கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Immediate implementation of Old Pension Scheme - TNPGTA


---------------------------------------

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - TNPGTA மாநிலக் கழகத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கண்டன அறிக்கை மற்றும் பத்திரிக்கை செய்தி -10.11.24

--------------------------------------


*பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் சார்ந்து ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசு ஆனது நிதிசாராத கோரிக்கைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்  என்ற அடிப்படையில் வெளிவந்திருக்கும் செய்தி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார சமூக பாதுகாப்பான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு எதிரான முடிவாக இருப்பதால் ஆட்சி பொறுப்பிற்கு வந்து மூன்றரை  ஆண்டு காலத்திற்கு மேலாக  தருவோம் தருவோம் என்று நம்பிக்கை அளித்து ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றிய அரசாக இருப்பதை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஏற்க இயலாது. தமிழக அரசுக்கு TNPGTA பேரியக்கத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.*


எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தேர்தல் அறிக்கை 309 ல் வெளியிட்டு விட்டு, தற்போது அதற்கு மாறான நிதிசாராத கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறுவது என்பது நம்பிக்கை மோசடியாக பார்க்கிறோம்.


*அறிஞர் அண்ணா காலத்திலிருந்து வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குவதாக அறிவித்துவிட்டு, மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகையை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக கொடுக்கிறோம் என்று அறிவித்துவிட்டு தற்போது அரசின் சக்கரங்களாக விளங்கும் அடி நாதமாக விளங்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களை ஏமாற்றும் விதமாக, தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக -"நாங்கள் செய்யாமல் யார் செய்வார்கள்"* என்று சொல்லிக்கொண்டே தள்ளி தள்ளி போட்டுக்கொண்டு அடுத்த கட்ட தேர்தல் வேலைக்கு தயாராகி விட்டது தமிழகஅரசு.

அடுத்த கட்ட அரசு அமைப்பதற்கு தேர்தல் அறிக்கைக்கு தேர்தல் பணிக்கு குழு அமைத்திட  தொடங்கிவிட்டது.  


*20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தின் மீது எந்தவிதமான உறுதியான முடிவினை அறிவிக்காமல், இழுத்தடிப்பு செய்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோபங்களை தணிக்கும் செயலாக மாற்றி போராட்டவேகத்தை குறைப்பது என்பது தொடர்கதையாக இருக்கிறது.*


 அதிமுக அரசு அதன் தொடர்ச்சியாக திமுக அரசு என  மாறி மாறி  நம்மை ஆட்சி புரிந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்களை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்ல.. தொடர்ந்து வாய்ஜாலமாக பேசி ஏமாற்ற நினைத்தால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்..


*கடந்த அதிமுக அரசானது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எதிராக பேசியதும், தற்போதைய அரசு நம்பிக்கை அளித்து இழுத்தடிப்பு செய்யும் துரோகத்தையும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..*


 *பென்ஷன் என்ற வார்த்தையை உச்சரிக்காத ஒன்றிய அரசு கூட பழைய ஓய்வூதிய திட்டம் என்ற முறையான திட்டத்தை அறிவிக்காவிட்டாலும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்ற ஏற்கனவே இருந்த நிலைக்கு ஒரு நிலை முன்னோட்டமாக அறிவிப்பு எடுத்திருக்கும் நிலையில், தமிழக அரசானது எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் தமிழக ஆசிரியர் அரசு ஊழியரிடம் இருந்து ஓய்வூதிய திட்டத்திற்காக பிடிக்கப்பட்ட பணத்தையும் PFRDA லும் சேர்த்திடாமலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பதற்கு எந்த தடையும் இல்லாத நிலையிலும், பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராடாத பல மாநிலங்களில் கூட பழைய ஓய்வூதிய திட்டம்  அமல்படுத்தியிருக்கப்பட்டிருக்கும் வேளையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக, இருபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்த நிலையில் அதையெல்லாம் நாங்கள் புரிந்துள்ளோம் நடைமுறைப்படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு தற்போது ஏமாற்றும் துரோக வேலையை மறைமுகமாக இழுத்தடிப்பு மூலம் தமிழக அரசு ஆனது தமிழக மண்ணில் அரங்கேற்றி வருவதை ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.*


கார்ப்பரேட் நலன்களுக்காகவும் பெரும் முதலாளி நலன்களுக்காகவும் செயல்படும் அரசாக அமைந்து தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுக்கும் அரசாக இருக்கும் என்றால் தொழிலாளர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை..


*தமிழக மண்ணில் தீவிரமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறும்.. அப்படிப்பட்ட தீவிரமான போராட்டம் நடைபெறுவதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முழு முயற்சியும் முன்னெடுப்பும் எடுக்கும்..*


*அரசுக்கு ஆதரவாக ஜால்ரா அடிக்கும், நன்றிகளை மட்டும் தெரிவித்துக் கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை  அம்பல படுத்துவோம்..*

*உண்மையான போராட்ட குணம் கொண்ட ஜாக்டோ ஜியோவாக புனரமைக்கப்பட்டு வீரஞ்செறிந்த போராட்டங்களை அறிவிப்பு செய்து போராட்டத்தின் மூலம் கோரிக்கைகளை வெல்வதற்கு திட்டமிடல் செய்வோம்.*


அதேபோன்று *இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவிற்கு  கண்டனங்களும், அதே வேளையில் கோரிக்கை அறிவிப்பு மாநாடாக டிசம்பர் 15ஆம் தேதி தமிழக அரசு ஆனது சிபிஎஸ்  ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி போராட்ட அறிவிப்பு செய்வது என்று முடிவாக்கப்பட்டுள்ளது.*

*தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக போராட்ட குணம் உள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்புகளை வலுப்படுத்தி தீவிரமான போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டம் ஊதிய முரண்பாடு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவிக்காமல் வருகின்ற தேர்தலில் வெல்ல முடியாது என்கின்ற நிலைக்கு தமிழக மண்ணில் போராட்டம் கட்டி எழுப்பப்படும் என்ற செய்தியை TNPGTA பேரியக்கத்தின் மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்திக்கொள்கின்றோம்..*


*ஒன்றுபடுவோம்..* *போராடுவோம்..*

 *வெற்றி பெறுவோம்..*

*இறுதி வெற்றி நமதே.!*

நன்றி 


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


மாநில கழகத்தின் சார்பாக...

*பொ. அன்பழகன்* 

மாநில பொதுச் செயலாளர்

*TNPGTA*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...