கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Accused in financial fraud cases may be allowed to travel abroad with conditions - High Court



நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம் - உயர் நீதிமன்றம்


Accused in financial fraud cases may be allowed to travel abroad with conditions - High Court 


வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதி சேஷசாயி, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமை என்பது வளத்துடன் வளர்வது.


விடுமுறை தொடங்கி தொழில் மேம்பாடு, கல்வி, புனிதப் பயணம் ஆகிய காரணங்களுக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. குற்ற நீதி பரிபாலனம், குற்றம்சாட்டப்பட்டவரின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டுமே தவிர, அவரது தனிப்பட்ட வாழ்வுரிமையை பாதிக்க்கக் கூடியதாக இருக்கக் கூடாது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது. அவர்கள் நாடு திரும்பக் கூடிய அளவில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருக்க வேண்டும்.


ஒரு சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்து விட்டதால் தான் ஒவ்வொரு வழக்கிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெளிநாடு செல்லும் உரிமையை வழங்குவதுடன், அவர் நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம். லுக் அவுட் நோட்டீசுக்கு மாற்று நடவடிக்கைக்கு இறுதி வடிவம் வழங்கும் வரை, தனி நபரின் பயண உரிமையை பாதிக்காத வகையில் லுக் அவுட் சுற்றறிக்கை நீடிக்கலாம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.



இந்த மனுக்களை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், குறிப்பிட்ட தொகையையோ, அல்லது அதற்கு ஈடான சொத்துக்களை டெபாசிட் செய்யும்படி நிபந்தனை விதிக்கலாம். உறவினர் அல்லது தொழில் பங்குதாரர்களின் பாஸ்போர்ட்டை விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நாடு திரும்பிய பிறகு அதை திருப்பிக்கொடுக்கலாம். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் இருவரும் தலா 10 லட்ச ரூபாய்க்கு சொந்த பிணையும், அதே தொகைக்கு இரு நபர் பிணையும், உறவினரின் பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென நிபந்தனை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2 teachers suspended for refusing to comply with CEO order

   CEO உத்தரவை ஏற்க மறுத்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் 2 teachers suspended for refusing to comply with CEO order திருச்சி மாவட்டம் இனாம் பெரியந...