கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

 

2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ 27.12.2024 அன்றைய  நிலவரப்படி  EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 028459 /கே1/2024, நாள்‌  24. 12.2024.


2025-26 - Free Note Books Requirement List Issued from EMIS as on 27.12.2024 - Proceedings of Tamil Nadu Joint Director of Elementary Education (Aided Schools)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌, சென்னை -6.

ந.க.எண்‌. 028459 /கே1/2024, நாள்‌  24. 12.2024.

பொருள்‌:         தொடக்கக்‌ கல்வி - விலையில்லா நலத்திட்டங்கள்‌ - 2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌.116, பள்ளிக்‌ கல்வித்‌ (க்யு)த்‌ துறை, நாள்‌.14.05.2012.

2. அரசு கடிதம்‌ எண்‌.5987;தொக3(1)2018, பள்ளிக்‌ கல்வித்‌ துறை நாள்‌.09.07.2018.


பார்வை (1)-ல்‌ காணும்‌ அரசாணையின்படி, 2012 - 2013 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக கட்டுப்பாட்டில்‌ உள்ள அரசு: அரசு உதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌  வகுப்பு வரை பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்கப்பட்டு வருகிறது.


2025-2026 - ஆம்‌ கல்வியாண்டிற்கு  தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌  பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌  மாணவமாணவியர்களுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான   உத்தேசத்‌ தேவைப்பட்டியல்‌, அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கும்‌ (தொடக்கக்கல்வி) கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌     மையத்தின்‌  (EMIS) மூலம்‌     27.12.2024 அன்றைய  நிலவரப்படி    மாணவ மாணவியர்களின்‌ எண்ணிக்கை பெறப்பட்டு. சென்னை-32, தமிழ்நாடு செய்தித்தாள்‌ மற்றும்‌ காகித நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.


எனவே, 2024-25 ஆம்‌ கல்வியாண்டில்‌ தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌   பள்ளிகளில்‌ 1முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து  மாணவமாணவியர்களின்‌ எண்ணிக்கை, கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ மையத்தின்‌ (EMIS-ல்‌) மூலம்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌ என      அனைத்து  மாவட்டக்கல்வி  அலுவலர்களுக்கும்‌   (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


பெறுநர்‌                                            ்‌

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌ 

(மின்னஞ்சல்‌ மூலமாக)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...