கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-10-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.

பொருள்:வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால், அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.


பழமொழி :
Caution is the parent of safety

முன்னெச்சரிக்கையே பாதுகாப்பிற்கு பிதா.


இரண்டொழுக்க பண்புகள் : 

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுவேன்.

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே அதிக விலை கொடுத்து வாங்குவேன் .


பொன்மொழி :

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான். - சுவாமி விவேகானந்தர்.


பொது அறிவு :

1.செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது எது? -

விடை :டயலைசர்

2.சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு என்ன ?

விடை : 2 சதவீதம்


English words & meanings :

Acid-அமிலம்

Bucket-வாளி


வேளாண்மையும் வாழ்வும் :

உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


அக்டோபர் 21

ஆல்ஃபிரட் நோபெல் அவ்ர்களின் பிறந்தநாள்

ஆல்ஃபிரட் நோபெல் (About this soundAlfred Bernhard Nobel (பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 திசம்பர் 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.


நீதிக்கதை

நான்கு நண்பர்கள்

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர்.

முதல் மூவரும் சிறந்த அறிவாளிகள்; பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், சிவானந்தன் உண்பதிலும் உறங்குவதிலுமே தன் பொழுதைக் கழித்து வந்தான். அவன் ஒரு முட்டாள் என்றே மற்றவர்கள் கருதினர்.

ஒரு முறை அந்தக் கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறுகளும் ஏரிகளும் வற்றத் தொடங்கின. பயிர்கள் கருகின. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

உயிர் பிழைக்க அந்தக் கிராம மக்கள் மற்ற இடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். மற்றவர்களைப் போல் நாமும் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்  என்றான் சத்தியானந்தன். அவன் கூறியதை மற்ற நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். “சிவானந்தனை என்ன செய்வது?” என்று கேட்டான் சத்தியானந்தன்.

“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல வேண்டுமா ? அவனுக்குப் படிப்பும் இல்லை; எந்தத் திறமையும் இல்லையே” என்று தொடர்ந்து கூறினான் சத்தியானந்தன்.

“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல முடியாது. அவன் நமக்குச் சுமையாக இருப்பான்” என்று பதில் கூறினான் தர்மானந்தன்.

“அவனை இங்கேயே இருக்க விட்டு நாம் மட்டும் எப்படிச் செல்லமுடியும்? நம்முடன் வளர்ந்தவன் அவன். நாம் சம்பாதிப்பதை நம் நால்வரிடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,” என்று வித்தியானந்தன் கூறினான்.

எனவே, சிவானந்தனைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர்.  அருகிலுள்ள நகரத்தை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஒரு காடு குறுக்கிட்டது. அதன் வழியே செல்லத் தொடங்கினர்.

ஓர் இடத்தில் ஒரு விலங்கின் எலும்புகளைக் கண்டனர். வியப்படைந்த அவர்கள் அவற்றை அருகில் சென்று பார்த்தனர்.

“இவை ஒரு சிங்கத்தின் எலும்புகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று வித்தியானந்தன் கூறியவுடன் மற்ற மூவரும் அதை ஆமோதித்தனர்.

உடனே, ” நம்முடைய கல்வியறிவைப் பயன் படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, ” என்று சத்தியானந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

“இந்த எலும்புகளை என்னால் ஒன்று சேர்க்க முடியும், ” என்று கூறியவாறே சத்தியானந்தன் அந்த எலும்புகளை ஒன்று சேர்த்துச் சிங்கத்தின் எலும்புக் கூட்டை உருவாக்கினான்.

“அதற்கு இரத்தமும் தசையும் என்னால் அளிக்க முடியும்” என்றான் தர்மானந்தன் அவனுடைய திறமையால் உயிரற்ற சிங்கத்தின் முழுமையான உடல் இப்போது அவர்கள் முன்னால் கிடந்தது.

“இந்தச் சிங்கத்தின் உடலுக்கு என்னால் உயிரூட்ட முடியும்” என்று துடிப்புடன் கூறினான் வித்தியானந்தன்.

உடனே முன்னால் ஓடி வந்து சிவானந்தன் அவனைத் தடுத்தான். “வேண்டாம், வேண்டாம். நீ ஒன்றும் செய்ய வேண்டாம்.நீ இந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினால் இது நம்மைக் கொன்றுவிடும், என்று கூறியவாறே அவனைத் தடுக்க முயன்றான் சிவானந்தன்.

” ஏ. கோழையே ! என்னுடைய அறிவையும் திறமையையும் பரிசோதித்துப் பார்ப்பதிலிருந்து நீ என்னைத் தடுக்க முடியாது,” என்று கோபத்துடன் வித்தியானந்தன் கத்தினான்.

” இரு, இரு, நான் முதலில் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன், ” என்று பயந்தவாறு கூறிய சிவானந்தன், அருகில் இருந்த மரத்தின் மீது தாவி ஏறினான்.

மரத்தின் உச்சாணிக் கிளையில் அவன் ஏறி அமர்ந்த போது வித்தியானந்தன் தன் திறமையால் அந்தச் சிங்கத்தை உயிர் பெறச் செய்தான்.

பலமாகக் கர்ச்சித்தவாறு எழுந்த சிங்கம் அந்த மூன்று அறிவில் சிறந்த நண்பர்களை தாக்கியது.

தங்கள் அறிவை தவறாக பயன்படுத்தியதை நினைத்தும், தங்கள் நண்பனை முட்டாள் என எண்ணியது குறித்தும் வருந்தினார்கள்.

நீதி : கல்வியறிவைப் பயன்படுத்தி சமயோசிதமாக யோசிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

21.10.2024

* தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

* வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

* ரூ.990 கோடியில் 3 ஏஐ மையங்கள்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.

* கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததால் அந்நாடு இருளில் மூழ்கியது.

* சுல்தான் கோப்பை ஹாக்கி: முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி.

* மேஜர் லீக் கால்பந்து: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல். இன்டர் மியாமி அணி வெற்றி.


Today's Headlines

* The Tamil Nadu Pollution Control Board has issued an order restricting the time spent bursting firecrackers during Diwali in Tamil Nadu.

* The Indian Meteorological Department has informed that a storm, 'Dana,' is expected to form in the Bay of Bengal on the 23rd.

* 3 AI centers at Rs 990 crore: Information by Union Minister Dharmendra Pradhan.

* Cuba's largest power plant was destroyed, plunging the country into darkness.

* Sultan Cup Hockey: India beat Japan in the first league match

* Major League Soccer: Messi Scores Hat Trick  Inter Miami wins.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...