அவர்களிடமும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடமும் சாதித்து இருப்பேனே தவிர; எனக்காக என் சொந்த நலனுக்காக யாரிடமும் எதையும் கேட்காதவன். 51 ஆண்டுகால எனது பொது வாழ்க்கையில் முற்றிலும் ஆசிரியர்களின் நலனை முன்னிறுத்திதான் வாழ்ந்து வருகிறேன்.*
*சங்க வித்தியாசம் பார்ப்பதில்லை. பொதுவாக ஆசிரியர்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது என்றால் நான் உணர்வு பூர்வமாக நேசித்து வரும் அரசியல் கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்.. நாம் சார்ந்த ஆசிரியர் சமுதாயத்திற்கு மட்டும் தான் இன்றுவரை முழு நேரமாக அர்ப்பணித்து தொண்டாற்றி வருகிறேன். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அகவிலைப்படியை நிறுத்தியபோது சென்னையில் நடத்திய போராட்டத்தில் சிறைக்குச் சென்று வந்தவன்.*
*பள்ளிக்கல்வித்துறையைப் தவிர வேறு துறைகளைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லா துறைகளிலும் சென்று பழக்கத்தை வைத்துக்கொண்டு ஏதாவது நன்மையை அடைய வேண்டிய எண்ணம் அன்று தொட்டு இன்றுவரை நமக்கு இருந்ததில்லை.*
*கொள்கை வழி நிற்பவர்கள் கொள்கை சீமான்கள்!..*
*வணிக நோக்கத்தோடு செயல்படுபவர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்!..*
*கொள்கையில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது!.*
*கடைசி மூச்சு இருக்கும் வரை ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் என்னால் திணையளவேனும் நன்மை கிடைக்குமென்றால் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?.. என்ற பாரதிதாசன் பாடல்வரிகளை கொள்கையாக ஏற்றுக் கொண்டவன். விமர்சனங்களை பற்றி கவலை இல்லை.*
*ஆட்சி வித்தியாசம் பார்க்காமல் நிர்வாகம் மாறுதல்களை பெறுவதில் முனைப்பு காட்டுகிற இயக்கமும் எங்கள் இயக்கமல்ல;*
*எந்த ஆட்சிக் காலத்திலும் நிர்வாக மாறுதல் கேட்டு படிக்கட்டு ஏறாத இயக்கமும் எங்கள் சங்கம்தான் !.*
*நிர்வாக மாறுதல்களை அவ்வப்போது கண்டித்து அறிக்கை வெளியிடுகிற இயக்கம் ஐபெட்டோ இயக்கம் தான்!..*
*38 ஆண்டுகால என்னுடைய ஆசிரியர் பணி சைக்கிளில் தொடங்கி... சைக்கிளில் தான் நிறைவு பெற்றது. இன்று வரை எனக்கு Two Wheeler ஓட்டவும் தெரியது. சொந்தமாக Two wheelerம் இல்லை.. என்ற வாழ்க்கைக்கு உரியவன்... இந்த புலனப்பதிவு பதிவிடுகிற வரையில் இருப்பிடத்திற்கு நகரப் பேருந்திலும், அரசுப் பேருந்திலும் தான் சென்றுவரும் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.*
*வீதிக்கு வந்த டிட்டோஜாக் போராட்டம் கோரிக்கைகளை வென்றெடுக்கும்வரை தொடர்ந்து களத்தில் நிற்பார்கள்!..*
*பொதுத்தேர்தல் வரையில் களத்தில் நின்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும் போர்க்குணத்தோடு நின்று வெற்றி பெறுவார்கள்!.. இது டிட்டோஜாக் எடுத்துக் கொண்ட உறுதிமொழியாகும்!..*
*எஞ்சிய என் வாழ்நாளையும் ஆசிரியர் சமுதாய நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்வேன்!...*
*வசவாளர் வாழ்க!...*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*