கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Federation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Federation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Is Tamilnadu government a government in favour of teachers - government employees - pensioners - workers? Or negative government? - Teacher's Federation Questioned


தமிழ்நாடு அரசு, ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - ஓய்வூதியர்கள் -  தொழிலாளர்களின் சாதக அரசா? அல்லது பாதக அரசா? - ஆசிரியர் கூட்டணி கேள்வி


 *மத்திய அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள்- ஓய்வூதியர்கள்-  தொழிலாளர்களின் விரோத அரசு என்றால்.....*


*AIFETO...19.11.2024*


*தமிழக ஆசிரியர் கூட்டணி*

*அரசு அறிந்தேற்பு எண் :36/2001*


 *தமிழ்நாடு அரசு சாதக அரசா? அல்லது பாதக அரசா? மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்யவில்லை!சொல்லாததையும் செய்யவில்லை! இதை அறியாதவர் எவரும் இல்லை!*


 *தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா?ஆளுங்கட்சி- எதிர்க்கட்சிகளின் அறிக்கைப் போரில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மனம் மகிழும் வண்ணம் அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் வெளியிட உள்ளார் என திமுக அரசு தரப்பில் செய்திகள் வெளிவந்தது? தெரியுமா?*


 *அரசை நடத்துவது முதலமைச்சர் தலைமையில் உள்ள அமைச்சரவையா?தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள நிதித்துறை முதன்மைச் செயலாளரா?*


 *ஓய்வூதியர்களின் குறைகளை கேட்பதற்காக பிரிக்கப்பட்ட துறை மீண்டும் இணைக்கப்பட்டது. பணி ஓய்வு பெறும் பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்கள் குறைகளை அளிக்கவும் அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் 1994 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதித்துறையில் இருந்து தனியாகப் பிரித்து ஓய்வூதியர் இயக்குனரகத்தை உருவாக்கினார்கள்....*

 *இந்த இயக்ககத்தின் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 88 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு முறைப்படி இயங்கி வந்தது. மறு சீரமைப்பு என்ற முன்மொழிவை ஏற்று பென்ஷன் இயக்குனரகம் அரசு தகவல் தொகுப்புமையம், சிறுசேமிப்புத் துறை மூடப்பட்டது என்பதற்கு பதிலாக கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டது என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்புத் துறையினை மாவட்ட ஆட்சியாளர்களாலும் சென்னையில் மாநகராட்சி ஆணையராலும் நிர்வகிக்கப்படும். வெளிவந்துள்ள  அரசாணையின்எண் : G. O (ms)No.343 நாள்: 12. 11. 2024 Finance  (Treasuries and Accounts-III Department ).*

 

 *புதிய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் 2003 ஏப்ரல் மாதம் முதல் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றுவரையில் 6.14 லட்சம் பேர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காலத்தில் விடியல் அரசில் விடிவு வராதா என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்...*


 *ஓய்வூதியர் இயக்குனரகமே கலைக்கப்பட்டதற்கு அடையாளம் - வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை நிதித்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரியுமா?முதலமைச்சர் நினைப்பதையெல்லாம் செய்து முடிக்கிற மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கு தெரியாமலா இந்த அரசாணை வெளிவந்துள்ளது இவர்களின் முழு நம்பிக்கைகுரியவர் அரசின் சாதனைகளின் அடையாள முகவரி நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தான் என்பது நாட்டுக்கும் தெரியும்... மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் நமது வேதனை உணர்வில் பங்கேற்பவராக இருப்பார் என்பதுடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பவராகவும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உணர்வில் பயணத்தினை தொடர்வோம்.*


 *இனி பழைய ஓய்வூதியத்திட்டம் தமிழ்நாட்டில்* *அமல்படுத்துவதற்கு வாய்ப்பிருக்குமா என்ற ஐயம் எண்ண அலைகளாக பீறிட்டு* *வெளிவருவதைக் காண முடிகிறது* .


 *முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர்  அவர்கள் காலத்தில் சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியின் கருவூலத்திலும் சேதாரம் ஏற்படுவதற்கு அனுமதிக்கலாமா?*

 *முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் பெற்றெடுத்த தவப்புதல்வன் மாண்புமிகு மு. க. ஸ்டாலின்* *அவர்களின் அரசு பாதுகாக்க வேண்டாமா?* 

 *50 தொகுதிகளை நிர்ணயிக்கின்ற* *வாக்கு வங்கியினை  பாதுகாத்திட* *வேண்டுகிறோம்* !

 *பாதுகாத்திட* *வேண்டுகிறோம்* !!


 *மத்திய அரசு கொண்டுவந்த CPS திட்டத்தில் அரசின் பங்குத் தொகை 14%, நியமனதாரரின் பங்களிப்பு 10% இரண்டையும் சேர்த்து ஓய்வு பெற்றால் ஒரு* *தொகையினை ஓய்வூதியமாக வழங்கி வருகிறார்கள். பணிக்காலத்தில் இறந்து போனால் ஒரு தொகையினை பணிக்கொடையாக வழங்கி வருகிறார்கள்..*



     *ஆனால் தமிழ்நாட்டில் அரசின் பங்குத்தொகை 10% ஊழியர்களின் பங்குத்தொகை 10% என பணிக்காலத்தில் சேர்த்து வைத்த தொகையினை பணிநிறைவு பெறும்போது சிரமப்பட்டு பெறவேண்டியதாக உள்ளது* .


 *மத்திய அரசு கொண்டுவந்துள்ள UPS திட்டம் அரசின் பங்குத் தொகை 18%  25* *ஆண்டுகளுக்குப் பிறகு  50% ஓய்வூதியம் தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.* *நம்மைப் பொறுத்தவரை* 

 *CPS- ம் வேண்டாம்.....* 

 *UPS- ம் வேண்டாம்....* 

 *OPS மட்டுமே* *அமல்படுத்தப்பட வேண்டும்* . *நம்பிக்கை* *வளரட்டும்!* 

*தேர்தல் நெருங்கி வரும் நாளில் வாக்குவங்கியின் பலத்தினை அரசிற்கு உணர வைப்போம்!*

*வென்று காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன்....*


 *அரசின் மீது அக்கறை* *கொண்டுள்ள இயக்கத்தின் மூத்த தலைவர்*

*வா. அண்ணாமலை*

 *அகில இந்தியச் செயலாளர்* *(ஐபெட்டோ* )*

( *ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)* 

 *அலைபேசி :-9444212060* 

 *மின்னஞ்சல் :annamalaiaifeto@gmail.com*

 *தமிழக ஆசிரியர் கூட்டணி* 

 *ஆர்வலர் மாளிகை* 

 *52, நல்லதம்பி தெரு* 

 *திருவல்லிக்கேணி* 

 *சென்னை -600005*


Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned


முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் 


Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned


 முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் உதகை பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது. கண்டனத்துக்குரியது.

@@@@@@@@@@@@@@@@

*AIFETO   15.11.2024.*

*தமிழக ஆசிரியர் கூட்டணி

 அரசு அறிந்தேற்பு எண்:-

  36/2001.*

@@@@@@@@@@@@@@@@


முறைசாரா கல்வி இணை இயக்குனர் திரு.பொன். குமார் அவர்கள் உதகையில் 14.11.2024 மாலையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு சுமார் இரண்டு மணி நேரம் கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி ஆசிரியர்களை ஒருமையில்  பேசியுள்ளார். 


அவர் படித்தது, இளமைப் பருவம் , அவருடைய குடும்ப வரலாற்றினை தன்னையும் அறியாமல் தற்புகழ்ச்சியாக நீண்ட நேரம் பேசி இருக்கிறார். ஆசிரியர்களிடம் பொது அறிவு வினாடி வினா கேட்பது போல சம்பந்தமில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு சங்கடபடுத்தி இருக்கிறார். நாட்டுப்புற கதைகள் சிலவற்றை சம்பந்தமில்லாமல் கூறியிருக்கிறார். சில BEO க்களை  கூப்பிட்டு உங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்கள் எவரேனும் இங்கு இருந்தால் அவர்களிடம்  நான்கு கேள்விகளை கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். 


ஒர் ஆசிரியை அழைத்து நீங்கள் சில கேள்விகளை இங்கு உள்ள ஆசிரியர்களிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்களை பெருமைப்படுத்த வேண்டியவர் ஆசிரியர்களை வசைபாடி இருக்கிறார். ஒருமையில் பேசுவது ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல. அதே ஒருமையில் ஆசிரியர்கள் இணை இயக்குநரிடம் பேசி இருக்க வேண்டும். ஆசிரியர்களுடைய தலைமைப் பண்பு அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. 


இனிவரும் கூட்டங்களில் அவர் தரைக்குறைவாக பேசினால் அதே பாணியில் வேகமாக பதில்கள்  போய் சேரும். தமிழ்நாடு அரசு  அதிகாரப் பதவிகள் எதுவும் இவருக்கு ஒதுக்காமல் உள்ளது இதுதான் காரணம் என்று தெரிகிறது. அதேபோல மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களுக்கு இவரை அனுப்பாமல் தவிர்த்து வருகின்ற உண்மையும் நமக்கு தெளிவாக தெரிகின்றது. 


ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மாவட்டங்களில் பல பள்ளிக் கட்டிடங்கள் கட்டி அவற்றிற்கு டைல்ஸும் பதித்து  கொடுத்திருக்கிறார். இரண்டு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட மாவட்ட அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டி கொடுத்திருக்கிறார். அதை எல்லாம் ஆசிரியர்கள் பாராட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த மாவட்டத்திற்கு இவர் சென்றாலும் பிரச்சனைகள் இல்லாமல் வந்ததில்லை. 


இனி இவர் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல்  தவிர்த்து அவர் மரியாதையை அவரே காப்பாற்றிக் கொள்ள 'நா' காக்க வேண்டும். 


ஒரு மூத்த இயக்க தலைவர்.


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election - A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Secretariat Staff Association report



தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு அறிக்கை மட்டும் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அது குறித்த கொள்கை முடிவினை, தெளிவான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிக்கை


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election. A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Chief Secretariat Staff Association report



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Immediate implementation of Old Pension Scheme - TNPGTA


---------------------------------------

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - TNPGTA மாநிலக் கழகத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கண்டன அறிக்கை மற்றும் பத்திரிக்கை செய்தி -10.11.24

--------------------------------------


*பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் சார்ந்து ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசு ஆனது நிதிசாராத கோரிக்கைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்  என்ற அடிப்படையில் வெளிவந்திருக்கும் செய்தி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார சமூக பாதுகாப்பான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு எதிரான முடிவாக இருப்பதால் ஆட்சி பொறுப்பிற்கு வந்து மூன்றரை  ஆண்டு காலத்திற்கு மேலாக  தருவோம் தருவோம் என்று நம்பிக்கை அளித்து ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றிய அரசாக இருப்பதை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஏற்க இயலாது. தமிழக அரசுக்கு TNPGTA பேரியக்கத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.*


எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தேர்தல் அறிக்கை 309 ல் வெளியிட்டு விட்டு, தற்போது அதற்கு மாறான நிதிசாராத கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறுவது என்பது நம்பிக்கை மோசடியாக பார்க்கிறோம்.


*அறிஞர் அண்ணா காலத்திலிருந்து வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குவதாக அறிவித்துவிட்டு, மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகையை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக கொடுக்கிறோம் என்று அறிவித்துவிட்டு தற்போது அரசின் சக்கரங்களாக விளங்கும் அடி நாதமாக விளங்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களை ஏமாற்றும் விதமாக, தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக -"நாங்கள் செய்யாமல் யார் செய்வார்கள்"* என்று சொல்லிக்கொண்டே தள்ளி தள்ளி போட்டுக்கொண்டு அடுத்த கட்ட தேர்தல் வேலைக்கு தயாராகி விட்டது தமிழகஅரசு.

அடுத்த கட்ட அரசு அமைப்பதற்கு தேர்தல் அறிக்கைக்கு தேர்தல் பணிக்கு குழு அமைத்திட  தொடங்கிவிட்டது.  


*20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தின் மீது எந்தவிதமான உறுதியான முடிவினை அறிவிக்காமல், இழுத்தடிப்பு செய்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோபங்களை தணிக்கும் செயலாக மாற்றி போராட்டவேகத்தை குறைப்பது என்பது தொடர்கதையாக இருக்கிறது.*


 அதிமுக அரசு அதன் தொடர்ச்சியாக திமுக அரசு என  மாறி மாறி  நம்மை ஆட்சி புரிந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்களை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்ல.. தொடர்ந்து வாய்ஜாலமாக பேசி ஏமாற்ற நினைத்தால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்..


*கடந்த அதிமுக அரசானது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எதிராக பேசியதும், தற்போதைய அரசு நம்பிக்கை அளித்து இழுத்தடிப்பு செய்யும் துரோகத்தையும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..*


 *பென்ஷன் என்ற வார்த்தையை உச்சரிக்காத ஒன்றிய அரசு கூட பழைய ஓய்வூதிய திட்டம் என்ற முறையான திட்டத்தை அறிவிக்காவிட்டாலும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்ற ஏற்கனவே இருந்த நிலைக்கு ஒரு நிலை முன்னோட்டமாக அறிவிப்பு எடுத்திருக்கும் நிலையில், தமிழக அரசானது எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் தமிழக ஆசிரியர் அரசு ஊழியரிடம் இருந்து ஓய்வூதிய திட்டத்திற்காக பிடிக்கப்பட்ட பணத்தையும் PFRDA லும் சேர்த்திடாமலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பதற்கு எந்த தடையும் இல்லாத நிலையிலும், பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராடாத பல மாநிலங்களில் கூட பழைய ஓய்வூதிய திட்டம்  அமல்படுத்தியிருக்கப்பட்டிருக்கும் வேளையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக, இருபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்த நிலையில் அதையெல்லாம் நாங்கள் புரிந்துள்ளோம் நடைமுறைப்படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு தற்போது ஏமாற்றும் துரோக வேலையை மறைமுகமாக இழுத்தடிப்பு மூலம் தமிழக அரசு ஆனது தமிழக மண்ணில் அரங்கேற்றி வருவதை ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.*


கார்ப்பரேட் நலன்களுக்காகவும் பெரும் முதலாளி நலன்களுக்காகவும் செயல்படும் அரசாக அமைந்து தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுக்கும் அரசாக இருக்கும் என்றால் தொழிலாளர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை..


*தமிழக மண்ணில் தீவிரமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறும்.. அப்படிப்பட்ட தீவிரமான போராட்டம் நடைபெறுவதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முழு முயற்சியும் முன்னெடுப்பும் எடுக்கும்..*


*அரசுக்கு ஆதரவாக ஜால்ரா அடிக்கும், நன்றிகளை மட்டும் தெரிவித்துக் கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை  அம்பல படுத்துவோம்..*

*உண்மையான போராட்ட குணம் கொண்ட ஜாக்டோ ஜியோவாக புனரமைக்கப்பட்டு வீரஞ்செறிந்த போராட்டங்களை அறிவிப்பு செய்து போராட்டத்தின் மூலம் கோரிக்கைகளை வெல்வதற்கு திட்டமிடல் செய்வோம்.*


அதேபோன்று *இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவிற்கு  கண்டனங்களும், அதே வேளையில் கோரிக்கை அறிவிப்பு மாநாடாக டிசம்பர் 15ஆம் தேதி தமிழக அரசு ஆனது சிபிஎஸ்  ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி போராட்ட அறிவிப்பு செய்வது என்று முடிவாக்கப்பட்டுள்ளது.*

*தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக போராட்ட குணம் உள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்புகளை வலுப்படுத்தி தீவிரமான போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டம் ஊதிய முரண்பாடு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவிக்காமல் வருகின்ற தேர்தலில் வெல்ல முடியாது என்கின்ற நிலைக்கு தமிழக மண்ணில் போராட்டம் கட்டி எழுப்பப்படும் என்ற செய்தியை TNPGTA பேரியக்கத்தின் மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்திக்கொள்கின்றோம்..*


*ஒன்றுபடுவோம்..* *போராடுவோம்..*

 *வெற்றி பெறுவோம்..*

*இறுதி வெற்றி நமதே.!*

நன்றி 


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


மாநில கழகத்தின் சார்பாக...

*பொ. அன்பழகன்* 

மாநில பொதுச் செயலாளர்

*TNPGTA*


The news that the Financial demands including the old pension scheme are unlikely to be met - Teachers' Anxiety - Teachers' Fedaration Reaction


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று வெளியான செய்தி - ஆசிரியர்களின் ஆதங்கம் - ஆசிரியர் கூட்டணியின் பதிவு


The news that the Financial demands including the old pension scheme are unlikely to be met - Teachers' Anxiety - Teachers' Fedaration Reaction 


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வினை மேற்கொண்டாரா? இல்லையா?*


*AIFETO.*

*நாள்: 08.11.2024.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*


*08.11.2024 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறையினை ஆய்வு செய்து  சில கோரிக்கைகளை அறிவிக்க இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி வலுவாகவே பரப்பப்பட்டு வந்தது நடைபெற்றது என்ன..?*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இன்று காணொளி மூலமாக திறந்து வைத்தார்கள். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர்களும் கலந்து கொண்டு இருப்பார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தபோது முதலமைச்சர் அவர்கள் சில கோரிக்கைகளை அறிவித்தார்களா என்று கேட்டபோது நிதி சார்ந்த கோரிக்கைகளை தற்போது அறிவிப்பதில் சிரமம் இருப்பதாக தனியாக கேட்ட செய்தியாளரிடம் அறிவித்ததாக நமக்கு தகவல் வந்தது. சில ஊடகங்கள் அந்த தகவலையும் வெளியிட்டார்கள்.*


*உடன் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றவில்லை. அன்றாடம் சித்தரவதை எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சீற்றம் கொண்டு அனல் தெறிக்க பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.*


*உடனே ஒரு சிலர் அப்படி முதலமைச்சர் எதுவும் சொல்லவும் இல்லை; ஊடகங்களில் வந்து செய்தியையும் திரும்ப பெற்றுக் கொண்டு விட்டார்கள். நாம் நினைப்பதை கேட்பதை நமது ஆட்சி உறுதியாக செய்து முடிப்பார்கள் என்று குரல் கொடுக்கிறார்கள். அரசுக்கு ஆதரவான சங்கங்கள் அந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகின்றன .ஆனால் நம்மை நம்பி இருக்கின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முகங்களை பார்க்காமல் ஆள்பவர்களின் முகங்களை மட்டுமே பார்த்து அரசு வழக்கறிஞர்கள் போல பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த குறையும் அரசின் மீது சொல்லக்கூடாது என்று வாதாடுகிறவர்கள் இருக்கும் வரையில் எந்த கோரிக்கையும் நிறைவேறப் போவதில்லை.*


*நிதி சார்ந்த கோரிக்கைகள் மட்டுமல்ல நிதி சாராத கோரிக்கைகளும் நிறைவேற்றப் போவதில்லை.*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரையில் தன்னை சந்திப்பவர்களுடைய தலைமையில் தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் 21 லட்சம் வாக்குகளும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 1.75 லட்சம் வாக்குகளும் அணிவகுத்து நிற்கிறார்கள் என்ற நம்பிக்கையிலும் உறுதியாக நிற்கிறார்கள்.* 


*90 விழுக்காடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அவருடைய குடும்பத்தார் என அனைவரும் எதையும் செய்யாத அரசு அன்றாடம் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகள் மூலம் மன அழுத்தத்தினை ஏற்படுத்தி வரும் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலை அன்றாடம் பாடி வருகிறார்கள்.*


*2026 பொதுத் தேர்தல் வரை எதுவும் செய்யவில்லை என்றாலும் அடுத்த முறை ஆட்சி அமைப்பது நமது அரசு தான். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு பிறகு சொன்னதையும் செய்வார்கள் சொல்லாததையும் செய்வார்கள் என்று நம்மிடம் உறுதியளித்து பேசும் சங்கத் தலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.* 


*போராட்டங்களால் வெற்றி பெற்றது தான் சங்கத்தின் வரலாறு. போராடாமல் பார்த்துக் கொள்வதற்காக சங்கத் தலைவர்கள் இருப்பதை தமிழ்நாட்டின் வரலாற்றில் எங்களால் காண முடிகிறது.* 


*எங்களைப் போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழக கட்சி உணர்வில் ரத்த ஓட்டத்தில் இரண்டறக் கலந்து பயணம் செய்து வருபவர்கள். ஆனால் கட்சியா? சங்கமா? என்றால் நூறு விழுக்காடு சங்கத்தின் பக்கம் நின்று தான் எங்கள் பொது வாழ்வை நடத்தி வந்துள்ளோம்.* 


*நீண்ட கால எங்களுடைய பொது வாழ்வில் அரசியல் கூட்டணி கட்சிகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இதுவரை கைவிட்டதில்லை. எந்த சூழ்நிலையிலும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியினை இழக்கக்கூடாது என உறுதியாக இருந்தார்கள். பாதிக்கப் பட்டவர்கள் நாம் கரம் கோர்த்து நிற்போம். ஆட்சியின் தலைமை சுய பரிசோதனை செய்வதற்கு நம்முடைய உறுதிமிக்க உணர்வுகள் சான்றாக அமையட்டும்..! அமையட்டும்..!*



*வரவேற்க வேண்டியதை வரவேற்று என்றும் நன்றி பாராட்டுவார்கள் நாங்கள். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் பதிவு செய்து வருபவர்களும் நாங்கள் தான்..! என்றும் உள்ளதை உண்மையை உரக்கச் சொல்வோம்..!*


*ஆசிரியர் இயக்கங்களில் மூத்த தலைவர் இதயப் பற்றாளர்,*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


பயிற்சி அளிக்க ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


 எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக - பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதிமொழி என்ன ஆயிற்று? - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*


நாமக்கல்

24-10-2024



தொடக்கக்கல்வித்துறையில் நடைபெறும் நிகழ்வுகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் முதலமைச்சர் அவர்களும் உடனடி கவனம் செலுத்தி ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் மட்டும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*



எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை கைவிடுக !



பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த மாட்டோம் என்ற அமைச்சரின் உறுதி மொழி என்ன ஆயிற்று ?



ஒரே நேரத்தில் ஆசிரியர்களுக்கு 


கலைத் திருவிழா 

எண்ணும் எழுத்தும்

இணையதளப் பயிற்சி

எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி

வாசிப்பு இயக்கம் 

இணையதள பயிற்சி

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில், மன அழுத்தத்தில் பணியாற்ற வைப்பது ஏன்?


அதிகாரிகள் சிந்திப்பார்களா? 


அமைச்சர் தன் கவனத்தில் கொண்டு குறைகளை நீக்குவது எப்போது?


கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை எண்ணும் எழுத்தும் எனும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது


இத்திட்டத்திற்கு ஒவ்வொரு பருவத்திற்கும், பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன.


இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது டிடோஜாக் அமைப்பின் கோரிக்கையின் ஒன்றான பயிற்சிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.


இனிவரும் காலங்களில் பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டோம் என்றும் விருப்பமுள்ள ஒரு சில ஆசிரியர்களை மட்டும் பயன்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார்.


மேலும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களும், ஆசிரியர்கள் இனி பயிற்சிக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் போதுமான அளவுக்கு இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுவார்கள்.


போதுமான பயிற்சியாளர்கள் இல்லாதநிலை ஏற்படும் போது மட்டும் விருப்பமுள்ள ஆசிரியர்களை பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தனர்.


அதற்கு முற்றும் மாறாகவும் இனி இணைய வழியில் மட்டுமே பயிற்சிகள் என்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உறுதிமொழிக்கு மாறாகவும் தற்பொழுது கல்வித்துறை அதிகாரிகள் நேரடி பயிற்சி அளிப்பது மட்டுமல்லாது இணையதள பயிற்சியும் இணைந்து அளிக்கிறார்கள். 


நேரடி பயிற்சிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக முற்றிலும் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பயிற்சி கருத்தாளர்களாக ஆசிரியர்களே நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக இணையதள பயிற்சி கொடுத்த பின்பு நேரடி பயிற்சியை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.


பருவ விடுமுறைக்குப்பின் இரண்டாம் பருவம் இம் ( அக்டோபர்) மாதம் ஏழாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. 


இன்றோடு (24-10-24) ஏறக்குறைய 12 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக நடைபெற்றுள்ள நிலையில் இந்த 12 நாட்களுக்குள் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கல்விப் பணி அல்லாத பணியை செய்யக்கூடிய சூழ்நிலையை கல்வித்துறை உருவாக்கி உள்ளது.


இலவச பாடபுத்தகங்கள். இலவச நோட்டுகள், விலையில்லா புத்தகப் பைகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் இவற்றையெல்லாம் தினந்தோறும் பெற்று வந்து ஆசிரியர் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கி வந்தனர்.


அது மட்டுமல்ல 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கடந்த பருவத்தில் நடைபெற்ற பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளின் தொடர்ச்சியாக இந்த வாரம் குறுவளமைய அளவிலும் வட்டார அளவிலும் பின்பு மாவட்ட அளவிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இந்த 13 நாட்களில் பல நாட்களை கலைத்திருவிழாக்கள் கலந்துகொள்வதிலும், அதற்கான “பயிற்சியிலும் கற்றல் கற்பித்தல் நாட்கள் காவு கொண்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.


“இதே நாட்களில் தான் எண்ணும் எழுத்தும் இணையதள பயிற்சி 3 நாட்கள், வாசிப்பு இயக்க இணையதள பயிற்சி 2 நாட்கள் என குறிப்பிட்ட கால அளவுக்குள் பயிற்சிகள் முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு ஆசிரியர்கள் எந்நேரமும் அவர்களின் செல்போன் மூலம் இணையதளத்தில் இருக்கக்கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்.


தற்பொழுது இந்த வாரத்திலேயே எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி மட்டுமல்லாமல்...


25 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும்...


அதற்கான ஆயத்த பணிகளை, தொடர்ந்து இரண்டு நாட்களாக செய்ய வேண்டும் என்றும் தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.


இதனால் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடும் மன உளைச்சலிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.


பற்றாக்குறைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 25ஆம் தேதி சாரணர் இயக்க பயிற்சியும் அதுமட்டுமல்லாது வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மட்டும் "தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம்" பாடல் பாடும் போட்டி 1 முதல் 12 ஆம் வகுப்புக்குவரை எந்த வித பிரிவு நிலையும் அல்லாது, 


பள்ளி அளவில் 

குறுவளமைய அளவில், 

வட்டார அளவில் 

மாவட்ட அளவில் 


என இம்மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என அழுத்தம் தரப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்பது உண்மையே.


தொடர்ந்து கற்றல் கற்பித்தல் பணியை மட்டும் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் இது போன்ற பிற பணிகள் மற்றும் பயிற்சிகளாலும் கற்றல் கற்பித்தல் பணியை செய்ய முடியாமல், அரசுப் பள்ளியை நம்பி வந்த ஏழை எளிய மாணவர்களுக்கும் போதிய கற்றல் கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத நிலையினால், பெற்றோர்களிடமும் சமுதாயத்திலும் அரசு ஆசிரியர்கள் பெரும் அவப்பெயரை பெறும்வகையில் அதிகாரிகள் நடந்துகொள்வது வேதனையாகவும் கண்டிக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது.


அதுமட்டுமல்லாமல் இது அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன், அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் தகர்ப்பதாகவும் உள்ளது.


எனவே உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பள்ளிக் கல்வித்துறையின் மீது உடனடியாக கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகள் மட்டும் வழங்கிடவும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சியை ரத்துசெய்து, டிட்டோஜாக் பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி பயிற்சிகளுக்கு இனிவரும் காலங்களில் ஆசிரியர்களை பயன்படுத்தாத நிலையினை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறோம். 


ஆசிரியர் சங்க மூத்த பொதுச்செயலாளர்,

செ.முத்துசாமி Ex MLC

பொதுசெயலாளர்.





கற்பனையில் மிதக்கும் தொடக்கக்கல்வித்துறை...

 கற்பனையில் மிதக்கும் தொடக்கக்கல்வித்துறை...


*AIFETO.*

*நாள்: 05.10.2024.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*


*தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் தொடக்கக் கல்வித் துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடத்திய முதல் பருவ தேர்வு முறையும் மதிப்பெண்களை பதிவு செய்யும் நடைமுறையும் ஏற்றுக்ஸகொள்ளவே முடியாத செயல்பாடாக உள்ளது.*


*தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறிவு மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலியில் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்  செயல்முறை கடிதம் ந.க.எண் 018919/ஜெ2/2024 நாள் 03.10.2024 அன்று வெளியிட்டுள்ளார்கள்.*


*தொகுத்தறி மதிப்பெண்கள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை 10 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 6 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும்  தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும், 4 ,5 வகுப்புகளுக்கு 12 கேள்விகளுக்கும் ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும் அதுவும் 09.10.2024 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளே 07.10.2024 ஆகும்.*


*எழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இருத்தல் கூடாது. தொடக்கக்கல்வித்துறையில் ஒன்றியம் வாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? எத்தனை?. ஓராசிரியர் பள்ளிகள் எத்தனை? மூன்று ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? ஐந்து ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? வகுப்பிற்கு 30 மாணவர்கள் 40 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் எத்தனை? இதெல்லாம் புள்ளி விவரத்தினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.*


*தொடக்கக் கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்  திருத்தும் முறையினை ஏதும் அறியாத தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு  நடைமுறைப் படுத்த வேண்டுமா?  அப்படி  நடைமுறைப் படுத்துவது ஏற்புடையதாக ஒரு போதும் அமையாது.*


*எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்கு பணியாளரை நியமனம் செய்தும் ஆசிரியர்களை இப்பணியினை மேற்கொள்ள சொல்வது ஏற்புடையதாகுமா..?*


*மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மாவட்ட ஆட்சியாளர்கள் பள்ளிகளில் பார்வையிட்டு வெளியிட்டு வருகிற கருத்தொற்றுமை நமக்கு ஒருபோதும் அமைய வேண்டாம்.*


*தொடக்க கல்வி இயக்குனர் அவர்களும், இணை இயக்குனர் அவர்களும் ஒரு கடிதத்தினை அனுப்புவதற்கு முன்னர் நாம் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுகிறோம் என்பதனை நினைவில் கொண்டு செயல்படுத்த பெரிதும் கேட்டுக் கொள்கிறோம்.*


*பள்ளி தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இம்மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனையா..?*


*மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். வாய்ப்பு இல்லை எனில் எக்ஸ் தளத்திலும், மீடியாக்கள் மத்தியிலும், பொது வெளியிலும் இந்த நிலைமையினை வெளியிடுவதை தவிர வேறு வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. யதார்த்த நடைமுறையினை பகிர்ந்து கொள்கிறோம்.*


*வரவேற்க வேண்டியதை வரவேற்று சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் பார்வைக்கு கொண்டு வருகின்ற நிலைப்பாட்டை உடைய இயக்கத்தின் மூத்த தலைவர்,*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


TETOJAC talks in the morning - One day salary deduction announcement in the evening video meeting - Can the primary education sector turn into a riot sector? - What is the Honorable Minister of Education going to do? - Teacher's Federation Report...


காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை - மாலையில் காணொளி கூட்டத்தில் ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு - தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா? - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? - ஆசிரியர் கூட்டணி அறிக்கை...


 *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்?..*


*காலையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை!.. மாலையில் காணொளி கூட்டத்தில் வேலைநிறுத்தம்.. ஒருநாள் சம்பளப்பிடித்தம் அறிவிப்பு!.. தொடக்கக் கல்வித்துறை கலவரத்துறையாக மாறலாமா?..*


*AIFETO...23.09.2024.*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண் 36/2001.*


 *மாண்புமிகு பள்ளிகளுக்குறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 23.9.2024 இன்று நடந்த பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு தலைவர்கள் கருத்தொருமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.*



 *இன்று காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்துப் பதிவினை நாளை மாலை விரிவாக  வெளியிட இருக்கிறோம்!..*



 *இன்று மாலையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற காணொளி கூட்டத்தில் பத்தாம் தேதி டிட்டோஜாக் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஊதியப் பிடித்தத்தை இந்த மாதமே பிடித்தம் செய்து அறிக்கை அளித்திட வேண்டும் என்று அழுத்தமான குரலில் தெரிவித்துள்ளார்.*



 *பேச்சுவார்த்தையில் விவாதம் செய்தவாறே தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் காணொளிக் கூட்டத்திலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ₹5400/- தர ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரெல்லாம் ₹5400/-  தர ஊதியம் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய பணிப்பதிவேட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் வரச் சொல்கின்ற நாளில் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.*



 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழுத்தத்தின் பெயரில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதை நாம் அறிகிறோம்!..  சென்ற வாரம் வரை அரசாணை 243 இல் திருத்தம் செய்ய முடியாது என்று கூறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தேவையான திருத்தத்தை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் வெளியிட  உள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களும் 100% அதில் உறுதியாக உள்ளார் என்பதை அறிகிறோம்.*


 *இன்றைய பேச்சுவார்த்தையில் நடைபெற்ற எல்லாவற்றையும் தனிப்பதிவாக இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு வெளியிட உள்ளோம்.  போராட்டத்தினை ஒத்தி வைத்தது தவறு என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் நினைக்கிறாரா? இல்லை அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்று நினைக்கிறாரா?..*


 *பரிந்துரை செய்ய வேண்டிய தொடக்கக் கல்வி இயக்ககம்  எதிர்க்கட்சி வழக்கறிஞர்களைப் போல் செயல்படுவது முறையுமல்ல; மாண்புமல்ல; என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.*



 *அவரவர்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எல்லாம் மனம் போன போக்கில் பதிவு செய்திட வேண்டாம்!.. 100% உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை உங்கள் மீது கொண்டுள்ள உரிமை உறவுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.*



 *சில நேரங்களில் கூட்டமைப்புகள் எடுக்கிற முடிவுகள் பாதுகாப்பான முடிவாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். வெளிப்படையாக எல்லாவற்றையும் பதிவு செய்ய இயலாது!.*


 *தனிப்பதிவில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட உள்ளோம். அதுவரை பொறுத்திருப்போம்!..*



*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் தனிக்கவனம் மேற்கொண்டு தொடக்கக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்!..*



*இயக்கத்தின் மூத்தத் தலைவர்...*


*அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com. தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5.*


தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ? ஆசிரியர் கூட்டணி நிர்வாகி வேதனை...

 



தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ?  வேதனையுறுகிறோம்...


*AIFETO*


*நாள்: 07.09.2024.*


*செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள். நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.* 


*மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து ஆசிரியர் பணியினை மாணவர்களை உருவாக்குகிற புனிதமான பணி என்றும் புகழாரம் சூட்டி பாராட்டி வருகிறார்.*


*பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள்.*


*பாரதப் பிரதமர் அவர்கள் டெல்லியில் இருந்த போதெல்லாம் அவரது இல்லத்திற்கு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்துப் பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமைப் படுத்தி வருகிறார்.*


*தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.இரவி அவர்கள் கிண்டி ஆளுநர் மாளிகையில் 05.09.2024 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசிய வரிகளை அவரே சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.*  


*தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மோசம், கற்பித்தல் திறன் மோசம், தேசிய சராசரியினை விட கீழே போய்விட்டது. தமிழக பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து விட்டது வேதனையுறுகிறேன் - ஆளுநர்.*


*ஆளுநர் செல்லுகின்ற இடமெல்லாம் வெறுப்புணர்வினை திட்டமிட்டு வெளியிட்டு வருவது கேட்பதற்கு இது ஒன்றும் புதியதல்ல..!*


*ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் இப்படி எங்கள் தாய்த் தமிழ்நாட்டினை பற்றி, கல்வித்தரத்தை பற்றி மிக மோசமாக பேசியபோது கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்கள், கல்வியாளர்களில் ஒருவருக்கு கூட தமிழ் இன உணர்வு இல்லாமல் இருந்திருப்பார்களா..?*


*மேதகு ஆளுநர் அவர்களே..! பாஜக ஆளும் மாநில அரசுகளான குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட கல்வியின் தரம், மாணவர்களின் கற்றல் திறன் பற்றி பட்டியல் போட்டு விவாதிக்கலாமா.? 18 ஆண்டு காலமாக தேசியச் செயலாளராக (National Secretary, All India Federation of Elementary Teachers' Organisations' ) இருந்து வருகிறேன். வெளிப்படைத் தன்மையுடன் வெளிக்கொணர தயாராக உள்ளோம்.*


*ஆசிரியர் தினத்தன்று இப்படி பேசலாமா..? என்ற இடம் பொருள் ஏவல் கூட தெரியாத மாநிலத்தில் பயின்று வந்தார்களா..? ஆளுநர் என்று நினைக்கத் தோன்றுகிறது.*


*ஆசிரியர் =ஆசு-குற்றம்; இரியர் - நீக்குபவர், குற்றத்தை நீக்குபவர் அறிவொளி தருபவர்.*


*ஆளுநர் ஏற்கனவே வகித்த பதவி காவல் கண்காணிப்பாளர் பதவி என்று எண்ணுகிறோம்.*


*பார்ப்பவர்களை எல்லாம் குற்றவாளிகளை தேடும் கண் கொண்டு பார்ப்பவர்கள், அவருக்கு பிடித்த பாரதத்தினை நினைவுக்கு கொண்டு வந்தால் துரியோதனன் வர்க்கத்தினருக்கு நல்லவர்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள். நல்லதும் கண்ணுக்கும் படாது*


*தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தை பற்றி குறை சொல்லும் ஆளுநர் அவர்களே..! தமிழ்நாட்டின் சார்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும், உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் பாடத்திட்டம் பற்றி விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். நாங்களும் விவாதிக்க தயாராக உள்ளோம். வாய்ப்பினை தாருங்கள். தமிழ் மண்ணில் முளைத்த புல் பூண்டுகள் கூட உங்களை ஏற்றுக் கொள்ளாது. எதிர்ப்புணர்வு புயல் வீச வாய்ப்பளிக்காதீர்கள்.*


*ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாட்டு ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை, அறப்பணியினை தரம் தாழ்த்தி பேசியதை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.* 


*சத்திரபதி சிவாஜி சிலை நொறுங்கி கீழே விழுந்து விட்டது. 100 முறை பாரதப் பிரதமர் அவர்கள் மன்னிப்பு கேட்கிறார். அறம் நின்றுதான் அதன் கடமையைச் செய்யும்.*


*ஆசிரியர் தினத்தன்று ஆசிரிய சமுதாயத்தை சேதாரப்படுத்தியது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயக் குரலும் உங்களுக்கு எதிராக ஒலிக்கட்டும்...!ஒலிக்கட்டும்...!*


*தொடர்ந்தால் தொடர்வோம்.*


*ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர்,*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*



ஏதும் தெரியாத முதல் தலைமுறை - இயக்கங்களை போராடாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல் தலைமுறை - AIFETO அறிக்கை...



ஏதும் தெரியாத முதல் தலைமுறை -  இயக்கங்களை போராடாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல் தலைமுறை - AIFETO அறிக்கை...



*AIFETO..04.08.2024..*



*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*



*பல தலைமுறை அனுபவங்களை பெற்றுள்ள நாம்... முதல் தலைமுறை இவருக்கு முன்னவர்களும் இல்லை!.. ஆலோசனை சொல்ல பின்னவர்களும் இல்லை!..  இவருக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இருப்பினும் பொதுவானவர்களுக்காக நமது கருத்தினை பதிவு செய்கிறோம்.*


 *(எப்படி தினுசு தினுசாக யோசிக்கிறார்களோ?.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.*



 *அந்தப் பழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களுக்கு  அந்தப் பழக்கம் தான் வரும். அதில் ஒன்றும் வியப்பேதும் இல்லை.*


 *அரசாணை 243, நாள் 21.12.2023 அன்று வெளிவந்த போதே பாதகமான அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது  தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் உறுதியான கோரிக்கையாகும்.*



 *டிட்டோஜாக்கின் கொள்கை முடிவும் அதுதான். தமிழக ஆசிரியர் கூட்டணியின் கொள்கை முடிவும் அதுதான். ஆனால் தொடர்ந்து வெளிவரும் ஐபெட்டோவின் புலனப் பதிவுகள் அனைத்தும் அரசாணை 243 ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையேல் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். என்றுதான் எழுதி வந்திருக்கிறோம். காரணம் நீதிமன்றத் தீர்ப்பினால் வெளிவந்த அரசாணையாகும். அதை ரத்து செய்வதற்கு பல சங்கடங்கள் இருக்கிறது. ஆனால் தேவையான திருத்தங்களை வெளியிட வேண்டும்.*



 *ஆனால் இவர்கள் நினைக்கிற திருத்தங்கள் அல்ல; ஒன்றிய அளவில்தான் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். முன்னுரிமைப்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.  பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட வேண்டும். தலைமையாசிரியர்கள் மாறுதலைப் பொறுத்தவரையில் முற்றிலும் நிபந்தனைக்கு உட்பட்டு கல்வி மாவட்டத்திற்குள்ளாக மாறுதல் இருக்கலாம். பதவி உயர்வு ஒன்றிய முன்னுரிமை அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.*



 *இவர்கள் நினைக்கும் திருத்தங்களை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!. அரசாணை 243 பாதுகாப்பு இயக்கம் ஆசிரியர்களின் பாதுகாப்பு இயக்கம் அல்ல;  உண்மை நிலைமையினை அந்த  பாதுகாப்பு இயக்கத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள் ஒருநாள் உணரத்தான் போகிறார்கள்.*



 *1985 ஜாக்டீ போராட்டத்தை முன்நின்று நடத்தி சிறைக்குச் சென்றவன். 1988 ஜாக்டீ ஜியோ போராட்டத்தில்  மேடையில் பேசியில் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டவன். 2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் நடு இரவில் கைது செய்யப்பட்டு புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவன். எட்டு மாத காலம் நிரந்தர பணி நீக்கத்தில் இருந்தவன்.*


 *பள்ளிப் பருவம் தொடங்கிய போதே திராவிட முன்னேற்றக் கழக உணர்வில் இரண்டறக் கலந்தவன். பல சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குவதில் என்னுடைய சிறு பங்களிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. பொது நன்மைகளை தலைவர் கலைஞர் அவர்களிடமும், இனமான பேராசிரியர் அவர்களிடமும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடமும் சாதித்து இருப்பேனே தவிர; எனக்காக என் சொந்த நலனுக்காக யாரிடமும் எதையும் கேட்காதவன். 51 ஆண்டுகால எனது பொது வாழ்க்கையில் முற்றிலும் ஆசிரியர்களின் நலனை முன்னிறுத்திதான் வாழ்ந்து வருகிறேன்.*


 *சங்க  வித்தியாசம் பார்ப்பதில்லை. பொதுவாக ஆசிரியர்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது  என்றால் நான் உணர்வு பூர்வமாக நேசித்து வரும் அரசியல் கட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்.. நாம் சார்ந்த ஆசிரியர் சமுதாயத்திற்கு மட்டும் தான் இன்றுவரை முழு நேரமாக அர்ப்பணித்து தொண்டாற்றி வருகிறேன். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அகவிலைப்படியை  நிறுத்தியபோது  சென்னையில் நடத்திய போராட்டத்தில்  சிறைக்குச் சென்று வந்தவன்.*



 *பள்ளிக்கல்வித்துறையைப்  தவிர வேறு துறைகளைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லா துறைகளிலும் சென்று பழக்கத்தை வைத்துக்கொண்டு ஏதாவது நன்மையை அடைய வேண்டிய எண்ணம் அன்று தொட்டு  இன்றுவரை நமக்கு இருந்ததில்லை.*


 *கொள்கை வழி நிற்பவர்கள் கொள்கை சீமான்கள்!..*


 *வணிக நோக்கத்தோடு செயல்படுபவர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்!..*


 *கொள்கையில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது!.*



 *கடைசி மூச்சு இருக்கும் வரை ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் என்னால் திணையளவேனும் நன்மை கிடைக்குமென்றால் இந்த  தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?.. என்ற பாரதிதாசன்  பாடல்வரிகளை கொள்கையாக ஏற்றுக் கொண்டவன். விமர்சனங்களை பற்றி கவலை இல்லை.*



*ஆட்சி வித்தியாசம் பார்க்காமல் நிர்வாகம் மாறுதல்களை பெறுவதில் முனைப்பு காட்டுகிற இயக்கமும் எங்கள் இயக்கமல்ல;*


 *எந்த ஆட்சிக் காலத்திலும் நிர்வாக மாறுதல் கேட்டு படிக்கட்டு ஏறாத இயக்கமும் எங்கள் சங்கம்தான் !.*


*நிர்வாக மாறுதல்களை அவ்வப்போது கண்டித்து அறிக்கை வெளியிடுகிற இயக்கம் ஐபெட்டோ இயக்கம் தான்!..*



 *38 ஆண்டுகால என்னுடைய ஆசிரியர் பணி  சைக்கிளில் தொடங்கி... சைக்கிளில் தான் நிறைவு பெற்றது. இன்று வரை எனக்கு Two Wheeler  ஓட்டவும் தெரியது. சொந்தமாக Two wheelerம் இல்லை.. என்ற வாழ்க்கைக்கு உரியவன்... இந்த புலனப்பதிவு பதிவிடுகிற வரையில் இருப்பிடத்திற்கு நகரப் பேருந்திலும், அரசுப் பேருந்திலும் தான் சென்றுவரும் வாழ்க்கையை  வாழ்ந்து வருகிறேன்.*




*வீதிக்கு வந்த டிட்டோஜாக் போராட்டம் கோரிக்கைகளை வென்றெடுக்கும்வரை தொடர்ந்து களத்தில் நிற்பார்கள்!..*



*பொதுத்தேர்தல் வரையில் களத்தில் நின்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாலும் போர்க்குணத்தோடு நின்று வெற்றி பெறுவார்கள்!.. இது டிட்டோஜாக் எடுத்துக் கொண்ட உறுதிமொழியாகும்!..*



*எஞ்சிய என் வாழ்நாளையும் ஆசிரியர் சமுதாய நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்வேன்!...*


*வசவாளர் வாழ்க!...*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை எப்படித்தான் தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? - ஆசிரியர் கூட்டணி...



ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? -  தமிழக ஆசிரியர் கூட்டணி...


 *எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை?..*


*AIFETO..16.12.2023*


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*


📕📗📘📙📕📗📘📙📕📗📘📙



*12.12.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட தீர்மானங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் ஊதியத்தினை ஜாக்டோ ஜியோ சார்பாக  சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வழங்குவதாக   கூட்டத்தில் அறிவித்துள்ளார்கள்.*


 *பிற மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமி, கஜா புயல், மழை வெள்ளம், கொரனா பெருந்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஒரு நாள் ஊதியத்தினை மனமுவந்து அளித்துவந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ இந்த ஒரு நாள் ஊதியம் வழங்கும் முடிவிற்கு எதிர்ப்புணர்வினை பல்வேறு முனைத் தாக்குதலுடன் புலனங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது கண்டு கவலையுறுகிறோம்.*


 *எனது 51 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இல்லாத அதிர்ச்சியினை கண்டு நிலை குலைந்து நிற்கிறேன்.*


 *ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மனிதநேயம் இல்லாதவர்களா?.. இல்லவே இல்லை... புலனப் பதிவு சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டு போகும்  இவர்கள்...,  'ஜாக்டோ ஜியோ தலைவர்களே!.. இதுவரையில்  இழந்துள்ள பணப்பயன்கள் எதையும்  பெற்றுத் தர முடியாத உங்களால் எங்களின் ஒரு நாள் ஊதியத்தினை அரசுக்கு வழங்க சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக பாடுபட்ட சங்கத் தலைவர்கள் காலம் போய், உங்களுடைய சுய விளம்பரத்திற்கும், சுய லாபத்திற்காகவும் அரசிடம் உங்களை நிபந்தனையில்லாமல் ஒப்படைத்துக் கொண்டு, உங்களிடம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்ற ஒரு காரணத்திற்காக  எங்கள் உரிமைகளை அடகு வைப்பதா?..'*


 *'கோரிக்கை மாநாடு  என்று  பெயரிட்டால் முதல்வர் வரமாட்டார் என்று வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு என்று பெயர் மாற்றினீர்கள்!.. சென்னைக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து  கலந்து கொண்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையுடன் வந்தார்கள். ஆனால் பணப்பலன் சார்ந்து ஒரு சிறு அறிவிப்பாவது அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது உண்டா?..  இல்லை நடந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நிகழ்வுகளிலாவது  பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்... கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டியவிடுப்பு சரண் செய்ய அனுமதி வழங்கப்படும்... ஊதிய முரண்பாடுகள் களையப்படும்... என்று  ஒரு அறிவிப்பையாவது வெளியிட்டிருப்பார்களா?...'* 



*முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், நம்பக்கம் மக்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் செல்வாக்கு நமக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். அவர் எடுத்தது தவறான முடிவு என்று அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுதும் பிரதிபலித்தது என்பதை வரலாறு இன்னமும் சொல்லிக் கொண்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது என்னதான் நாம் இதயப் பற்றுதலுடன் நெருங்கி நெருங்கி சென்றாலும், அவர் நம்மீது அன்பு மழை பொழிந்தாலும், நம் கோரிக்கைகள் எதையும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அவர்களும் நலத்திட்டங்களால் மக்கள் செல்வாக்கு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி வருகிறது என்று செயல்பட்டு வருகிறார். நாம் இவர்களை நம்பி கெட்டது போதும்!. நம்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் கைகோர்த்து களத்தில் தொடர்ந்து நின்று இழந்த உரிமைகளை மீட்டெடுப்பொம்!..*



*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட 12 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கைக்காவது அரசாணை வெளியிட்டு இருப்பார்களா?...*



 *நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் பெரும்பான்மையான 14 ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், 'இன்னமும் தலைநகரம் சென்னை வெள்ளப் பாதிப்பில் இருந்து முழுவதுமாக  மீளவில்லை!.. அதனால் 28ஆம் தேதி கோட்டை நோக்கி  மறியல்  முற்றுகைப் போராட்டத்தினை தவிர்த்து விட்டு, 28ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிமிக்க மறியல் போராட்டத்தினை நடத்தலாம்' என்ற கருத்தினை பதிவு செய்த போதும்...  அதை  செவிமடுக்காதவர்கள் யார்?..யார்?.. கண்டு கொள்ளாமல் இருந்த சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?.. அந்த வீட்டோ பவர் உள்ள சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?..*


 *ஜனவரி மாதத்தில் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தினை வைத்துக் கொள்ளலாம் என்று ஆசிரிய சங்க தலைவர்கள் சொன்னதை, கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு முடிவினை எடுத்துக் கொண்டு வருகை தந்து  திட்டமிட்டபடி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது ஏன்?..*


 *இவர்கள் எடுத்துள்ள  முடிவுகள் பற்றி பலரின் புலனப் பதிவில் வெளிவந்துள்ள விகடகவி வார்த்தைகள். நெருப்புகள்... "நடக்கும் என்பார் நடக்காது... அப்படி எதுவும் நடக்காது இவர்கள் மீது சத்தியம்" என்ற பாடல் வரிகளோடு புலனப் பதிவுகள்  உலா வந்து கொண்டுள்ளது.*


 *நடந்தது என்னவென்றால் இரண்டு சங்கத் தலைவர்கள் ஒரு நாள் ஊதியத்தை நாங்கள் வழங்கி விடுகிறோம் என்று முன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.  அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக  உடனே ஜாக்டோ ஜியோ கூட்டத்தினை கூட்டி 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தினை  தருவதற்கான நெருக்கடியினை கூட்டத்தில் மூலமாக ஏற்படுத்தியுள்ளார்கள். கூட்டம் கூடுவதற்கு முன்னர் இரண்டு தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை தனித்தனியே சந்தித்து எடுக்கப் போகும் முடிவினை தெரிவித்து வந்த ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.*



 *தனிப்பட்ட என்னுடைய 51 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 1985ல் நடைபெற்ற ஜாக்டீ போராட்டம், 1988ல் நடைபெற்ற ஜாக்டீ- ஜியோ போராட்டம், 2003 இல் நடைபெற்ற டெஸ்மா, எஸ்மா  ஜாக்டோ ஜியோ போராட்டத்தினை முன்னின்று நடத்தி மூன்று போராட்டங்களிலும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு  வெளியில் வந்திருக்கிறோம். நிரந்தரப் பணி நீக்கத்தில் இருந்த 999 பேரில் 998 பேரையும் ஏழு மாதத்திற்கு பிறகு பணியில் அமர்த்திய பிறகு நாம் பணியில் கடைசியாக சேர்ந்தோம் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*


 


 *ஆசிரியர்,  அரசு ஊழியர், பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர் சங்கங்கத் தலைவர்களுடன் களத்தில் நின்று பணியாற்றிய அனுபவக் கொள்முதலை இன்னமும் நாம் பாதுக்காத்து வைத்துள்ளோம்!. தோழர்கள் போராளிகள்  எம்.ஆர்.அப்பன், கே.ஜி என்று அழைக்கப்பட்ட கங்காதரன்,  தோழர் ஸ்ரீதரன்,  என்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டுள்ள போராளி தோழர் முத்துசுந்தரம், பெரியவர் நாராயணராவ், கு.பா, செளந்தரபாண்டியன், அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த சகோதரர் சூரியமூர்த்தி,  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்கத்தினுடைய தலைவராக இருந்த சகோதரர் பாண்டுரங்கன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆத்ரேயா அவர்களுடனும், தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பலமுறை கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளான பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் அவர்களுடனும் களப்பணி ஆற்றிய நினைவுகள் எல்லாம் இன்னமும் கூட்டமைப்புகளுக்கு பெருமையினை சேர்த்து வருகின்றது என்றால் மிகையாகாது.*


 *தனிநபர் கருத்தினை கூட கேட்டு மதித்து போராட்ட திட்டத்தை வகுத்த இயக்கம் தான் அன்றைய  ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாகும். என்ற வரலாற்றுப் பதிவு இன்றும் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளது.... என்பதை மறக்கத்தான் முடியுமா?..*



*தொடர்ந்து வெளிவரும் புலனப் பதிவுகளை தவறாமல் படித்து  சங்கத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்து கொண்டு கூட்டமைப்புகளை நடத்துங்கள்!.. ஒருவேளை அரசே ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் ஊதியத்திற்கு அரசாணை வெளியிடுவார்களேயானால் பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பினை தெரிவிப்பார்கள் என்பதை உணர முடிகிறது.  அரசின் மீது உள்ள கோபத்தை விட... சங்கத் தலைவர்கள் மீது வெறுப்புணர்வு தீப்பிழம்பாய் வெளிவந்து கொண்டிருக்கிறது.*




 *இன்னும் சென்னையில் வெள்ளம் வடியாத சில  பகுதிகள் இருக்கத்தான் செய்கிறது.  என்பதை மக்கள் ஊடகங்கள் வழியாக பார்த்து வருகிறார்கள்.  மத்திய அரசு கண்காணிப்பு குழுவினை அனுப்பி பாதிப்பினை ஆய்வு செய்து வருகிறார்கள். அதே டிசம்பர் மாதத்தில் மீண்டும் பாதிப்புகளில் இருந்து வெளிவராத அதே தலைநகர் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினால்  பொதுமக்களும், பொது நோக்கர்களும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?..*


 *பல்வேறு புலனப் பதிவுகளில்  போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள்... பேச்சுவார்த்தைக்கு முறைப்படி அழைக்காவிட்டாலும் இவர்களே சென்று பார்ப்பார்கள்.. முதலமைச்சர் நின்று கொண்டு இவர்களையும் நிற்க வைத்து   வெள்ள பாதிப்பு இன்னமும் நீங்க வில்லை... எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று தெரிவிப்பார்கள். சில சங்கத் தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்திக்கவே முடியாது.  நமது ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் அவர்கள் நம்மை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த ஒரு பெருமை போதாதா?.. என்று நமக்கு ஆறுதல்  அளிக்க முன் வருவார்கள்..  உடனே தலைவர்களும் போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று முதல் நாள்தான் அறிவிப்பார்கள்.*


*ஏற்கனவே டிட்டோஜாக் இது போன்ற அறிவிப்புகளுக்கு வழிகாட்டி நிற்கின்றது.*



 *போராட்டக் களத்தினை தீவிர படுத்த 19ஆம் தேதி திருச்சியில் ஜேக்டோ ஜியோ  கூடுகிறார்களாம்!. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். நடைபெறப் போகும் கூட்டத்திலாவது ஜாக்டோ ஜியோ என்ற வீரம் செறிந்த அமைப்பினை ஒரு தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து கொண்டு வெளியில் வாருங்கள்!*


*ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப் பிடியுங்கள்!..*


*சுதந்திரமான கூட்டமைப்பிற்கு ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் ஒற்றுமை உணர்வு ஒன்றுபட்ட உணர்வாக ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியானால்... சங்கத் தலைவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மத்தியில் கேள்விக்குறிக்கு ஆளாகுவோம்!..*


 *மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி என்பார்கள்!.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக போராட்டங்களை நடத்துவது தான் ஜாக்டோ ஜியோ இயக்கம்!.. என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு செயல்பட முன்வருவோம்!..*



*மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மின்துறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள்,  எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் இவர்களது இரவுபகல் பாராத  அர்ப்பணிப்பு  மிகுந்த பணியினை மறக்கத்தான் முடியுமா?..  இவர்களையெல்லாம் பாராட்டுகிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்..  இவர்களின் கோரிக்கைகளைப் பற்றி  ஏற்க மறுப்பது ஏன்?.. என்ற  உணர்வுகள் மேலிட்டு வருகின்றன.*




*நடந்ததை மறந்து இனி நடக்க இருப்பதை உணர்ந்து ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப்பிடித்து களத்தில் தொடர்ந்து நிற்போம்!..*


*பெற்ற அனுபவங்களை காய்தல், உவத்தல் அகற்றி உரிமை உறவுடன் பகிர்ந்து கொள்கிற உங்களின் சகோதரன்...*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion)...

 

 

*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion):*


 நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது பொதுச் செயலாளர் ஐயா செ. முத்துசாமி Ex.MLC அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நபர் அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் மூலம் உயர் நீதிமன்றத்தில் நாம் மேல் முறையீடு செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.


 பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு விரைவாக வருவது கடினம்.


 எனினும் நமது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


இன்றைய விசாரணையின் பொழுது ஏற்கனவே எதிர் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்ததன் காரணமாக அவர்கள் தரப்பின் வாதத்தையும் நீதிபதிகள் கேட்டனர்.


எதிர் தரப்பு வழக்குரைஞர் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் பதவி உயர்வு தொடர்பான அடிப்படை விதிகளை ரத்து செய்துள்ளனர்.


 அவ்வாறு அடிப்படை விதிகள் ரத்து செய்யப்பட்டதை அரசு ஏற்றுக்கொண்டால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததே அல்ல என்று வாதிட்டார் .


எனவே பதவி உயர்வு தொடர்பான அடிப்படை விதிகளை ரத்து செய்ததை அரசு ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


 அதற்கு அரசு தான் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தனிநபரோ, சங்கமோ மேல்முறையீடு செய்திருப்பது விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.


 நீதிபதி அவர்கள் உடனடியாக அரசு தரப்பு நிலவரத்தை பதிவு செய்ய கேட்டுக்கொண்டு, தானும் இவ்வழக்கினை முழுமையாக படித்துப் பார்த்து அதன் பின் முழு விசாரணை மேற்கொள்வதாக கூறி வழக்கினை  ஒத்தி வைத்துள்ளார்.


இத்தகவலை உடனடியாக நமது வழக்கறிஞர் நமது பொதுச் செயலாளர் அவர்களிடம் தெரியப்படுத்தி  இந்த விஷயத்தை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கல்வித் துறை சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.


அதன் அடிப்படையில் நமது பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் மற்றும் மாநில தலைவர்  துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் ஆகியோர்களை உடனடியாக தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை தெரிவித்து உடனடியாக சென்னை சென்று தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் ஆகியோரை சந்தித்து இன்றைய வழக்கின் விசாரணை விவரங்களை தெரிவித்து உடனடியாக அரசு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க செய்யவேண்டும் என தெரிவித்து அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .


மேலும் பொதுச்செயலாளர் உடனடியாக மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளி மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு நிலவரத்தையும் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்களின் வேண்டுகோளையும் உடனடியாக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.


 இது சார்பாக வரும் திங்கள் அன்று நேரடியாக அவர்களையும், முதன்மைச் செயலாளரையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்து நேரம் ஒதுக்கி தர கேட்டுக் கொண்டார் .


தாங்கள் இது விஷயத்தில் உடனடியாக வருகைதரலாம் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் சார்பில் வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு உண்டான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாகவும், அரசு தரப்பில் உடனடியாக வழக்கு மேல்முறையீடு செய்வதற்குண்டான நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்து கொண்டனர்.


இதன் அடிப்படையில் வரும் திங்கள் அன்று நமது பொதுச் செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் ஆகியோரை சந்திக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


 அதற்கு உண்டான ஏற்பாடுகளை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் செய்து வருகிறார்.


நிகழ்வு தொகுப்பு:


2:27 PM. மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்கள் நமது ஐயாவை தொடர்பு கொள்ள தொலைபேசியில் அழைப்பு(missed call)


2:31 PM. வழக்கறிஞரின் அழைப்பை பார்த்து ஐயா அவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை கேட்டு அறிதல். வழக்கறிஞர் உடனடியாக அரசு அப்பீல் செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க கேட்டுக் கொள்ளுதல். அதற்காக சென்னை செல்ல வலியுறுத்துதல்.


2:40. பொதுச் செயலாளர் சென்னை செல்ல வேண்டி உள்ள அவசியத்தை மாநிலப் பொருளாளர் உடன் கலந்தாலோசனை செய்தல்


2:45 PM பொதுச்செயலாளர் நாமக்கல் அலுவலக தலைமை நிலைய செயலாளர் கருப்பண்ணன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சென்னை செல்ல வேண்டியதால் திங்கள் கிழமை மகிழுந்து ஓட்டிச் செல்ல வசதியாக விடுமுறை எடுக்க வலியுறுத்துதல். அதற்கு அவர் ஒப்புதல் அளித்தல்.


2:45PM மாநிலப் பொருளாளர் உடன் கலந்து ஆலோசனை செய்து சென்னை செல்ல தயாராகும்படி கேட்டுக் கொள்ளுதல்


2:47.PM  சென்னை சாந்தகுமார் அவர்களை பொதுச் செயலாளர் தொடர்பு கொண்டு திங்கட்கிழமை தாங்கள் வருவதாகவும் அன்றைய தினம் இயக்குனர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்துதல்


2:50PM மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் மாநில தலைவர் அவர்களுடன் பொதுச் செயலாளர் பகிர்ந்து கொள்ளுதல். அப்பொழுது உடனடியாக இயக்குனர் இருவரையும் தொடர்பு கொள்ள முடிவாற்றுதல்.


2:54PM பொதுச் செயலாளர் அவர்கள் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை தெரிவித்து திங்கள் வருவதாக தகவல் கூறுதல். மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் வாருங்கள் என ஒப்புதல் தருதல்.


2:58PM பொதுச் செயலாளர் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் அவர்களை தொடர்பு கொண்டு வழக்கு விபரங்களை தெரிவித்து திங்கட்கிழமை வருவதாக தகவல் தெரிவித்தல். இயக்குனர் அவர்கள் அவசியம் வாருங்கள் என ஒப்புதல் தருதல்.


3:03PM பொதுச் செயலாளர் மீண்டும் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்களிடம் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை கூறுதல். விரைந்து அரசை அப்பீல் செய்ய வலியுறுத்துமாறு வழக்கறிஞர் பொதுச்செயலாளர் ஐயாவை கேட்டுக் கொள்ளுதல்.


03:06 பொதுச் செயலாளர் மாநில தலைவருடன் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு திங்கட்கிழமை சென்னை சென்று திட்டமிட்டபடி தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளரை சந்தித்து வழக்கறிஞர் கூறிய ஆலோசனைப்படி அரசை மேல்முறையீடு செய்ய வலியுறுத்த உள்ளதை பகிர்ந்து கொள்ளுதல்


3:12PM பொதுச்செயலாளர் அய்யா அவர்கள் மீண்டும் சாந்தகுமார் அவர்களை தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் கூறி திங்கள் வருவதை உறுதி செய்தல்


குறிப்பு: நமது நல்ல நேரம் இன்று மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்கள் தொடர்பு கொண்டதிலிருந்து இயக்குனர்கள், மாநிலத் தலைவர், மாநில பொருளாளர், சாந்தகுமார் ஆகியோர்களை தொடர்ந்து பொதுச்செயலாளர் அய்யா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் உடனுக்குடன் அவர்களுக்கு தொடர்பு கிடைத்து வழக்கு சம்பந்தமாக விரிவான ஆலோசனை நடத்தியது இன்றைய தினம் சிறப்பாக அமைந்தது என்றால் மிகையல்ல.


வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன்...

மாநில அமைப்பு, 

*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர் - அரசு ஊழியர் சார்ந்து வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எப்பொழுது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் வேண்டுகோள் (The General Secretary of Tamil Nadu Teachers Federation has requested the Hon'ble Chief Minister to announce when the election promises made by Teachers-Government employees will be fulfilled)...



 ஆசிரியர் - அரசு ஊழியர் சார்ந்து வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எப்பொழுது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் வேண்டுகோள் (The General Secretary of Tamil Nadu Teachers Federation has requested the Hon'ble Chief Minister to announce when the election promises made by Teachers-Government employees will be fulfilled)...



>>> மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் வேண்டுகோள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கியுள்ள முக்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்...

 



தேர்தல் பணியில் ஆசிரியர்களுக்கு முறைப்படி தபால் வாக்குகள் வழங்கவேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலை பள்ளி பட்டதாரி  ஆசிரியர் கழகம் சார்பில் முனைவர் அ.மாயவன் அவர்கள் கடந்த 30/1/2021 அன்று தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்க்கும் தபால் வாக்குகள் வழங்குவதில் அந்த  மாவட்ட ஆட்சியர்களால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் இவர்கள் அனைவருக்கும்  மின்னனனு இயந்திரம் மூலம் தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக சிறப்பு வாக்கு  பதிவு மையம் ஒன்றின் மூலம் அந்தந்த RO அலுவலுகத்தில் வாக்கு  பதிவு செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துருந்தார் . தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கை மனு மீது  நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகம் சார்பாக தொடுத்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சீவ் பானெர்ஜி மற்றும் செந்தில்குமார் அவர்களின் முன் வந்தது .

இந்த வழக்கை வி.அருண் வழக்கறிஞர் சார்பாக , மூத்த வழக்கறிஞர் ரா .விடுதலை ஆஜராகி தேர்தல் ஆணையம் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குகளுக்கு வழிகாட்டுதலை பின்பற்றுதல் , தகுதியுள்ள தேர்தல் பணி வாக்காளர்கள் பெருமளவில்  தங்கள் அடிப்படை உரிமையான, ஜனநாயக கடைமையான வாக்கு செலுத்துவதில் தேர்தல் ஆணையமே தவறு செய்வதால் மற்றும் இந்த தவறினை தேர்தல் ஆணையம் கடந்த தேர்தலில் செய்தது  போல் இந்த தேர்தலில் செய்யக்கூடாது என்றும், ஆசிரியரகளுக்கான தபால் வாக்கினை முழுமையாக வழங்கவேண்டும் , மேலும் தபால் வாக்காளர்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பூர்திசெய்த படிவம் 12 னை தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதாவது முதல் பயிற்சி வகுப்பான 18/3/2021 க்குள் கொடுக்கவேண்டும் எனவும் கையெழுத்திட்ட படிவம் 12 ஐ உடனே பெற்று இரண்டாவது பயிற்சி வகுப்பில் 26/3/2021-ல்  தபால் வாக்குகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று வாதாடினார்.  மேலும் அவர்கள் தேர்தல் 6/4/2021 அன்று முடிந்தாலும் 1/5/2021 வரை தேர்தல் பணி ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த உரிமையுள்ளது . ஆகவே தேர்தல் ஆணையமே தகுதியுள்ள வாக்காளர், வாக்கு செலுத்துவதை தடுக்கக்கூடாது என்று வாதிட்டார் . இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர் , அரசு ஊழியர்கள் தங்கள் தபால் வாக்குகளை 1/5/2021 வரை தபாலில் செலுத்தலாம் என்றும் , தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை தபால் வாக்குகளை எண்ணிக்கைக்கு எடுத்து கொள்ளலாம் என்றும் தபால் வாக்குகளை வழங்குவதில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்கும்   என்று பதிலளித்தார் .

இருதரப்பினரையும்  கேட்ட பிறகு தலைமை நீதியரசர் சஞ்சீவ் பானர்ஜி வாக்காளர் வாக்களிப்பது ஜனநாயக அடிப்படை உரிமை என்றும் , மனுதாரர் கோரியபடி தற்சமயம் EVM- ல் வாக்கு  அளிக்க முடியாவிட்டாலும் , எதிர்காலத்தில் மனுதாரர் கூறியுள்ள நல்ல ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நினைவில் கொண்டு எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவேண்டும் .

தேர்தல் பணி அரசு ஊழியர்கள் மிக முக்கிய தேர்தல் பணியாற்றுவதால் , அவர்கள் ஓவ்வொருவருக்கும் நல்ல கௌரவமான  ஊதியம் வழங்கி அவர்களின் அடிப்படை உரிமைகளான  வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு , தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களில்    கூறப்பட்டுள்ள நடைமுறைப்படி தேர்தல் பணி ஆசிரியர்கள் / ஊழியர்கள் முழுமையாக தபால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வாக்களிக்க தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamil Nadu State PTA - Question Bank Outlets for 10th and 12th standard - District Wise Release

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி விற்பனை  இடங்கள் - மாவட்ட வாரியாக வெளியீடு - செய்தி வ...