கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New features introduced in WhatsApp

 

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்


New features introduced in WhatsApp


வாட்ஸ்ஆப்பில் 3 புதிய அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் வசதிக்காக சாட் செய்யும்போது கூடுதல் அம்சமாக ‘டைப்பிங் இண்டிகேட்டர்’ என்ற வசதியை மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப்பில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.


வாட்ஸ்ஆப் குரூப்கள் மற்றும் தனி நபர்கள் இடையேயான உரையாடல்களின்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் டைப் செய்து கொண்டிருந்தால் அதை அறிந்துகொள்ளும் விதமாக, டைப் செய்யும் நபரின் முகப்பு படம் “ ... ” என்ற அடையாளத்துடன் காண்பிக்கப்படும். இதன்மூலம் வாட்ஸ்ஆப் குழுக்களில் டைப் செய்யும் நபரை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.


வாட்ஸ் ஆப்பில் டிராஃப்ட் மெசேஜ் என்கிற வசதியும் வர உள்ளது. இதன் மூலம், ஒருவர் டைப் செய்து முடித்தும், அதை உடனடியாக அனுப்பாமல் பின்னர் அனுப்ப வசதியாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்சன் வசதியும் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. இதன்மூலம், வாட்ஸ் ஆப்பில் ஒலி வடிவில் அனுப்பப்படும் மெசேஜ்களை, எழுத்து வடிவில் மாற்றி பயனர்கள் படித்துக்கொள்ள முடியும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...