கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் : பொருட்பால்
அதிகாரம் :நட்பு
குறள் எண்: 818

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
பொருள்: தம்மால் முடியக்கூடிய செயலையும், முடிக்க முடியாதபடி கெடுப்பவரின் நட்பை, அவர் அறியும்படி எதுவும் சொல்லாமலே தளரச் செய்து கை விடுதல் வேண்டும்."

பழமொழி :
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.   

A car without a linch-pin will not move even three spans.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

நடக்கும் முன்னே.. நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள், நடந்த பின்னே ... நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.


பொது அறிவு :

"1.கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் எது?

விடை: ஆந்த்ராக்ஸ்.     

2. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?

விடை: சுரதா


English words & meanings :

Asafoetida-பெருங்காயம்,

Basil-துளசி


வேளாண்மையும் வாழ்வும் :

வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் தரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.


நவம்பர் 05

விராட்கோலி அவர்களின் பிறந்தநாள்

விராட் கோலி பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது , 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, 2016மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது . இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் பத்மஶ்ரீ விருது வழங்கியது.. துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவது மட்டுமல்லாது இந்தியன் சூப்பர் லீக் போட்டித் தொடரில் எஃப்சி கோவா அணி,சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் தொடரில் ஐக்கிய அரபு ராயல்ஸ் மற்றும் இந்திய மற்போர் போட்டித் தொடரில் பெங்களூரு யோதாஸ் அணிகளை இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரை ஈஎஸ்பிஎன்அறிவித்தது. மேலும் மதிப்புமிக்க தடகள வீரர்களில் ஒருவராக இவரை போர்ப்ஸ் இதழ் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.[]ஏப்ரல் 22, 2021இல் ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.


உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)

உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் சுனாமியின் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.


நீதிக்கதை

ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நீரால் நிரம்பியது. ஏரியின் குளிர்ச்சியை தாங்க முடியாத தவளை ஒன்று, மழை நின்றவுடன் கிணற்று நீர் வெதுவெதுப்பாக இருக்குமே என நினைத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தது.

பல காலமாக அந்த கிணற்றில் வாழ்ந்து வந்த மற்றொரு தவளை இந்த புதிய தவளையை வரவேற்றது. மேலும்,பொந்தில்  சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை எடுத்து புதிய  தவளைக்கு கொடுத்து மகிழ்ந்தது.

கிணற்றில் இருந்த மற்ற தவளைகளுக்கு புதியதாக வந்த தவளையை பிடிக்கவில்லை.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்பொழுது கிணத்து தவளை ஏரி தவளையிடம், "நண்பனே! இத்தனை நாள் நீ எங்கே தங்கி இருந்தாய்?" என்று கேட்டது.

அதற்கு புதிய தவளை,  நான் ஏரியில் தங்கி இருந்தேன் அங்கு  மீன், முதலை,ஆமை போன்றவை வாழ்கின்றன. ஏரி இந்த கிணற்றை விட மிகப்பெரியதாக இருக்கும்" என்று கூறியது.

அதற்கு அந்த கிணற்றுத் தவளை மிகவும் கோபத்துடன் "நண்பா நீ பொய் சொல்கிறாய். இந்த கிணற்றை விட மிகப்பெரிய நீர் நிலை இந்த உலகத்திலேயே இல்லை  என்று கூறியது.ஏரி தவளை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.

எல்லா கிணற்றுத் தவளைகளும் ஏரி தவளையை பார்த்து," நீ பொய்யன். நீ பொய் சொல்கிறாய் கிணற்றை விட பெரிய நீர் நிலை உலகில் எதுவும் இல்லை என்று  ஒரு சேர சத்தமிட்டன.

அப்போது ஒரு பெண்மணி தண்ணீரை எடுப்பதற்காக வாழியை கிணற்றுக்குள் இறக்கினார். அந்த வாளிக்குள் ஏறி  கிணற்றில் இருந்து வெளியே வந்தது ஏரி தவளை,

குளிர்ச்சியான தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏரியை நோக்கி சென்றது.

நீதி: முட்டாள்களுடன் இருப்பதை விட தனியே இருப்பதே சிறந்தது


இன்றைய செய்திகள்

05.11.2024

* டிசம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

* 'டிஜிட்டல் அரெஸ்ட்' விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது என்று அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது.

* இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி, 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு.

* பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

* தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: முதல் நாளில் கர்நாடகா, மத்திய பிரதேச அணிகள் வெற்றி.


Today's Headlines

* Tamil Nadu Legislative Assembly to meet in first week of December: Official announcement soon.

* Weather forecast: There will be chance of rain in Tamil Nadu for next 6 days.

* Public should be aware of 'Digital Arrest' issue.  The enforcement department has advised that nobody should be got  cheated through cell phones and social media.

* There is  volcano eruption in Indonesia: 9 dead and  10,000 became homeless

* Paris Masters International Tennis Tournament: Alexander Zverev of Germany won the men's singles title.

*  National Senior Hockey Tournament: Karnataka, Madhya Pradesh won on first day.



Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...