கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

  

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

"பால் :பொருட்பால்

அதிகாரம்: பழைமை

குறள் எண்:806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

பொருள்:உரிமைவாழ்வின் எல்லையில்
நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்."


பழமொழி :
தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.  

Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் : 

*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.



பொன்மொழி :

"உன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எந்த தவறும் இல்லாமல் உன்னால் அதை நிச்சயம் செய்ய முடியும்."


பொது அறிவு :

1. கத்தியால் எளிதாக வெட்டக்கூடிய உலோகம் எது?

விடை: சோடியம்     

2. . கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும்?

விடை: மஞ்சள்


English words & meanings :

Cinnamon-இலவங்க பட்டை,

Clove-கிராம்பு



வேளாண்மையும் வாழ்வும் :

நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)


நவம்பர் 07

மேரி கியூரி அவர்களின் பிறந்த நாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.


சி.வி.இராமன் அவர்களின் பிறந்தநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.


அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்


அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.


நீதிக்கதை

ஒரு மாபெரும் கூட்டம்.புகழ் பெற்ற இரண்டு பேச்சாளர்கள் இடையே போட்டி யாருடைய பேச்சுக்கு அதிக கைத்தட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு.

கூட்டம் துவங்குவதற்கு முன் இரு பேச்சாளர்களும் ஒரு அறையில் அமர்ந்து அந்தக் கூட்டத்தை பற்றி  பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வரவே அவர் எழுந்து பேசிக்கொண்டே வெளியில் சென்றார் ஆனால் அவர் எழுதிய அன்றைய பேச்சுக்கான குறிப்புகளை மேஜை மேலே மறந்து விட்டு சென்றார்.

அப்போது அமர்ந்திருந்த மற்றொரு பேச்சாளர் அந்த குறிப்புகளை எடுத்துப் பார்த்தார். அவர் தயாரித்த குறிப்புகளை விட அந்த குறிப்புகள் மிகவும் அருமையாக இருந்தது.

கூட்டம் துவங்கியது.குறிப்புகளை எடுத்துக் கொண்டவர்க்கே முதலில் பேச வாய்ப்பு அமைந்தது. அவரும் தன்னுடைய  குறிப்புகளை விட்டுவிட்டு   எதிர்ப்பேச்சாளர் பேச வைத்திருந்த குறிப்புகளையே தன்னுடைய குறிப்புகள் போல மிகவும் அற்புதமாக பேசி முடித்தார்.

எதிர் பேச்சாளருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. அடுத்து அவர் பேச வேண்டும். அவர் என்ன பேசுவது என்று அவருக்கு தெரியவில்லை. மெதுவாக எழுந்து சென்று, மைக்கை பிடித்து, "முதலில் எனக்கு முன்னால் பேசியவருக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு தொண்டை கட்டு என்னால் சரியாக பேச முடியாது. எனது உரையை நீங்கள் வாசிக்க முடியுமா? என்று கூட்டம் துவங்குவதற்கு முன் கேட்டேன். அவர் பெருந்தன்மையாக ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்" என்று  கூட்டத்தை பார்த்து கூறி அமர்ந்தார்.

நீதி :  சூழ்நிலைக்கேற்ப செயல்படுபவன் தான் புத்திசாலி


இன்றைய செய்திகள்

07.11.2024

* தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* மத நல்லிணக்கத்துக்காக தமிழக அரசால் வழங்கப்படும் கோட்டை அமீர் நல்லிணக்கப் பதக்கத்துக்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

* அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய வீரர் ரிஷப் பண்ட் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Government of Tamil Nadu has approved the Artificial Intelligence Initiative report and issued an ordinance allocating Rs.13.93 crore to implement the initiative.

*  Eligible candidates can apply for the Kottai Ameer Reconciliation Medal given by the Tamil Nadu government for religious harmony by November 25.

* Union Minister Kiran Rijiju has said that the winter session of Parliament will begin on November 25.

* Republican candidate and former president Donald Trump won the US presidential election.

* Women's Tennis Championships: American Coco Cobb advances to semifinals

* ICC Test Rankings: Indian batsman Rishabh Pant moves up to 6th place



Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...