கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த சாலைக் குறியீடுக்கு என்ன பொருள் ?

 


இந்த சாலைக் குறியீடுக்கு என்ன பொருள் ?


இந்தப் பகுதியில் பார்வையற்றவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள் என்று பொருள்.


பொதுவாக சாலையோரங்களில் பல்வேறு குறியீடுகளை கொண்ட பலகைகள் நிறுவப்படுவது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு குறியீட்டிற்க்கும் ஒரு அர்த்தம் உள்ளது.


அந்த வகையில் புதுவிதமான குறியீட்டைக் கொண்ட பலகை ஒன்று பெங்களூருவின் ஹோப் பார்ம் ஜங்ஷனில் நிறுவப்பட்டுள்ளது. வெள்ளை நிற பலகையில் 4 கருப்பு வட்டங்கள் போடப்பட்டுள்ளன. இதனை கண்காணித்த அனிருத்தா முகர்ஜி என்ற பயணி இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.


எனவே அந்த பலகையை புகைப்படம் எடுத்த அவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு போக்குவரத்து அதிகாரிகளிடம் இதற்கான அர்த்தத்தை விளக்குமாறு கேட்டுள்ளார். இந்தப் பதிவினை பார்த்துள்ள வைட்பீல்டு டிராபிக் போலீசார் அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.


அதில் இந்தக் குறியீடு ஆனது "சாலையில் பார்வையற்றவர்கள் நடமாட வாய்ப்புகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை ஓட்டும் மாறு குறிப்பிடுகிறது. ஹோப் பார்ம் ஜங்ஷன் அருகில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று இருப்பதால் இந்தப் பலகை அங்கு நிறுவப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...