கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Old Pension Scheme லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Old Pension Scheme லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தாகம் - நியாயமும் நிலைப்பாடும்

 

 

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தாகம் : நியாயமும் நிலைப்பாடும் - மு.சீனிவாசன் - தீக்கதிர் நாளிதழ் சிறப்புக் கட்டுரை


Government employees' thirst for pension - Justice and position


தமிழ்நாடு அரசின் 2025-26 பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme), சரண் விடுப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளின் நிறைவேற்றத்தை எதிர்பார்த்திருந்தனர்.


வாக்குறுதிகளும் ஏமாற்றமும்

தற்போதைய ஆட்சி 2021 தேர்தலில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் 309 முதல் 318 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அச்சடித்து வெளியிட்டனர். இந்த உறுதிமொழிகள் ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, இதனால் 11 தொகுதிகளில் அரசு ஊழியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக மாறின. கடந்த நான்கு ஆண்டுகளில் கொரோனா, வெள்ளம், புயல் என்று பல்வேறு காரணங்களால் கோரிக்கைகள் தள்ளிப்போடப்பட்டன. இந்த இடர்களின் போது அரசு ஊழியர்கள் அரசுக்கு உறுதுணையாக நின்றனர். கொரோனா காலத்தில் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறை ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றினர், பலர் உயிரிழந்தனர். ஆனால் இந்த இறுதி பட்ஜெட்டிலும் ஓய்வூதியத்திற்கு பதிலாக “ஒருங்கிணைந்த ஓய்வூதிய ஆய்வுக்குழு” மற்றும் சரண் விடுப்பு 01.04.2026 முதல் என்ற அறிவிப்பு ஊழியர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.


ஓய்வூதியம்: உரிமையா, கருணையா?

1950 முதல் 2003 வரை பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. இது அரசின் கருணைத் தொகை அல்ல; ஊழியர்களின் உரிமை. 1950 ஏப்ரல் 17 அன்று ஒன்றிய அரசின் முதலாவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் பங்களிப்பு சேமநலத்திட்டம் பொது சேமநல நிதி என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசின் பங்களிப்பு தொகையை அரசே பயன்படுத்திக் கொண்டு, அதற்குப் பதிலாக ஊழியர் ஓய்வு பெற்ற பின் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிதிச்சுமை குறைப்பு அல்ல, மாறாக அரசின் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதே ஆகும். 2003 முதல் இன்று வரை புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 80,000 கோடி ரூபாய் அரசின் கைவசம் உள்ளது. அதன் வட்டி விகிதமே பழைய ஓய்வூதியச் செலவினத்தை ஈடுகட்டும். மேற்கு வங்காளம் இன்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கடைப்பிடிக்கிறது, பஞ்சாப், கோவா, ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மீண்டும் பழைய திட்டத்திற்கு மாறியுள்ளன.


சரண் விடுப்பின் அவசியம்

தமிழக அரசுத் துறையில் 4.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால் தற்போதைய ஊழியர்கள் கடும் பணிச்சுமையில் உள்ளனர். ஒவ்வொரு ஊழியரும் இரண்டு அல்லது மூன்று நபர்களின் வேலையை செய்ய வேண்டியுள்ளது. அலுவலக நேரத்திற்குப் பிறகும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் கூட அலுவலகங்கள் முழு அளவில் இயங்குவது வழக்கமாகிவிட்டது. இதனால் பணிச்சுமை, மன அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. இவர்களால் எடுக்க முடியாத விடுப்புகளுக்கான சரண் விடுப்புத் தொகையை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடுவது நியாயமற்றது. பெரும்பாலான ஊழியர்கள் மே-ஜூன் மாதங்களில் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக இத்தொகையை எதிர்பார்த்திருக்கின்றனர். எனவே, சரண் விடுப்புத் தொகையை மறுப்பது, அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்விக்கு தடையாக அமையும்.


ஒப்பந்த ஊழியர்களின் நிலை

சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் போன்ற ஊழியர்கள் தொகுப்பூதியம், மதிப்பூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது. குறிப்பாக, 40 ஆண்டுகளாக பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தில் வெறும் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்குவது அநீதியானது. அவர்கள் குறைந்தபட்சம் ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.


கருணை அடிப்படை நியமனம்

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக வழங்கப்படும் கருணை அடிப்படை நியமனம் 25% இருந்ததை தற்போதைய அரசு 5% ஆக குறைத்துள்ளது. இது மிகவும் நியாயமற்றது. எனவே, கருணை அடிப்படை நியமனத்தை மீண்டும் 25% ஆக உயர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாகும்.


எதிர்காலப் போராட்டங்கள்

அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 25.02.2025 அன்று 4.5 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 13.03.2025 அன்று முதலமைச்சரின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் 14.03.2025 பட்ஜெட் அறிவிப்புகள் ஏமாற்றத்தை அளித்தன. இதையடுத்து, 23.03.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 1988, 2003, 2016 போன்ற வரலாற்றுப் போராட்டங்கள் உருவாகும் என எச்சரிக்கப்படுகிறது. “வெளிப்பூச்சால் ஒரு கட்டடத்தை நிலைநிறுத்திவிட முடியாது” என்பதால், உறுதியான நடவடிக்கைகளை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். “உங்களால்தான் இந்த அரசு, எனவே உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான் மறுக்கவில்லை, மறைக்கவில்லை, மறுக்கவில்லை” என்ற முதலமைச்சரின் உறுதிமொழியை அரசு ஊழியர்கள் நம்பி காத்திருக்கின்றனர். “என்று தணியும் எங்கள் ஓய்வூதிய தாகம், என்று புரியும் எங்கள் கோரிக்கைகளின் நியாயம்” என்ற கேள்வி அரசின் முன் உள்ளது. கனவு நிறைவேறுமா, அல்லது களம் காண்பதா என்பதை  அரசு தீர்மானிக்க வேண்டும், இல்லையேல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தீர்மானிப்பார்கள்.


DMK deceived 60 lakh government employees, teachers and their families in Old Pension Scheme Promise - PMK leader Dr. Anbumani Ramadoss



7 மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 60 லட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஏமாற்றி விட்டது - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேட்டி 


While 7 states are implementing the Old Pension Scheme, the DMK, which won the last election by winning the votes of 60 lakh people including government employees, teachers and their families, has deceived them - Interview with PMK leader Dr. Anbumani Ramadoss


ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 60 லட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று திமுக ஏமாற்றி விட்டது - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




Why do we need the Old Pension Scheme?

 


ஏன் வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்? 


Why do we need the Old Pension Scheme?


பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும் என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன் இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.



​சாத்​தியம் உண்டு: உண்மை​யில், பழைய ஓய்வூ​தியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்​படுத்து​வதில் தமிழ்நாடு அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. இப்போது பணியில் இருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்​தி​லும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூ​தியத் திட்டத்​திலும் உள்ளனர்.


ஊழியர்​களின் தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய நிதியமாக வைத்துக்​கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூ​தியச் செலவை அதன் வட்டியி​லிருந்து ஈடுகட்​டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி கிடைக்​கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும்.



இன்றைய நிலவரப்படி, ஏற்கெனவே ஓய்வு பெற்றுப் பழைய ஓய்வூ​தியம் பெறுவோர் 6.97 லட்சம் பேர். இவர்களுக்கான ஓய்வூ​தியச் செலவு 2024-25இல் ரூ.37,663 கோடி. இது அரசின் மொத்தச் செலவான ரூ.3.48 லட்சம் கோடியில் 10 சதவீதம்​தான். புதிய ஓய்வூ​தியத் திட்டத்தில் உள்ளவர்​களில் 7,738 பேர் 2023-24இல் ஓய்வு​பெற்று​விட்​டனர். சராசரியாக 8,000 பேர் ஓய்வு பெறுவர் என்றால், பழைய ஓய்வூ​தி​ய​தா​ரர்​களில் இது ஒரு சதவீதம்​தான். ஓய்வூ​தியச் செலவான ரூ.37,763 கோடியிலும் இது ஒரு சதவீதம்​தான்.




ஏன் வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?

By ஆர்.இளங்கோவன்Modified: 03 Mar, 25 06:37 am



பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும் என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன் இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.



​சாத்​தியம் உண்டு: உண்மை​யில், பழைய ஓய்வூ​தியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்​படுத்து​வதில் தமிழக அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தி​லும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூ​தியத் திட்டத்​திலும் உள்ளனர்.


ஊழியர்​களின் தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய நிதியமாக வைத்துக்​கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூ​தியச் செலவை அதன் வட்டியி​லிருந்து ஈடுகட்​டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி கிடைக்​கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும்.



அதாவது ரூ.376 கோடிதான் கூடுதல் செலவாகும். இதனை அரசு கையிலிருக்கும் நிதிய வட்டியான ரூ.2,590 கோடியி​லிருந்து ஈடுகட்​டலாம். ஆனால், அதைச் செய்யாமல் பழைய ஓய்வூ​தியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்​வதற்குக் குழு அமைக்​கப்​படுவதை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்​சுவதுபோல ஊழியர்கள் உணர்கின்றனர். மேலும், அறிக்கை தர அந்தக் குழுவுக்கு 9 மாதங்கள் அவகாசம் கொடுத்​திருப்​பதும் அதிருப்தியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது.



தமிழ்நாடு அரசு செய்யும் தவறு: மத்திய அரசு ஊழியர்​களுக்கு இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்​படுத்​தவில்லை. மத்திய அரசு ஊழியர் மறைந்​தால், அவரது குடும்பத்​துக்குப் பழைய ஓய்வூதிய விதிகளில் உள்ள குடும்ப ஓய்வூ​தி​ய​மும், இறப்புப் பணிக்​கொடையும் வழங்கப்​படு​கின்றன. ஊனமுற்று விருப்ப ஓய்வில் சென்றால் பழைய ஓய்வூதிய விதிகளில், ‘இன்வேலிட்’ ஓய்வூ​தி​யமும் பணிக்​கொடையும் கிடைக்​கின்றன.


ஓய்வு​பெறு​பவருக்குப் பணிக்​கொடையும் ‘ஆனுவிட்டி’ (ஆண்டுத் தொகை) வடிவில் மாதந்​தோறும் உத்தர​வாதம் இல்லா​விட்டாலும் ஓர் ஓய்வூ​தியம் கிடைக்​கிறது. அரசுப் பங்களிப்பு 14% கிடைக்​கிறது. ஓய்வு​பெற்றால் 60% எடுத்​துக்​கொள்​ளலாம். 40% ஆனுவிட்​டியில் போட்டு, இறந்தபின் அந்த 40% குடும்பத்​துக்குத் திரும்பக் கிடைக்​கும். தமிழ்நாடு அரசு இதில் எதையும் செய்யாமல் மொத்தத் தொகையையும் கொடுத்து அனுப்புகிறது.



கடந்த 2024 மே மாதம் வரை ஓய்வு, இறப்பு ஆகிய காரணங்​களால் 38,129 பேர் பணியில் இல்லை. மாதந்​தோறும் ஒரு தொகை கிடைக்காத​போது, அதைப் பங்களிப்பு ஓய்வூ​தியம் என்று சொல்வதில் அர்த்​தமில்லை. பணிக்​கொடைச் சட்டப்படி அனைவருக்கும் பணிக்கொடை தந்தாக வேண்டும்.


பழைய ஓய்வூ​தியப் பலன்கள்: ஆனாலும் புதிய ஓய்வூ​தியம் பழைய ஓய்வூ​தி​யத்​துக்கு ஈடாகாது. பழைய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள் பணிக்கு மாநிலத்​திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கிறது. கம்யூட்​டேஷன், குடும்ப ஓய்வூ​தி​யமும் கிடைக்கிறது. குறைந்தபட்ச ஓய்வூ​தியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850 கிடைக்​கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல் ஓய்வூ​தியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவை. புதிய திட்டத்தில் இல்லை.



இதற்காக நடத்தப்பட்ட பலகட்டப் போராட்​டங்களுக்குப் பிறகு, உத்தர​வாதமான 50% ஓய்வூ​தியம்; அதில் 60% குடும்ப ஓய்வூ​தியம்; குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000; அகவிலைப்​படியும் உண்டு எனக் கூறி ஒருங்கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு​வந்தது. அது ஓய்வூதிய முறையின் நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்கு​கிறது. ஒருங்கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​தில், ஊழியரின் 10 சதவீதத்தோடு அரசும் 10% தரும். இரண்டும் சேர்ந்து ‘தனிநபர் கார்பஸ்’ ஆகும். அரசு போடும் 8.5% ‘பூல் கார்பஸ்’ எனப்படும். தனிநபர் கார்பஸ் சந்தையில் முதலீடு செய்யப்​படும். இந்த முதலீட்டுத் தொகைக்கு உத்தர​வாதமில்லை.


ஓய்வு பெறும்போது ஊழியரின் தனிநபர் கார்பஸ் முழுமையாக இருக்க வேண்டும். நடுவில் பணம் எடுக்​காமல், ஒழுங்கான நேரத்தில் கட்டி, சந்தை நிலையாக இருந்தால் உங்கள் கார்பஸ் என்னவாக இருக்குமோ அதற்கு ‘பெஞ்ச்​மார்க் கார்பஸ்’ என்று பெயர். இதனை பி.எஃப்​.ஆர்​.டி.ஏ.தான் தீர்மானிக்​கும். அதற்கு ஒரு வரையறையும் இல்லை என்பது கவனிக்​கத்​தக்கது.


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள்: ஓய்வு பெறும்போது பணிக் காலம் 25 ஆண்டுகள் இருந்​தால், நேராக 12 மாத சராசரி சம்பளத்தின் 50% ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​காது. தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். தனிநபர் கார்பஸ் முழுவதையும் அரசின் பூல் கார்பஸுக்குத் தாரை வார்க்க வேண்டும். அது திரும்பக் கிடைக்​காது. அப்போதுதான் 50% ஓய்வூ​தியம் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், அதே விகிதத்தில் ஓய்வூ​தி​யமும் குறையும். தனிநபர் கார்பஸ் சந்தையில் வீழ்ந்து​விட்டால் உங்கள் ஓய்வூ​தி​யமும் வீழ்ந்து​விடும் அபாயம் உண்டு.


ஓய்வு பெறும்போது பணிக்​காலம் 10 ஆண்டுகள் என்றால் சம்பளத்தில் 20%தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும். குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000 என்பது தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருந்​தால்தான் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், குறைந்தபட்ச ஓய்வூ​தியமான 10,000 கிடைக்​காது. தனிநபர் கார்பஸிலிருந்து 60% எடுத்​துக்​கொள்​ளலாம். ஆனால், உங்கள் ஓய்வூ​தியம் 60% குறைந்து​விடும். அதாவது, ஓய்வூ​தியம் ரூ.10,000 என்றால் அதில் 60% குறைந்து, ரூ.4,000தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும்.


அதேபோல் குடும்ப ஓய்வூ​தியம் 60% என்ற கணக்கின்படி ஓய்வூ​தியம் ரூ.4,000 என்றால், அதில் 60% ரூ.2,400தான் கிடைக்​கும். குடும்ப ஓய்வூ​தி​யத்​துக்குக் குறைந்த​பட்சம் ரூ.10,000 என்கிற உத்தர​வாதம் கிடையாது. எனவேதான், மத்திய அரசு இதனை ஓய்வூதியம் என்று குறிப்​பி​டாமல் ‘பே அவுட்’ என்கிறது.


விருப்ப ஓய்வு: விருப்ப ஓய்வு விவகாரத்தில் விநோதமான விதிமுறை சேர்க்​கப்​பட்​டுள்ளது. அதாவது, 21 வயதில் பணிக்கு வரும் ஒருவர் 25 ஆண்டுகள் பணி செய்திருந்​தால்​தான், விருப்ப ஓய்வில் செல்ல முடியும். இதன்படி, அவர் தனது 46 வயதில் விருப்ப ஓய்வில் சென்றால், அவருக்கு எப்போது ஓய்வு வயது 60 ஆகிறதோ அப்போது​தான். அதாவது, 14 ஆண்டுகள் கழித்துதான் ‘பே அவுட்’ கிடைக்கும். இப்படி ஒரு விநோத விதிமுறை ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


மத்திய அரசு ஊழியர்​களுக்கு அறிவிக்​கப்​படும் அதே சதவீதத்தில் அகவிலைப்படி கிடைக்​காது. 1.4.2025-க்குப் பின் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கு​வார்கள். அகவிலைப்​படியை மத்திய ஆவணப் பாதுகாப்பு முகமைதான் அறிவிக்கும் (central record keeping agency), மத்திய அரசல்ல பழைய ஓய்வூ​தியத் திட்டத்தில் இருப்​பதில் என்னவெல்லாம் புதிய ஓய்வூ​தி​யத்தில் இல்லை என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோமோ அவை எதுவும் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​திலும் கிடையாது. எனவேதான் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூ​தியத் திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்து​கிறார்கள். அரசு இதில் உரிய முடிவை எடுக்க வேண்டும்!


நன்றி : இந்து தமிழ் திசை நாளிதழ் 03.03.2025



CPS Abolition Movement Announces Continued Protest Demanding Implementation of Old Pension Scheme


 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு இயக்கம் தொடர் போராட்டம் அறிவிப்பு


CPS Abolition Movement Announces Continued Protest Demanding Implementation of Old Pension Scheme


தமிழக அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.


நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.


2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.


வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.





Comparison of UPS , NPS & OPS



ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் - ஒப்பீடு


Unified Pension Scheme, New Pension Scheme and Old Pension Scheme - Comparison


Comparison of UPS , NPS & OPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Why another plan to have alternate to the Old Pension Scheme?


பழைய ஓய்வூதியத் திட்டம் இருக்க வேறு திட்டம் எதற்கு?


Why another plan to have alternate to the Old Pension Scheme?


தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் பொருளாதார புள்ளிவிவர கணிப்பின்படி, 2031 இல் முதியோா்களின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, முதுமை காரணமாகப் பிறரைச் சாா்ந்திருப்போா் எண்ணிக்கை 2031-இல் இது 20.1 % ஆக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.


இக் காலக்கட்டத்தில், 60 வயதைக் கடந்த பணி நிறைவு பெறும் மூத்த குடிமக்கள் மீது அரசு கவனம் அளிப்பது அவசியமாகிறது. ஆனால் அரசோ, அத்தகையோா் பாதிக்கப்படும் வகையில் தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருப்பது என்பது மிகவும் வருந்தத்தக்கது. முறைசாா்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே பழையபடி ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிறர் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அது குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.



ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என்பது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விரிவான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 1, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்கான அரசாணையை இந்திய நிதி அமைச்சகம் சனவரி 25, 2025 அன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இனிமேல் ஒன்றிய அரசுப் பணியில் சேரும் அரசு ஊழியர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறினால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஏற்கெனவே உள்ள தொகை, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டக் கணக்கிற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.



1.4.2025 முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி 14%_லிருந்து 18.5 விழுக்காடாக அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ் இரண்டு கட்டமைப்பு நிதிகள் (Corpus Funds) உருவாக்கப்படும் என்றும் தனிநபர் கட்டமைப்பு நிதிக்கு அரசு ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 10% பங்களிப்பை வழங்குவதற்கு ஈடாக அரசும் அதற்கு சமமாக பங்களித்து வருவது அறியத்தக்கது. இது தவிர, அரசு கூடுதலாக 8.5% பங்களிப்புத் தொகை இதற்கு வழங்குகிறது. இவ்விரு நிதிகளை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) நிர்வகிக்கும்.


2004 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள். ஒன்றிய அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த பின் அதனை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது (UPS) தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் செயல்படும் மாற்றுத் திட்டமாகும். பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் முக்கிய நடைமுறை சிக்கல்களைக் களைந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் ஓய்வூதியர்களுக்கு நிதி நிலைத்தன்மை மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது.


இதன் தகுதிகளாக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு (VRS) பெறுபவர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் ஆவர். பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது பணியில் இருந்து தானாக விலகியவர்களுக்கு இந்த ஓய்வூதியம் பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணி முடித்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% இந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமும், 25 ஆண்டுகளுக்குக் குறைவான காலத்திற்குப் பணி செய்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. 10 அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுபவர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 10,000 ஓய்வூதியம் மட்டுமே கிடைக்கப் பெறுவார்கள்.



தவிர, இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு, அவரது மனைவி/கணவருக்கு அவர் ஏற்கனவே பெற்று வந்த உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியம் கிடைக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்துடன் வழக்கமான அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எண்ணத்தக்கது. 


இதனைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இவையனைத்தும் தேன் தடவிய சுரண்டல் வார்த்தைகள் ஆகும் என்பதை மறந்து விடக்கூடாது. பணி செய்யும் காலத்தில் ஊழியர்களின் உழைப்பின் பலனை மாதந்தோறும் முழுதாகக் கிடைக்கச் செய்யாமல் அதன் ஒரு பகுதியை வேண்டுமென்றே சுரண்டி, அதற்கு சமமாக பங்களிப்பு செய்வதும் குறைந்த வட்டி அளிப்பதும் மக்கள் நலன் சார்ந்த அரசு செய்யும் நற்காரியம் ஆகாது. 


பணியின்போது மாத ஊதியமும், பணிநிறைவின்போது ஓய்வூதியமும் பெறுவதென்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகள் ஆகும். இதில், 'நீ நெல் கொண்டு வா!; நான் உமியுடன் கொஞ்சம் நொய்யும் தருகிறேன்' என்பதெல்லாம் சரியானதாக இருக்க முடியாது. ஒன்றிய அரசு ஏற்கெனவே நடைமுறைபடுத்தி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் காணப்படும் பங்களிப்பு ஓய்வூதியத்தில் வழங்கப்படும் பணிக்கொடையின் பலனை தமிழ்நாட்டில் திரிசங்கு நிலையில் உள்ள 1.4.2003 இல் பணிநியமனம் பெற்று பணி ஓய்வு பெற்றவர்கள் யாரும் அனுபவித்தது இல்லை என்பது தான் முழு உண்மை. இது சாமி கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையை என்னவென்பது?



மாநில அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதியமானது பணியாளர் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஊதியத்தில் கட்டாயம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பு நிதியுதவியுடன் அரசு செலுத்தும் 10% கூடுதல் பங்களிப்பு நிதியுதவியுடன் அவ்வக்கால வட்டியுடன் கணக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையும் ஒரேயடியாக வழங்கப்பட்டு வருவதை அறிவது இன்றியமையாதது. 


இவற்றுடன் எஞ்சிய ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்புகளை ஒப்படைப்பு செய்து காசாக்கிக் கொள்ளும் நடைமுறை இருப்பதும் அறியத்தக்கது. மற்றபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவாறு தற்போது 25 இலட்சம் அளவிலான பணிக்கொடை மற்றும் திரும்பச் செலுத்தும் வகையிலான ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறும் நடைமுறைகள் ஏதும் இதில் இல்லை. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருந்தால் கூட பணிக்கொடை பெறும் நல்வாய்ப்பு கிட்டியிருக்கும். இவைதவிர, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இறந்தோர் நிதியாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படுகிறது.


இந்த நிலையில் ஒன்றிய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திருத்தியமைத்து மேலே குறிப்பிடப்பட்ட ஒருங்கிணைந்த அல்லது உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் முழுப் பலனையும் ஊழியர்கள் அனுபவிக்க அனுமதியளிக்குமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகும். அதற்குரிய பயனாளிகளும் அரசின் மீது முழு நம்பிக்கை எண்ணம் கொண்டு இப்பொழுதே பட்டு வேட்டி கனவில் மிதந்திட எண்ணுதல் கூடாது.


தொழிலாளர் நலனுக்கு எதிரான, அடிப்படை உரிமையை நசுக்கும் எத்தகைய முன்மொழிவையும் சிந்தித்து ஆராயாமல் நுனிப்புல் மேய்ந்து புளகாங்கிதம் அடைவது என்பது பேதைமையாகும். இது முதலாளித்துவம் விரிக்கும் மோச வலை எனலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொணராதிருக்க ஆயிரமாயிரம் காரணங்கள் இனியும் தேவையில்லை. 


ஒன்றுக்கும் உதவாத குழு எதற்கு? கால விரயம் எதற்கு? அதற்காக பண விரயம் எதற்கு? பல்லாயிரப் பக்க அறிக்கை எதற்கு? இவை எல்லாவற்றிற்கும் ஈடாக அதனைச் செம்மையாக நிறைவேற்றிட ஊழியர்கள் மீதான கொஞ்சம் கருணையும் ஒரு துளி மையும் மட்டும் போதுமே? 


காலம் கடத்தும் தாமதம் கூட ஒருவகையில் அநீதியே ஆகும். சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிரப்படும் பகடிப் பேச்சுகளும் கேலிச்சித்திரங்களும் கேலிப் படங்களும் அரசின் மீதான அவநம்பிக்கை மற்றும் அதிருப்தி ஆகியவை ஊழியர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளான மனவெளிப்பாடுகளாக இருப்பதை எளிதில் புறந்தள்ளவோ, கடந்து போகவோ முடியாது. இஃது எதிரிகளுக்குச் சாதகமாக அமைந்து விடக்கூடும். 


ஒரு நல்ல ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் உண்டுபண்ணி திருவிழா போல் நடக்கும் தேர்தல் அறுவடையில் நல்ல கண்டுமுதல் கண்டு விடலாம் என்று பகல் கனவு காண்பது நன்மை விளைவிக்காது. ஒவ்வொரு இடங்களிலும் ஊழியர்கள் செய்யும் பணியோ போதிய ஆட்கள் இல்லாமல் இரட்டிப்பாகி உள்ளது. மிகவும் கூடுதலான சுமை. இதுவரையில் இல்லாத வகையில் கண்காணிப்பும் கெடுபிடியும் மிகுதி. மாத ஊதியத்தைத் தவிர இதுவரை நிறுத்தி வைக்கப்பட்ட, திட்டமிட்டு ஒழித்த, வேண்டுமென்றே பறித்த, முழு நம்பிக்கை வைத்து இழந்த சலுகைகள் அனைத்தும் பாழுங்கிணற்றில் போடப்பட்ட பாறாங்கற்களாக மீட்பரின்றி அமிழ்ந்து கிடக்கும் கொடுமையை என்னவென்பது?


தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு இணங்க, ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், டில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டிப் போராடி வருகின்றனா். 


பணி ஓய்விற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு ஊழியரும் கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ அன்றும் இன்றும் என்றும் தேவைப்படுவது பழைய ஓய்வூதியத் திட்டமே அன்றி வேறில்லை. இதை ஒன்றிய, மாநில அரசுகள் புரிந்து கொள்ளுமா?


எழுத்தாளர் மணி கணேசன்


Dravida Model Govt Cheats Teachers, Govt Servants - Chief Secretariat Association Condemns


 திராவிட மாடல் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை வஞ்சிக்கிறது - தலைமைச் செயலக சங்கம் கண்டனம்


Dravida Model Govt Cheats Teachers, Govt Servants - Chief Secretariat Association Condemns




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - TESTF Condemns



✍️✍️✍️✍️✍️✍️✍️

*6.14 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த மூவர் குழு அறிவிப்பு*


*முடியாது என்பதன் வேறு பெயர் தான் மூவர் குழுவா!*


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்


6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - Tamil Nadu Elementary School Teachers' Federation Condemns


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வில் பேரிடியாக 2003 ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்கள் நடத்தி வருகின்றன.


இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பணியில் சேர்ந்த சுமார் 38 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் இன்றி வயதான காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 


அதிலும் 7000 ஊழியர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்பங்கள் குழந்தைகள் எவ்வித வருமானமும் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.


இதற்கான தொடர் போராட்டங்களின் விளைவாக 2016 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ்  அப்போதைய முதல்வர் அவர்கள் ஓய்வூதிய பிரச்சனை பற்றி ஆராய திருமதி ஷீலா ராணி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் குழு அமைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த பிறகு அந்த குழு திரு ஸ்ரீதர் ஐஏஎஸ் தலைமையில் அந்தக் குழு இயங்கியது. ஓராண்டுக்கு பிறகு அந்த குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 2019 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்கில் அந்த அறிக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பற்றிய விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.


இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆண்டுகள் பலவாகியும் எவ்வித தீர்வையும் அளிக்கவில்லை


அரசு அமைக்கப்படும் குழுக்களின் அறிக்கைகளின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது. 


தற்போதைய ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 309 ஆக பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது.  நிதி நிலைமை மற்றும் சிபிஎஸ் திட்டத்தின் பாதகங்கள் பற்றி தெரிந்து அதனால் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதை பற்றி புரிந்து அரசால் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி பெரும்பாலான ஆசிரியர்களை அரசு ஊழியர்கள் வாக்களித்திருந்தனர்.


ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையிலும்  சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். 


ஆனால் தற்போது ஓய்வூதியம் பற்றி ஆராய்வதற்காக ஒன்பது மாத கால அவகாசம் வழங்கி குழு அமைத்து இருப்பது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை என வெட்ட வெளிச்சமாகிறது.


மத்திய அரசு ஊழியர்களே ஏற்றுக் கொள்ளாத, பாதகங்கள் நிறைந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை காரணம் காட்டி குழு அமைத்திருப்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. 


எனவே அரசு உடனடியாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும். 


ஆசிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தும் அறிவிப்பை அரசு வெளியிடாமல் மேலும் தாமதப்படுத்தினால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்...

இவண்..

*சி அரசு*

 மாநிலத் தலைவர்

 *சு குணசேகரன்*

 பொதுச்செயலாளர்

 *சே நீலகண்டன்*

 மாநில பொருளாளர்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி..





If old pension scheme is not implemented, Teachers & Government Employees will take alternative decision in the upcoming assembly elections - CPM

 



💥 புதுக்கோட்டை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.


If the old pension scheme is not implemented, the teachers, government servants will take alternative decision in the upcoming assembly elections - CPM


💥 புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழிர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


💥 எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.


💥 குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பதாலேயே கூட்டணி முறிந்துவிடும் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்களுக்கென தனி நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லா பிரச்சினையிலும் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை.


💥 வேங்கைவயல் விவகாரத்தில் விசிக மட்டுமின்றி, நாங்களும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 


💥 வன விலங்குகளால் பயிர்கள் அழிக்கப்படும்போது, அதை இயற்கைப் பேரழிவாக கருதி, விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சாகுபடிப் பகுதிக்குள் விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


💥 திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசியவை கண்டனத்துக்குரியவை. 


மத நல்லிணக்கத்தை காப்பாற்றும் வகையில், அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வழிபாட்டு உணர்வை அரசியல் லாபத்திற்காக பாஜக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்



A committee formed to make recommendations regarding the appropriate pension scheme - TN Govt Press Release No: 271, Dated: 04-02-2025


உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 271, நாள் : 04-02-2025


A committee consisting of officials to make recommendations to the government regarding the appropriate pension scheme - Tamil Nadu Government Press Release No: 271, Dated: 04-02-2025


மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது


DIPR-P.R No.-271- TN Govt Press Release - Pension Scheme, Date - 04.02.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழக அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.


ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளா்களுக்கு தொடா்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.


மாநில அரசுப் பணியாளா்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்த தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனிடையே மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 


குழு அமைப்பு: இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Old Pension Scheme - Objection to Finance Minister's notification - Request to Chief Minister Stalin



பழைய ஓய்வூதியத் திட்டம் - நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு - முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை


கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதலமைச்சரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது. மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. இது வாக்குறுதியை மீறிய செயல் என அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


கடந்த 2003-ம் ஆண்டு பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜனவரி 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதே நடைமுறையில் 01-04-2003 முதலே தமிழ்நாடு அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டப்படி, அரசு ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டது.


இதன்படி பார்த்தால் ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 15 லட்சம் ரூபாய் பெறுகிறார் என்றால், அவர்களின் மாத ஓய்வூதியம் சுமார் 62,500 ரூபாயாக இருக்கும். (ஆண்டுக்கு 15 லட்சத்தில் 50% = 7.5 லட்சம் ரூபாய் அதாவது மாதம் 62,500 ரூபாய்) ஆக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அக விலைப் படி உயர்வுக்கு ஏற்ப இந்த தொகை அவ்வப்போது ஓய்வூதியதார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்து வருகிறது.


இந்த பழைய ஓய்வூதியம் என்பது 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் இருக்கிறது. ஆனால் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியம் தான் நடைமுறையில் இருக்கிறது. இது பெரிய அளவில் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. ஏனெனில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சரியான தொகையை கணிப்பது கடினமாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை விட மிக குறைவாகவே உள்ளது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப் படியின் படி உயர்வு இருக்காது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.


இந்த சூழலில் மத்திய அரசு  புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டப்படி, உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். ஒருவர் 25 ஆண்டு அரசு பணியாற்றி ஓய்வு பெறுவார் என்று வைத்து கொண்டால் அவரது கடைசி 12 மாத சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து 10ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில் அவரது ஓய்வூதியத்தில் 60 சதவீத அடிப்படையில் ஓய்வூதிய பலனாக துணைக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து அண்மையில் சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும் போது, புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS or Unified Pension Scheme) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாக கொண்டு இருக்கும் திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் செயலாக்கத்துக்கு உரிய வழிக்காட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை என்றார்.


மேலும் தென்னரசு கூறும் போது, மத்திய அரசு புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மிக விரைவில் அந்த வழிக்காட்டுதல்கள், செயல்முறைகள் வழிகாட்டப்படும் என்று நம்புகிறோம். அது வெளியான உடனேயே நம்முடைய மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல்வருடன் கலந்து ஆலோசித்து புதிய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் வழிக்காட்டுதல்படி நம்முடைய மாநிலத்தில் அந்த ஓய்வூதிய திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த நம் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார். அதாவது மத்திய அரசு அமல்படுத்தும் திட்டத்தை தமிழகத்திலும் மாநில அரசு அமல்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதே கருத்தாக உள்ளது. இந்நிலையில் பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்மைச்சர் ஸ்டாலினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது.

மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. இது வாக்குறுதியை மீறிய செயலாகும். குழு அமைக்கும் நிதி அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


UPS, NPS & CPS - Comparison




Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu 


UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees



>>> Click Here to Download...


Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - TNTF insists



 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களது அறிவிப்பு - பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - Tamil Nadu Teachers Federation insists



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Were the DMK's election promises, including the cancellation of the Contributory Pension Scheme and the reinstatement of the Old Pension Scheme, dependent on the Union Government or a self-decision? - Tamil Nadu Revenue Officials' Association letter to Hon'ble Chief Minister





 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றிய அரசை சார்ந்து தெரிவிக்கப்பட்டதா அல்லது சுயமாக முடிவெடுக்கப்பட்டதா? - தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம்


Were the DMK's election promises, including the cancellation of the Contributory Pension Scheme and the reinstatement of the Old Pension Scheme, dependent on the Union Government or a self-decision? - Tamil Nadu Revenue Officials' Association letter to Hon'ble Chief Minister



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin should implement the old pension scheme as per his election campaign promise - Tamil Nadu Elementary School Teachers Mandram insists



 புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்னும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு, ஆசிரியர் அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது தேர்தல் காலப் பரப்புரை  வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திடல் வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல் 


The announcement by the Hon'ble Tamil Nadu Finance Minister that steps will be taken to implement the new Unified Pension Scheme (UPS) has created a tense atmosphere among the among the Teachers & Government Employees - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M.K.Stalin should implement the old pension scheme as per his election campaign promise - Tamil Nadu Elementary School Teachers Mandram insists


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 

(மாநில அமைப்பு) 

பதிவெண்:17/74

அரசு அங்கீகாரம் எண்:991/89

--------------------------------------------


தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்‌ படி பழைய ஓய்வூதியத்திட்டம்‌ 01.04.2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்திடல் வேண்டும்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது!

----------------------------------------------


தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு   

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு விரைந்து தொடங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  அவர்கள்  மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற  உறுப்பினர்களின் சட்டமன்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து சட்டமன்றத்தில் 11.01.2025 அன்று தெரிவித்து உள்ளார்கள்.

 

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (ups) மத்திய அரசு நடப்பு 2025ஆம் ஆண்டில் அமல்படுத்துவதற்கு  அறிவிப்பு செய்து உள்ளது என்றும்மத்திய அரசின் இத்தகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் மத்திய அரசின் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை  உறுதி செய்யும் வகையில் உள்ளது என்றும்

 இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், மற்றும் விதிமுறைகள்  வெளியானதும் தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்றும் மேலும்,

தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தமிழ்நாட்டுக்கு உகந்தவாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்றும்  இத்திட்டம் சார்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இசைவுக்கு முன்வைக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் மேற்கண்டவாறான அறிவிப்புகள் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி தந்து உள்ளது. ஆசிரியர்-அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டத்தினை - பெருங்கவலையை ஏற்படுத்தி கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.


ஒன்றிய அரசு அறிவித்து உள்ள புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்திற்கு (UPS)   இந்திய நாடு முழுதும் கடுமையான எதிர்ப்புகள் -ஆட்சேபனைகள்  பெருமளவில் எழுந்துள்ளது.

இத்திட்டம் தேவையற்றது;

பயனற்றது  என்றும் வரையறுக்கப்பட்ட பயன்தரும் பழைய ஓய்வூதியத்திட்டத்தினைத் (OPS) தான் நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளும்-

போராட்டங்களும் வலுத்து வரும்  நிலையில் l, இந்தியாக் கூட்டணியில் இணைந்துள்ள பல்வேறுக்கட்சிகள்  ஒன்றிய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்த்து எதிர்வினைகள்  ஆற்றிவரும்  நிலையில் 

மாண்புமிகு தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களின் 

அறிவிப்புகள் பெருத்த விவாதத்தையும் - விமர்சனத்தையும் ஆசிரியர் -அரசு ஊழியர்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மீது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கொண்டு இருக்கும் அசைக்க முடியாத பெருத்த நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தும் உள்ளது.

ஆசிரியர்-அரசு ஊழியர்களை தன்னெழுச்சியாக போராடும் சூழ்நிலைக்கும் தள்ளி விட்டும் உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு,  கடந்த சட்டமன்றத் தேர்தல் காலப் பரப்புரை  வாக்குறுதியின் படி மற்றும் தேர்தல் அறிக்கையின் உறுதிமொழியின் படி தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 01.04.2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை  தொடர்ந்து அமல்படுத்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஆசிரியர் -அரசு ஊழியர்களின் பாதுகாவலர் தலைவர் கலைஞர் அவர்களின்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிடமாடல் அரசு  என்பதை மெய்ப்பித்திடல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடல் வேண்டும் என்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.



இவண்...


பெ.இரா.இரவி

மாநிலத்தலைவர்


முனைவர்-மன்றம்

நா.சண்முகநாதன்

பொதுச்செயலாளர்


முருகசெல்வராசன்

மாநிலப்பொருளாளர்


புதுக்கோட்டை

12.01.2025


Tamilnadu government's announcement regarding pension scheme is a scam - TNPTF General Body Condemns



 ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஏமாற்று வித்தை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கண்டனம்


Tamilnadu government's announcement regarding pension scheme is a scam - Tamil Nadu Primary School Teachers' Federation General Body Condemns


தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அறிவுத்திருப்பது ஒரு ஏமாற்று வித்தை என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (12.01.2025) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற்றது. 


கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூத்திட்டத்தைச் செயல்படுத்திட ஏதுவாக ஓய்வூதியம் தொடர்பாக ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டவுடன் புதிதாகக் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக்குழுவின் அறிக்கையைப் பெற்று ஓய்வூதியத்திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்று வித்தையாகும். தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்போது "ஒன்றிய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தைப் பின்பற்றி அது தொடர்பாக குழு அமைத்து அதன் அறிக்கையைப் பெற்று தக்கதொரு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்" என்று கூறுவது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் ஏமாற்றும் செயலாகும். 


எனவே, இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று தேர்தல் வாக்குறுதியில் எழுத்து மூலமாகத் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாக பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப் பதிவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து தொடக்கக் கல்வித்துறையில் பதவி உயர்வுகள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் கருதி மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் காலமுறை ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைக் தடைகளை உடனடியாக நீக்கி ஆணைகள் வெளியிடப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதலின் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22.02.2025 அன்று STFI சார்பில் சென்னையில் நடைபெறும் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்திலும், 07.03.2025ல் டிட்டோஜாக் சார்பில் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


Old Pension Scheme is better - Election period promises should be fulfilled - Tamilaga Aasiriyar Koottani insists

 


பழைய ஓய்வூதிய  திட்டமே (OPS) சிறந்தது - தேர்தல் கால வாக்குறுதியினை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும் - தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் 


Old Pension Scheme (OPS) is better - Election period promises should be fulfilled - Tamilaga Aasiriyar Koottani insists


*AIFETO... 12.01.2025..*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்- 36/2001.*


🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹


*தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்..*


 *மத்திய அரசு அறிவித்த போதே இரண்டு பக்க அறிக்கையினை முழு விளக்கத்துடன் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தோம்.*


 *இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.*


 *நமது கொள்கையே!..*


*CPS ம் வேண்டாம்!...*


*UPS ம் வேண்டாம்!..*


 *தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி..*


*OPS தான் வேண்டும்!.*


 *என்பதை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் AIFETO அகில இந்திய அமைப்பின் சார்பிலும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.*


 *நிதி அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது போல ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பற்றி மத்திய அரசே  தெளிவான விளக்கம் இன்னமும் தரவில்லை.*


*25 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவருக்கு  50% பென்ஷன் தருவார்கள். மத்திய அரசு 18% சதவீதம் பங்களிப்பு தருகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்து போய்விட்டால் அந்த  குடும்பத்திற்கு அந்த தொகை கிடைக்குமா?. என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.*


 *அதனால் ஒரு ரூபாய் கூட பங்களிப்பு செலுத்தாமல் நடைமுறையில் இருந்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டமே சிறந்ததாகும்.*


 *தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.*


 *இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் 6 1/4 லட்சம் பேர் சிபிஎஸ் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த UPS திட்டம் சிறப்பான திட்டம் போல சிலருக்கு தெரியலாம்.*


 *பழைய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெற்று வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று கூட எண்ணலாம்.*


 *ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) விட பழைய ஓய்வூதிய  திட்டமே (OPS) சிறந்ததாகும்* 


 *தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக  அழைத்துப் பேசியபோது... சிரித்துக் கொண்டே... எனது பெயருக்கு முன்பு உள்ள "கருணை " என்னிடம் நிறைய இருக்கிறது. பின்பு உள்ள "நிதி" தான் என்னிடம் இல்லை, என்று கூறினார். அப்படி கூறினாலும் அவருடைய ஆட்சி காலத்தில் தான்... மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கியதுடன்.. நான்கு ஊதிய குழுக்களையும் அமைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை அமல்படுத்தினார்.. என்பதை நெஞ்சிருக்கும் வரை மறக்கத்தான் முடியுமா?..*


*தேசியக் கல்விக் கொள்கையினை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்!... அதேபோல் மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும் (UPS) எதிர்க்கிறோம்!..*


 *தேர்தல் கால வாக்குறுதியினை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும்!.. நிறைவேற்ற வேண்டும்!.. என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com*


 *அ. எழிலரசன்* 

 *மாநிலத் தலைவர்** 


 *அ.வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்* 


*ஆ.இராஜசேகர் மாநிலப் பொருளாளர்.*


*கு.ரமாராணி, மாநில மகளிர் அணி செயலாளர்.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*


Tamil Nadu Chief Minister must fulfill his election promise - Teachers Federation insists


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


Tamil Nadu Chief Minister must fulfill his election promise - Tamil Nadu Elementary School Teachers Federation insists


✍️✍️✍️✍️✍️✍️✍️


*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்*

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் *வாக்குறுதி எண் 309* இல்  பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது.


 மத்திய அரசின் ஒப்புதல் வழிகாட்டுதல் நிதி சார்ந்த எந்த நிபந்தனையும் இந்த வாக்குறுதியில் இல்லை.


*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே!* ஒப்புக்கொண்டது போல் இந்த வாக்குறுதியை நம்பி பல லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திமுகவுக்கு வாக்களித்திருந்தனர்.


தமிழ்நாடு அரசு அளித்த *வாக்குறுதியை 99% நிறைவேற்றி* விட்டதாக முதலமைச்சர் அவர்கள் செல்லும் இடமெல்லாம் உரையாற்றி வருகிறார். 


வாக்குறுதி *எண் 309ஐ நிறைவேற்றாத போதிலும்* தமிழ்நாடு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் முதல்வர் கொண்டு வந்து விடுவார் என பெருத்த நம்பிக்கையுடன் இருந்தனர். 


ஆனால் நேற்று சட்டசபையில் *நிதியமைச்சர் அவர்களின்* உரையைக் கேட்ட பிறகு *மிகப்பெரிய அதிர்ச்சிக்கு* உள்ளாகியுள்ளனர். 


ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமோ பங்களிப்பு ஓய்வூதிய திட்டமோ ஆசிரியர்களின் அரசு ஊழியர்களின் கோரிக்கை கிடையாது. *இரண்டுமே ஏமாற்றுத் திட்டங்கள்* என்பது தெளிவாக பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே சரியான தீர்வாக அமையும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டியது குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு மட்டுமே.


மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக கூறுவது காலம் கடத்துவதற்கும், தட்டிக் கழிப்பதற்குமான உத்திகள் என்பதை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் உணர்வார்கள். முடியாது என்பதை நேரடியாக கூறாமல் வேறு வார்த்தைகளில் *மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்* கூறியிருக்கிறார்கள். ‌


10 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாக்குகளை பெற்று அமைந்த அரசு என்று முதல்வர் அவர்களே கூறியிருக்கிறார்கள். எனவே வள்ளுவர் வாக்கின்படி செயல்படுவதாக கூறும் அரசு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை ஏமாற்ற நினைக்காமல் துரோகம் செய்யாமல் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது

இவண்.

*சு.குணசேகரன்*

 *பொதுச் செயலாளர்* 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு


Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டவுடன், அதனை ஆராய ஒரு குழு அமைத்து விரைவில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 309ல் அறிவித்த  பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு (Old Pension Scheme) பதிலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்


- தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிவிப்பு




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Immediate implementation of Old Pension Scheme - TNPGTA


---------------------------------------

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - TNPGTA மாநிலக் கழகத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கண்டன அறிக்கை மற்றும் பத்திரிக்கை செய்தி -10.11.24

--------------------------------------


*பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள் சார்ந்து ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசு ஆனது நிதிசாராத கோரிக்கைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்  என்ற அடிப்படையில் வெளிவந்திருக்கும் செய்தி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதார சமூக பாதுகாப்பான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு எதிரான முடிவாக இருப்பதால் ஆட்சி பொறுப்பிற்கு வந்து மூன்றரை  ஆண்டு காலத்திற்கு மேலாக  தருவோம் தருவோம் என்று நம்பிக்கை அளித்து ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றிய அரசாக இருப்பதை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஏற்க இயலாது. தமிழக அரசுக்கு TNPGTA பேரியக்கத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.*


எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தற்போதைய முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தேர்தல் அறிக்கை 309 ல் வெளியிட்டு விட்டு, தற்போது அதற்கு மாறான நிதிசாராத கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறுவது என்பது நம்பிக்கை மோசடியாக பார்க்கிறோம்.


*அறிஞர் அண்ணா காலத்திலிருந்து வழங்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குவதாக அறிவித்துவிட்டு, மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகையை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக கொடுக்கிறோம் என்று அறிவித்துவிட்டு தற்போது அரசின் சக்கரங்களாக விளங்கும் அடி நாதமாக விளங்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களை ஏமாற்றும் விதமாக, தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக -"நாங்கள் செய்யாமல் யார் செய்வார்கள்"* என்று சொல்லிக்கொண்டே தள்ளி தள்ளி போட்டுக்கொண்டு அடுத்த கட்ட தேர்தல் வேலைக்கு தயாராகி விட்டது தமிழகஅரசு.

அடுத்த கட்ட அரசு அமைப்பதற்கு தேர்தல் அறிக்கைக்கு தேர்தல் பணிக்கு குழு அமைத்திட  தொடங்கிவிட்டது.  


*20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தின் மீது எந்தவிதமான உறுதியான முடிவினை அறிவிக்காமல், இழுத்தடிப்பு செய்து ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோபங்களை தணிக்கும் செயலாக மாற்றி போராட்டவேகத்தை குறைப்பது என்பது தொடர்கதையாக இருக்கிறது.*


 அதிமுக அரசு அதன் தொடர்ச்சியாக திமுக அரசு என  மாறி மாறி  நம்மை ஆட்சி புரிந்தாலும் ஆட்சியாளர்களின் செயல்களை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்ல.. தொடர்ந்து வாய்ஜாலமாக பேசி ஏமாற்ற நினைத்தால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்..


*கடந்த அதிமுக அரசானது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எதிராக பேசியதும், தற்போதைய அரசு நம்பிக்கை அளித்து இழுத்தடிப்பு செய்யும் துரோகத்தையும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..*


 *பென்ஷன் என்ற வார்த்தையை உச்சரிக்காத ஒன்றிய அரசு கூட பழைய ஓய்வூதிய திட்டம் என்ற முறையான திட்டத்தை அறிவிக்காவிட்டாலும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்ற ஏற்கனவே இருந்த நிலைக்கு ஒரு நிலை முன்னோட்டமாக அறிவிப்பு எடுத்திருக்கும் நிலையில், தமிழக அரசானது எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் தமிழக ஆசிரியர் அரசு ஊழியரிடம் இருந்து ஓய்வூதிய திட்டத்திற்காக பிடிக்கப்பட்ட பணத்தையும் PFRDA லும் சேர்த்திடாமலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பதற்கு எந்த தடையும் இல்லாத நிலையிலும், பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராடாத பல மாநிலங்களில் கூட பழைய ஓய்வூதிய திட்டம்  அமல்படுத்தியிருக்கப்பட்டிருக்கும் வேளையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக, இருபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்த நிலையில் அதையெல்லாம் நாங்கள் புரிந்துள்ளோம் நடைமுறைப்படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு தற்போது ஏமாற்றும் துரோக வேலையை மறைமுகமாக இழுத்தடிப்பு மூலம் தமிழக அரசு ஆனது தமிழக மண்ணில் அரங்கேற்றி வருவதை ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்  ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.*


கார்ப்பரேட் நலன்களுக்காகவும் பெரும் முதலாளி நலன்களுக்காகவும் செயல்படும் அரசாக அமைந்து தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுக்கும் அரசாக இருக்கும் என்றால் தொழிலாளர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை..


*தமிழக மண்ணில் தீவிரமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறும்.. அப்படிப்பட்ட தீவிரமான போராட்டம் நடைபெறுவதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முழு முயற்சியும் முன்னெடுப்பும் எடுக்கும்..*


*அரசுக்கு ஆதரவாக ஜால்ரா அடிக்கும், நன்றிகளை மட்டும் தெரிவித்துக் கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை  அம்பல படுத்துவோம்..*

*உண்மையான போராட்ட குணம் கொண்ட ஜாக்டோ ஜியோவாக புனரமைக்கப்பட்டு வீரஞ்செறிந்த போராட்டங்களை அறிவிப்பு செய்து போராட்டத்தின் மூலம் கோரிக்கைகளை வெல்வதற்கு திட்டமிடல் செய்வோம்.*


அதேபோன்று *இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவிற்கு  கண்டனங்களும், அதே வேளையில் கோரிக்கை அறிவிப்பு மாநாடாக டிசம்பர் 15ஆம் தேதி தமிழக அரசு ஆனது சிபிஎஸ்  ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி போராட்ட அறிவிப்பு செய்வது என்று முடிவாக்கப்பட்டுள்ளது.*

*தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக போராட்ட குணம் உள்ள ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்புகளை வலுப்படுத்தி தீவிரமான போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.. திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டம் ஊதிய முரண்பாடு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவிக்காமல் வருகின்ற தேர்தலில் வெல்ல முடியாது என்கின்ற நிலைக்கு தமிழக மண்ணில் போராட்டம் கட்டி எழுப்பப்படும் என்ற செய்தியை TNPGTA பேரியக்கத்தின் மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்திக்கொள்கின்றோம்..*


*ஒன்றுபடுவோம்..* *போராடுவோம்..*

 *வெற்றி பெறுவோம்..*

*இறுதி வெற்றி நமதே.!*

நன்றி 


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


மாநில கழகத்தின் சார்பாக...

*பொ. அன்பழகன்* 

மாநில பொதுச் செயலாளர்

*TNPGTA*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

   உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக...