கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11-09-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண்:782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

பொருள்: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.


பழமொழி :
Eagles don't catch flies.

புலி பசித்தாலும் புலலைத் தின்னாது.


இரண்டொழுக்க பண்புகள் : 

1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

தன்னைத்தானே அறிவதற்குச் சிறந்த வழி
தியானம் செய்வது அல்ல;
செயல்தான்.
உங்கள் கடமையை முழு ஈடுபாட்டுடன் முடியுங்கள்;
உங்களின் தகுதியும் தரமும் என்ன என்பதை
நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள்.

- - கதே


பொது அறிவு :

1) 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?

விடை: மூங்கில்

2. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை

விடை: வில்லுப்பாட்டு



English words & meanings :

worship-வழிபாடு,

  worth-மதிப்பு



வேளாண்மையும் வாழ்வும் :

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

(குறள் 701). வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான்


செப்டம்பர் 11

மகாகவி பாரதியின் நினைவுநாள்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.


நீதிக்கதை

ஒரு பெரிய கோதுமை தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு விவசாயி ஒருவன் ஒவ்வொரு வருடமும் கோதுமை சாகுபடி செய்து கொண்டிருந்தான். சாகுபடி செய்யும் இடங்களில் பொதுவாகவே பூச்சிகள், குருவிகள் நிறையவே நீங்கள் பார்க்கலாம். அந்த தோட்டத்தில் கோதுமை அறுவடை நாட்கள் நெருங்க ஆரம்பித்தன.அறுவடை தொடங்கிய நாளில் இருந்து எறும்புகள் தங்கள் கூட்டத்துடன் வந்து கோதுமைகளை எடுத்து சென்றன. தோட்டத்தில் ஒரு வெட்டுக்கிளி படுத்துக்கொண்டு பாட்டு பாடி கொண்டே இருந்தது. அதுமட்டுமில்லாமல் அங்கு கூட்டமாக சென்று கொண்டிருந்த எறும்புகளை கேலி செய்தது.அந்த கூட்டத்தை பார்த்து கேலி செய்து பாட்டு பாடியது வெட்டுக்கிளி. ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் கோதுமையை தூக்கி கொண்டு நடந்து சென்றன. ஆனாலும் விடாமல் தினமும் எறும்பு கூட்டத்தை வம்பிழுத்து கொண்டே இருந்தது வெட்டுக்கிளி.இப்படி தினமும் எடுத்துட்டு போய் என்ன செய்ய போறீங்க லூசுகளா என வெட்டுக்கிளி கேட்க, அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் வரிசையாக சென்றன. அறுவடை நாளும் முடிந்தது. வெட்டுக்கிளி அன்றாடம் தோட்டத்தில் இருந்து கோதுமையை சாப்பிட்ட நிலையில் தோட்டம் எதுவும் இல்லாமல் வெறிசோடியது.வெயில்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க ஆரம்பித்தது. எறும்புகளால் வெளியில் இறங்கி உணவை தேடி செல்ல முடியாததால் சேர்த்து வைத்த உணவை எடுத்து உண்டன. அதே சமயம் வெட்டுக்கிளியால் உணவை தேடி செல்ல முடியவில்லை. சேமிக்க வேண்டிய நேரத்தில் எறும்புகளை கேலி செய்து பாட்டு பாடி வம்பிழுத்த வெட்டுக்கிளியால் இரையை தேடி மழையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டது.

தங்கள் கூட்டத்தையே கேலி செய்திருந்தாலும் எறும்பு வெட்டுக்கிளி படும் கஷ்டத்தை பார்த்து பரிதாபம் கொண்டன. தாங்கள் சேமித்து வைத்த உணவில் இருந்து வெட்டுக்கிளிக்கு உணவை பகிர்ந்து கொண்டன. மழைக்காலம் முடியும் வரை வெட்டுக்கிளியையும் தங்களில் ஒருவராக பார்த்து கொண்டன.

நீதி: சோம்பல் அழிவைத் தந்து விடும்

நன்மக்கள் தங்களை எள்ளி நகையாடும் மக்களுக்கும் நன்மையே செய்வர்.


இன்றைய செய்திகள்

11.09.2024

* 3D பிரிண்டில் பஸ்ஸ்டாப்! - அசத்தும் சென்னை மாநகராட்சி!

* சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கிறது ஆஸ்திரேலியா! 16 வயதுக்கு உட்பட்டோர் Facebook, tik tok, Instagram போன்ற சமூக வலைத் தளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு.

* காஞ்சிபுரத்தில் உள்ள தனது தொழிற்சாலையை ₹666 கோடியில் விரிவாக்கம் செய்கிறது Rockwell Automation நிறுவனம்!

* நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே இன்று கடல் சீற்றத்தால் 4-வது படகையும் மீனவர்களுடன் கடல் அலை இழுத்துச் சென்றது.

* கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம். கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு.

* உலக பிரசித்திப் பெற்ற ஆப்பிள் அலைபேசி நிறுவனம் தனது i16 அலைபேசியை சென்னையில் தயாரிக்கிறது.

* புனித ஹஜ் பயணிகள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 (செப்டம்பர் 23ஆம் தேதி) வரை நீட்டித்துள்ளது இந்திய ஹஜ் குழு.

* பாரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றோருக்கு ₹75 லட்சம், வெள்ளி வென்றோருக்கு ₹50 லட்சம், வெண்கலம் வென்றோருக்கு ₹25 லட்சம் பரிசாக அறிவித்துள்ளது மத்திய அரசு.


Today's Headlines

* 3D Print Bus stop! -stunning work by Chennai Corporation! * Australia bans children from using social networking sites! The Australian government decided  to ban the use of social networking sites such as Facebook, tik tok, Instagram by those under 16 years of age.

*  Rockwell Automation expands its factory in Kanchipuram at a cost of ₹666 crore!

*  Nagercoil: Near Kanyakumari today due to the rough sea,  the 4th boat was also swept away by the tide along with the fishermen.

* Artist Library and Science Center in Coimbatore. Issue of tender for construction works.

*  The world famous Apple mobile phone company manufactures its i16 mobile phone in Chennai.

* The Haj Committee of India has extended the last date for online application of Haj pilgrims till 23.09.2024 (September 23).

* In Para Olympics the central government has announced a prize of ₹75 lakh for gold winners, ₹50 lakh for silver winners and ₹25 lakh for bronze winners.



Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...