கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : அறத்துப்பால்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் எண்: 198

அரும்பயன் ஆயும் ஆறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள் : சொல்லுக்கு ஆற்றலுண்டு, பயனுண்டு  என்று அறிந்த பெருமக்கள் நல்ல,உயர்ந்த பயன் தராத சொற்களைக் கூமாட்டார்கள். தம் மதிப்பைக் குன்றச் செய்யும் சொற்களை ஒரு போதும் கூறார் என்பது கருத்து."


பழமொழி :
கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.     

The roots of education is bitter, but the fruits are sweet.


இரண்டொழுக்க பண்புகள் : 

1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.

2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :

"சரித்திரம் ஒரு முறை உன் பேரைச் சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும். இப்படிக்கு "" முயற்சி""."


பொது அறிவு :

1. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது?

சிலப்பதிகாரம்.

2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

கேரளா


English words & meanings :

Toothpaste - பற்பசை,

Towel - துண்டு


வேளாண்மையும் வாழ்வும் :

கரிம விவசாய இயக்கம் 1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஓர் எதிர்ப் போக்காக இது காணப்பட்டது.


அக்டோபர் 23

பீலே (Pelé) என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento; 23 அக்டோபர் 1940 – 29 திசம்பர் 2022) பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர்.காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர்.காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.


நீதிக்கதை

நன்றி மறவேல்

ஆத்தியூரில் சுப்பையா என்பவர் வாழ்ந்து வந்தார். சுப்பையா கோடீஸ்வரர். அதே நேரத்தில் ஏழைகளுக்கு தான தர்மம் செய்வதில் தலை சிறந்தவர்.

சுப்பையாவின் தானதர்மத்தை கேள்வியுற்று ஏராளமான மக்கள் அவரிடமிருந்து உதவி பெற்றுச் சென்றார்கள். சுப்பையாவும் தன்னைத்தேடி வருகின்றவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் தான தர்மங்களை செய்து வரலானார்.

நாட்கள் செல்ல செல்ல சுப்பையாவின் சொத்துக்கள் எல்லாம் தர்மங்கள் செய்தே குறைய ஆரம்பித்தன. சுப்பையாவோ அதனைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மங்கள் செய்வதிலேயே கவனமாக இருந்தார்.

சில நாட்களில் சுப்பையாவின் வீடு, நிலம் எல்லாவற்றையும் கூட மற்றவர்களுக்கே தானம் செய்துவிட்டார்.

இவரிடமிருந்து உதவி பெற்றவர்களே சுப்பையாவின் பரிதாப நிலமையைக் கண்டும் கூட எந்தவித உதவியும் செய்ய முன் வராமல் சென்று விட்டார்கள்.  தங்குவதற்கு இடம் இல்லாமல் ஓர் சத்திரத்தின் அருகே வந்தார்.

அவர் கண்கள் இருண்டு, காதுகள் அடைத்து பசி மயக்கத்தில் மிகவும் தள்ளாடினார். அந்த நேரத்தில் சத்திரத்தில் ஒரு சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சுப்பையாவின் நிலமையைக் கண்ட அவர்கள் ஏதும் தெரியாதது போல், சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தார்கள். சுப்பையா மெல்ல மெல்ல சத்திரத்தின் திண்ணையோரம் நெருங்கினார். அந்த நேரம் சமையல்காரர் வேகமாக ஓடிவந்து சுப்பையாவை அடித்து விரட்டினார்.

அந்த நேரம் சத்திரத்துக் காவலாளியானவர் சுப்பையாவைப் பார்த்துவிட்டார்.

அவர் உடனே பதறியபடி வேகமாக ஓடிவந்து சுப்பையாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். பின்னர் சமையல்காரரைப் பார்த்து “ஐயா! நன்றி கெட்டவர்களே! இந்த சத்திரம் இவர் பணத்தால் தான் கட்டப்பட்டது.

நீங்கள் கூட இவரிடம் எத்தனையோ முறை உதவி பெற்றுச் சென்றிருக்கின்றீர்கள்! உங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்தே இவர் இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டார்.

ஆனால் நீங்களோ இவர் செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் நன்றியை மறந்து இவரை அடித்து விரட்டுகின்றீர்கள் என்று கூறியபடி கோபத்துடன் சுப்பையாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை நல்லபடியாக உபசரித்தார் சத்திரத்துக் காவலாளி.

சுப்பையாவின் பசியெல்லாம் அடங்கிய பின்னர் சத்திரத்து காவலாளி “ஐயா! நானும் தங்களிடம் உதவி பெற்றள்ளேன். நீங்கள் கோயிலுக்கு வருகின்ற நேரமெல்லாம் உங்களை கவனித்திருக்கின்றேன்.

இன்றுதான் உங்களோடு பேசுகின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.உங்களோடு  பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அதனைக்கேட்ட சுப்பையா சிரித்தபடியே அந்தக் காவலாளியை நோக்கி,

“அப்பா என் பசியைப் போக்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

நீதி:ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் வாழ வேண்டும். நன்றி உணர்ச்சியோடு வாழ்ந்தால் நன்மையே நடக்கும்.


இன்றைய செய்திகள்

23.10.2024

* குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அறிவித்துள்ளது.

* போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

* நாடு முழுவதும் சாலை விபத்துகளில் தினமும் 474 பேர் உயிரிழப்பு:   4.63 லட்சம் பேர் காயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து சான்று அளித்துள்ளது உலக சுகாதார மையம்.

* 2026 காமன்வெல்த் போட்டி: கிரிக்கெட், ஆக்கி , பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கம்.

* சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்; 6000 ரன்களை கடந்த முதல் வங்காளதேச வீரராக வரலாற்று சாதனை படைத்த முஷ்பிகுர் ரஹீம்.


Today's Headlines

* The Tamil Nadu Public Service Commission has announced that the candidates should upload the missing certificates in the Group-1 examination online by November 2.

* The Madurai branch of the High Court has ordered the inclusion of the registrars of 4 universities as counter-petitioners in the case of fake Tamil education certificate case.

* 474 people die daily in road accidents across the country: 4.63 lakh people are injured, according to the central government.

* The World Health Center has certified Egypt as a malaria-free country.

* 2026 Commonwealth Games: Cricket, Hockey and Badminton are removed.

* International Test Cricket;  Mushfiqur Rahim made history by becoming the first Bangladeshi player to cross 6000 runs.



Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

National Girl Child Day on 24.01.2025 – DSE Proceedings on Awareness Activities – Attachment : Forms & Child Safety Manual at School

  தேசிய பெண் குழந்தைகள் தினம் 24.01.2025 அன்று அனுசரித்தல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து DSE செயல்முறைக...