கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2024

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : பொருட்பால்
அதிகாரம் : அவை அஞ்சாமை
குறள் எண்: 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."


பழமொழி :
  அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.   

The fearless goes into the assembly.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

புத்தக கடையில் புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது நல்ல புத்தகம் அல்ல, எந்த புத்தகம் உன்னை முன்னேற்றம் நோக்கி புரட்டி போட வைக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம்.....


பொது அறிவு :

1.நிறமாலையில் குறைவான ஒளி அலை நீளமுடைய நிறம்

விடை: ஊதா.    

2. பித்தநீர் எப்பகுதியில் சுரக்கிறது?

விடை: கல்லீரல்


English words & meanings :

Pliers-இடுக்கி,

Sewing Machine-தையல் இயந்திரம்


வேளாண்மையும் வாழ்வும் :

சில சமயங்களில் அரசாங்கம் இயற்கை விவசாயததிற்கு அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இயற்கை விவசாய முறைமைக்கு மாறினர்..


நீதிக்கதை

ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே ஒரு துறவி அமர்ந்திருந்தார்.

அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன் அந்த துறவியை பார்த்து, "ஏய் கிழவா, ஏற்கனவே இந்த வழியாக  யாராவது சென்றார்களா?" என்று சற்று அதிகாரத்துடன்

மரியாதையின்றி கேட்டான்.

அதற்குத் துறவி, "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று கூறினார். சிறிது நேரம் கழித்து வேறொருவர்  வந்து, "ஐயா இந்த வழியாக யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்குத் துறவி, "ஆம்.சற்று முன்பாக இதே கேள்வியை கேட்டுக் கொண்டு ஒருவர் சென்றார்" என்று பதில் கூறினார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து,  இன்னொருவர் வந்து  "வணங்குகிறேன் துறவியாரே! இந்த வழியாக யாரேனும் செல்லும் சப்தம் தங்களுக்கு கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டார். அதற்குத் துறவி, "மன்னரே! வணக்கம் முதலில் ஒரு வீரனும் அதற்குப் பின் ஒரு அமைச்சரும் தாங்கள் கேட்ட கேள்வியையே கேட்டுக்கொண்டு சென்றார்கள்" என்று கூறினார்.

அப்போது மன்னர் மிகவும் ஆச்சரியத்துடன், "ஐயா, தங்களுக்கு கண் பார்வை கிடையாது ஆனால் வந்தவர் வீரன் என்றும் அமைச்சர என்றும் எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று கேட்டார்.

அதற்குத் துறவி "இதை கண்டுகொள்ள பார்வை தேவையில்லை அவரவர் பேசும் முறையைக் கொண்டு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை கண்டு கொள்ளலாம்" என்றார். மேலும் "முதலில் வந்தவர் பேச்சில் கொஞ்சம் மரியாதையின்மையும் அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரமும் தங்களின் பேச்சில் பணிவும் இருக்கிறது"என்று துறவி கூறினார்.

நீதி :  நமது பேச்சே நமது நடத்தையை தீர்மானிக்கிறது.


இன்றைய செய்திகள்

04.11.2024

* வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* செம்பரம்பாக்கம் ஏரி ரூ.22 கோடியில் சீரமைப்பு: டெண்டர் கோரியது நீர்வளத் துறை.

* நோய்களை தடுத்து ஆரோக்கியமான மக்களை உருவாக்க பனிமலை, பாலைவனம், தீவாக இருந்தாலும் தடுப்பூசி சேவை வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல்.

* சீனர்கள் மீதான தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்.

* 31 அணிகள் பங்கேற்கும் தேசிய ஹாக்கி போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்.

* ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டி; இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Health Minister M. Subramanian has said that the medical camps will continue to function until the northeast monsoon ends.

*  Renovation of Chembarambakkam lake at Rs 22 crore: Water resources department calls for tender.

* The central government informed that vaccination services are provided even in mountains, deserts and islands to prevent diseases and create healthy people.

*  Pakistan must curb terror attacks on Chinese: Chinese govt insists

*   National Hockey Tournament in which 31 team participate will Start today in Chennai.

* Hilo Open Badminton Tournament;  Indian player Malavika Bansod advances to final.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...