கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விலையில்லா நலத்திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விலையில்லா நலத்திட்டங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Education Officers impose lorry rent on Teachers' - Daily News




லாரி வாடகையை ஆசிரியர்கள் தலையில் கட்டும் கல்வி அதிகாரிகள் - நாளிதழ் செய்தி 


Education Officers impose lorry rent on Teachers' - Daily News


அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை வினியோகம் செய்ய லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை அரசு ஒதுக்குகிறது.


எனவே, *ஆசிரியர்கள் சொந்த செலவில் பாடப்புத்தகம் எடுக்க வேண்டாம் என, ஆசிரியர் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த உண்மை தெரியாமல், பல இடங்களில் ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் கல்வி அதிகாரிகள், பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்ல வலியுறுத்துகின்றனர்.*


தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்குகிறது. 


*நேரடியாக அந்தந்த பள்ளிகளுக்கே வழங்க லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை, மாவட்ட வாரியாக அரசு ஒதுக்கீடு செய்கிறது.*


*தற்போது, 2024- - 25ம் கல்வி ஆண்டுக்குரிய மூன்றாம் பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் லாரி வாடகைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.*


ஆனால், *பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர்கள் சொந்த செலவில் வாகனத்துடன் வந்து புத்தகத்தை எடுத்துச் செல்லுமாறு கல்வி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.* 


இது, ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


*லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியாக மாவட்டத்திற்கு, 15 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கியுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட புத்தக வினியோகத்திற்கும், 12 - 15 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.*


ஆனால், *கல்வி அதிகாரிகள் இந்த செலவை ஆசிரியர்கள் மீது சுமத்துகின்றனர். எனவே, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களிடம் தங்களது சொந்த செலவில் புத்தகம் எடுக்குமாறு சொன்னால் புறக்கணிக்குமாறு தெரிவித்துள்ளோம்.*


இவ்வாறு அவர் கூறினார்.






Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

 

2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ 27.12.2024 அன்றைய  நிலவரப்படி  EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 028459 /கே1/2024, நாள்‌  24. 12.2024.


2025-26 - Free Note Books Requirement List Issued from EMIS as on 27.12.2024 - Proceedings of Tamil Nadu Joint Director of Elementary Education (Aided Schools)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌, சென்னை -6.

ந.க.எண்‌. 028459 /கே1/2024, நாள்‌  24. 12.2024.

பொருள்‌:         தொடக்கக்‌ கல்வி - விலையில்லா நலத்திட்டங்கள்‌ - 2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌.116, பள்ளிக்‌ கல்வித்‌ (க்யு)த்‌ துறை, நாள்‌.14.05.2012.

2. அரசு கடிதம்‌ எண்‌.5987;தொக3(1)2018, பள்ளிக்‌ கல்வித்‌ துறை நாள்‌.09.07.2018.


பார்வை (1)-ல்‌ காணும்‌ அரசாணையின்படி, 2012 - 2013 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக கட்டுப்பாட்டில்‌ உள்ள அரசு: அரசு உதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌  வகுப்பு வரை பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்கப்பட்டு வருகிறது.


2025-2026 - ஆம்‌ கல்வியாண்டிற்கு  தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌  பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌  மாணவமாணவியர்களுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான   உத்தேசத்‌ தேவைப்பட்டியல்‌, அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கும்‌ (தொடக்கக்கல்வி) கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌     மையத்தின்‌  (EMIS) மூலம்‌     27.12.2024 அன்றைய  நிலவரப்படி    மாணவ மாணவியர்களின்‌ எண்ணிக்கை பெறப்பட்டு. சென்னை-32, தமிழ்நாடு செய்தித்தாள்‌ மற்றும்‌ காகித நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.


எனவே, 2024-25 ஆம்‌ கல்வியாண்டில்‌ தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌   பள்ளிகளில்‌ 1முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து  மாணவமாணவியர்களின்‌ எண்ணிக்கை, கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ மையத்தின்‌ (EMIS-ல்‌) மூலம்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌ என      அனைத்து  மாவட்டக்கல்வி  அலுவலர்களுக்கும்‌   (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


பெறுநர்‌                                            ்‌

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌ 

(மின்னஞ்சல்‌ மூலமாக)


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள், நாள்: 14-08-2023 (Joint Director of School Education Proceedings for immediate uploading of welfare scheme details provided to students in TNSED Schools App, dated: 14-08-2023)...

 

>>> மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை  TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள், நாள்: 14-08-2023 (Joint Director of School Education Proceedings for immediate uploading of welfare scheme details provided to students in TNSED Schools App, dated: 14-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

விலையில்லாப் பொருட்களின் தரம், பயன்பாடு குறித்த மாணவர்களின் கருத்துகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்:22909/வி2/இ3/2022, நாள்: 10-08-2021...



 விலையில்லாப் பொருட்களின் தரம், பயன்பாடு குறித்த மாணவர்களின் கருத்துகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்:22909/வி2/இ3/2022, நாள்: 10-08-2021...


>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்:22909/வி2/இ3/2022, நாள்: 10-08-2021...



விலையில்லா பாடநூல்கள் வழங்குதல், கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்களையும் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்வையும், கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...




விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தனித்தனியாக விவரங்கள் கோரக்கூடாது. EMIS தளம் மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம்...

 


விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் வழங்குவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தனித்தனியாக விவரங்கள் கோரக்கூடாது. EMIS தளம் மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் கடிதம் ந.க.எண்: 028302/ எப்2 / 2021, நாள்: 10-06-2021...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்: 028302/ எப்2 / 2021, நாள்: 10-06-2021...


இனி அனைத்து தரவுகளும் EMIS தளம் மூலம் (மட்டுமே) பெற உள்ளதால் அதனை Updated ஆக வைத்துக்கொள்ளவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 New Income Tax Rates

    Budget Update: 2025-2026 புதிய வருமான வரி விகிதங்கள் வரம்பு 2025-2026 New Income Tax Rates • ₹0- 4 Lakh : NIL • ₹4 Lakh - ₹8 Lakh : 5% •...