கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாட்ஸ்அப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாட்ஸ்அப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

WhatsApp Web-ல் புதிய அப்டேட்



 New update in WhatsApp Web


WhatsApp Web-ல் புதிய அப்டேட்


கணினியில் செயலியைப் பதிவிறக்காமல், வாட்ஸ்அப் வெப் பிரவுசர் மூலமாகவே நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைப் பேசும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


அழைப்பைத் துண்டிக்காமல் மொபைலிலிருந்து கணினிக்கும், கணினியிலிருந்து மொபைலுக்கும் மாற்றிக் கொள்ளும் CALL TRANSFER அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது


குழு அழைப்புகளைக் கட்டுப்படுத்த WAITING ROOM வசதியும், தெளிவான வீடியோ அனுபவத்திற்கு QUICKHD அம்சமும் வழங்கப்பட்டுள்ளன.


பின்னணிச் சத்தங்களை நீக்கி தெளிவான குரலை வழங்கும் NOISE SUPPRESSION தொழில்நுட்பமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வாட்ஸ்அப் வெப் வழியே பேசப்படும் அனைத்து அழைப்புகளும் முற்றிலும் இலவசம் என்பதோடு END TO END ENCRYPTED பாதுகாப்பு கொண்டவையாகும்.


Privacy-ஐ கூட்டும் பொருட்டு WhatsApp-ல் புது வசதி

 

Privacy-ஐ கூட்டும் பொருட்டு WhatsApp-ல் புது வசதி


Privacy-ஐ கூட்டும் பொருட்டு username வசதியை அறிமுகம் செய்தது WhatsApp


இந்த வாரத்தில் இருந்தே பயனர்கள் விருப்பமான பெயர்களை முன்பதிவு செய்யலாம் என்றாலும், இந்த வருட இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிப்பு 


WhatsApp செயலியின் Settings > Account > Username வழியாக பெயரை ரிசர்வ் செய்யலாம்



குழந்தைகளின் Birth Certificateஐ Whatsappல் பெறலாம்

 


 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாட்ஸ்அப்பில் பெறலாம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு


குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை இப்போது மிக எளிதாக வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய தானியங்கி (Automated Chatbot) சேவை மூலம், மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி சில நொடிகளில் சான்றிதழைப் பெற முடியும்.


பெறுவது எப்படி?


எண் சேமிப்பு: 

சென்னை மாநகராட்சியின் பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணான 94450 61913-ஐ உங்கள் மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.


மெசேஜ் அனுப்புதல்: 

நீங்கள் சேமித்த இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் "Hi" அல்லது "Birth Certificate" என டைப் செய்து அனுப்பவும்.


சான்றிதழ் பெறுதல்: 

குழந்தை பிறக்கும் போது மருத்துவமனையில் நீங்கள் பதிவு செய்த அதே மொபைல் எண்ணிலிருந்து மெசேஜ் அனுப்பினால், உங்கள் சான்றிதழ் PDF வடிவில் உடனே வாட்ஸ்அப்பிற்கு வந்துசேரும்.


சான்றிதழ் பதிவிறக்கம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கும், உங்கள் கோரிக்கைகளைப் பதிவு செய்யவும் சென்னை மாநகராட்சி வலைதளம் அல்லது தமிழ்நாடு அரசு இ-சேவை தளம் ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்.


+2 Results ஐ Whatsapp ல் அறியும் முறை



  +2 தேர்வு முடிவுகளை வாட்ஸ்அப்பில் அறியும் முறை



அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2026


தேர்வு முடிவுகள் வெளியீடு


செய்திக்குறிப்பு


மார்ச் 2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு SIEMAT Hall, SCERT, DPI வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.


வகுப்பு

மேல்நிலைப் பொதுத் தேர்வு


தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

08.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு


இணையதள முகவரி

www.thresults.nic.in

www.dge.tn.gov.in

results.digllocker.gov.in


தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.


Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் ஒருவரின் வாழ்க்கை. திறமை அல்லது தன்மதிப்பை நிர்ணயிப்பவை அல்ல. தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலும் நம்பிக்கையை இழக்கவோ, தமக்குத் தாமே தீங்கு விளைவிக்கவோ அல்லது எவ்வித தீவிரமான முடிவுகளையும் எடுக்கவோ கூடாது.


ஒவ்வொரு மாணவரும் வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் முன்னேறி வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள்; மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஆதரவாக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.


இக்காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையுடனும் அக்கறையுடனும் புரிதலுடனும் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வழிகாட்டுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் நேர்மறை எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள் 

 : 14417 / 104 / 14416.


அரசுத் தேர்வுகள் இயக்குநர்


இடம்: சென்னை-6

நாள்: .05.2026.


Whatsapp மூலம் Ambulance வசதி



வாட்ஸ்அப் மூலம் ஆம்புலன்ஸ் வசதி


9445030725 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி உதவி பெறலாம்


Ambulance facility through WhatsApp


வாட்ஸ்அப் செயலியில் ஆம்புலன்ஸ் சேவையைப் பொதுமக்களால் பெற முடியும். இதற்காக பிரத்தியேகமாக 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து குறுந்தகவல் அனுப்பினால் போதும் உங்களது நிகழ் நேர இருப்பிடம் ட்ராக் செய்யப்பட்டு விரைவாக ஆம்புலனஸ் வந்தடையும். 


வாட்ஸ்அப்பில் ஆம்புலனஸ் சேவையைப் பெறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1. முதலில் பொதுமக்கள் தங்களது போனில் 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அடுத்து உங்களது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு Hi என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

3. அதன்பின்பு நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடனே Book Ambulance என்ற லிங்க் வரும். அதை கிளிக் செய்து உங்கள் இருப்பிடத்தைப் பகிர வேண்டும்.

4. பின்னர் உங்கள் கோரிக்கை ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.



5. குறிப்பாக டிரைவரின் பெயர், மொபைல் எண், வாகன எண் ஆகியவை உங்களுக்கு குறுந்தகவலாகவும் அனுப்பப்படும்.

6. அதுவும் ஆம்புலன்ஸின் வழித்தடம், எப்போது வந்து சேரும் என்ற கால அளவையும் நீங்கள் ஆன்லைனில் எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக இந்த புதிய சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.



WhatsApp / Telegram - நடைமுறைக்கு வரும் புதிய விதி & பரப்பப்படும் வதந்திகள்

 


WhatsApp / Telegram பயன்பாட்டில் SIM-இணைப்பு மற்றும் 6-மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்அவுட் - நடைமுறைக்கு வரும் புதிய விதி & பரப்பப்படும் வதந்திகள்


அனைவருக்கும் வணக்கம். நேற்று முதல் இந்த பதிவு சமூக ஊடகங்களில் உலா வருகிறது. பயமுறுத்துகிறது. அது குறித்த சில விளக்கங்கள்...


உண்மையானவை / அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை:


அரசு புதிய விதிகளின் மூலம் WhatsApp, Telegram போன்ற மெசேஜிங் ஆப்கள் அதே SIM-க்கு கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். SIM இல்லாமல் வேலை செய்யக்கூடாது.


WhatsApp Web / Telegram Web போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகள் 6 மணி நேரத்திற்கொரு முறை தானாக லாக்அவுட் ஆக வேண்டும்.


இதன் நோக்கம் மோசடி, போலி SIM, ஆபத்தான கணக்குகளைத் தடுப்பது.


பொய்யான தகவல்கள்


“அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும்”, 

“அனைத்து மெசேஜ்களும் அரசு சேமிக்கும்” — இவை பொய்.


WhatsApp-இல் ✔✔✔, சிவப்பு டிக், “அரசு பார்த்தது”, “அரசு நடவடிக்கை” போன்ற டிக்-மார்க் சிஸ்டம் இருப்பதாக சொல்வது முற்றிலும் பொய்.


அரசியல்/ மத செய்தி அனுப்பினால் “உடனடி கைது” — அப்படி அதிகாரப்பூர்வ விதி இல்லை.


“உங்கள் மொபைல் சாதனங்கள் அனைத்தும் அரசு கண்காணிப்பில் இருக்கும்” — இது பரப்பப்படும் வதந்தி.


“நாளை முதல் எல்லாம் அமலாகும்” — உண்மையில் இது 90 நாட்களில் படிப்படியாக அமலாகும்.


குறிப்பாகச் சொன்னால்


WhatsApp / Telegram பயன்பாட்டில் SIM-இணைப்பு மற்றும் 6-மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்அவுட் மட்டுமே புதிய விதி.


மீதியுள்ள “அழைப்புகள் பதிவு”, “எந்த அரசியல் மெசேஜ் அனுப்பினாலும் கைது”, “மூன்று டிக்/ அரசு பார்த்தது” போன்றவை எல்லாம் பயமுறுத்தும் போலி செய்திகள்.


Odonil Air Freshener Room Spray - 440 ml Combo (Pack of 2, 220ml each) | Lavender Mist & Jasmine Fresh 


https://amzn.to/3YkoirW



50க்கும் மேற்பட்ட சேவைகளை இனி WhatsApp மூலம் பெறலாம் - தமிழ்நாடு அரசு அசத்தல் நடவடிக்கை



50க்கும் மேற்பட்ட சேவைகளை இனி WhatsApp மூலம் பெறலாம் - தமிழ்நாடு அரசு அசத்தல் நடவடிக்கை


‘வாட்ஸ்-அப்’ மூலம் 50 அத்தியாவசிய சேவைகள் : ‘மெட்டா’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு முடிவு


இதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் திறனை மேம்படுத்துதலில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ‘வாட்ஸ்-அப்’ மூலம் அரசின் சேவைகளை செயல்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசேஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ‘வாட்ஸ்-அப்’ ‘சாட்பாட்டினை’ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம். அதன் மூலம் ‘வாட்ஸ்-அப்’பில் புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்றவற்றை எளிதாக செய்ய முடியும். இதனால், அரசு சேவைகள் மக்களின் கையடக்கத்தில் நேரடியாக கிடைக்கின்றன. சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல முறை செல்வதற்கான தேவையும் நீங்குகிறது.


முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பெறலாம்.


இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் அரசின் முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், தமிழ்நாடு மின் அளுமை முகமை முதன்மை செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ், இணை முதன்மை செயல் அலுவலர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இணை இயக்குனர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழ்நாடு மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.


தமிழ்நாடு அரசு, தன்னுடைய சேவைகளை மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.


ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படும். அதிகபட்ச வார்த்தைகளை எழுதி மக்கள் தேவைகளை கேட்டறியலாம். அது மட்டுமல்லாமல் மின் மற்றும் குடிநீர் போன்ற கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும்.


ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.


மக்களை மையமாகக் கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையை தமிழக அரசு கொண்டிருக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.



தற்போது மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தப் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும். மாநிலத்தின் முக்கிய சேவைகளை, வாட்ஸ்அப்பின் எளிமை மற்றும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கான சேவைகளை எளிமையாகக் கிடைப்பதுடன், அதில் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருங்கே ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.


இந்தியாவுக்கான மெட்டாவின் வணிகப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் என்பது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சமூக வலைத்தளமாகும், மேலும் அதன் எளிமை மற்றும் பயன்பாட்டு வசதி அரசு சேவைகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை வழங்குவதற்கான சிறந்த தளமாக அமையும் என்றார்.


An agreement has been signed between the Tamil Nadu government and Meta, under which the people of Tamil Nadu will now be able to access 50 services, including payment of government service fees, through WhatsApp.


TN ICT Announcements : WhatsApp channel Link

 


TN ICT Announcements 📢 WhatsApp channel Link


Follow the TN ICT Announcements 📢 channel on WhatsApp:

 https://whatsapp.com/channel/0029Vb66FWYJpe8XcF745J2b


Welcome to the ICT Announcements channel of Tamil Nadu School Education Department.


This channel shares timely updates, circulars, training links, resources and important information related to ICT, Smart Classrooms, Hitech Labs, and Digital Initiatives.


For: All Administrators-cum-Instructors (AIs), District Supporters, Teachers (all categories), Headmasters, BRTEs, DCs, BEOs, DEOs and CEOs.


Stay informed. Stay empowered.





Tirupati Darshan Ticket via WhatsApp



வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்


Tirupati Darshan Ticket via WhatsApp


திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம். 


சேவையை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு `Hai' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். 


விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் `கேட்வே' உடனடியாக தோன்றும். 


பணம் செலுத்திய உடன், டிக்கெட்  வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும். 


டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கோயில்களுக்கு செல்லலாம். 


`மன மித்ரா` என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது ஆந்திர அரசு..


New features introduced in WhatsApp

 

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்


New features introduced in WhatsApp


வாட்ஸ்ஆப்பில் 3 புதிய அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் வசதிக்காக சாட் செய்யும்போது கூடுதல் அம்சமாக ‘டைப்பிங் இண்டிகேட்டர்’ என்ற வசதியை மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்ஆப்பில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.


வாட்ஸ்ஆப் குரூப்கள் மற்றும் தனி நபர்கள் இடையேயான உரையாடல்களின்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் டைப் செய்து கொண்டிருந்தால் அதை அறிந்துகொள்ளும் விதமாக, டைப் செய்யும் நபரின் முகப்பு படம் “ ... ” என்ற அடையாளத்துடன் காண்பிக்கப்படும். இதன்மூலம் வாட்ஸ்ஆப் குழுக்களில் டைப் செய்யும் நபரை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.


வாட்ஸ் ஆப்பில் டிராஃப்ட் மெசேஜ் என்கிற வசதியும் வர உள்ளது. இதன் மூலம், ஒருவர் டைப் செய்து முடித்தும், அதை உடனடியாக அனுப்பாமல் பின்னர் அனுப்ப வசதியாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரிப்சன் வசதியும் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. இதன்மூலம், வாட்ஸ் ஆப்பில் ஒலி வடிவில் அனுப்பப்படும் மெசேஜ்களை, எழுத்து வடிவில் மாற்றி பயனர்கள் படித்துக்கொள்ள முடியும்.


Heavy rain - Emergency center numbers

 


கனமழை - அவசரகால மைய எண்கள் அறிவிப்பு


Heavy rain - Emergency center helpline numbers 


மாநில அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 


Whatsapp 94458 69848



மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்:


நாகப்பட்டினம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 


Whatsapp 84386 69800


மயிலாடுதுறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588


திருவாரூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 


Whatsapp 94885 47941


கடலூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 


Whatsapp 94899 30520


பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.



WhatsApp group in the name of religion - I.A.S. Officers suspended

 

மதத்தின் பெயரில் வாட்ஸ் அப் குழு - ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் 



WhatsApp group in the name of religion - I.A.S. Officers suspended



 கேரளாவில் மதத்தின் பெயரில் வாட்ஸ்அப் குழு அமைத்த சர்ச்சை: 2 இ.ஆ.ப., அலுவலர்கள் சஸ்பெண்ட்


கேரள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவகாரம் பகிரங்கமாக வெளிவரும் நிலையில், சர்ச்சையின் மையமாக உள்ள 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



கேராளவில் சமீபகால சர்ச்சைக்கு மையமாக இருந்த கேரள தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் கே.கோபாலகிருஷ்ணன் மற்றும் வேளாண் துறை சிறப்பு செயலாளர் என்.பிரசாந்த் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளை கேரள அரசு திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்தது.


'மலையாள  இந்து அதிகாரிகள்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு தொடங்கி பல சமுதாயங்களை சேர்ந்த சக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இணைத்ததோடு மதம் சார்ந்த கருத்துகளை பதிவிட்ட புகாரில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கேரள அரசு சஸ்பெண்ட் செய்ததுள்ளது.


2013-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான கோபாலகிருஷ்ணன், இந்த மாதம் “மல்லு இந்து அதிகாரிகள்” (மலையாள  இந்து அதிகாரிகள்) என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார்.  


"மல்லு இந்து அதிகாரிகள்" குழு அக்டோபர் 30ஆம் தேதி உருவாக்கப்பட்டது, அதில் இந்து மதத்தை பின்பற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். பல அதிகாரிகள் இந்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த குழு  உருவாக்கப்பட்ட சில மணிநேரங்களில் டெலிட் செய்யப்பட்டது.


இதன்பின் ஓரிரு நாளில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு பின்னர் குழு உருவாக்கப்பட்டதாக போலீசில் புகார் கூறினார். இருப்பினும், கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவில்,  போலீஸ் விசாரணையில் அவர் கூறியது போல் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.


அந்த புகாரில், “நண்பர் ஒருவர் இதுதொடர்பாக என்னிடம் கூறியபின்பே இதுகுறித்து எனக்கு தெரியவந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ் - அப் நிறுவனத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோபாலகிருஷ்ணனது செல்போன் ஹேக் செய்யப்படவில்லை என்பது நிரூபனமானது.


அதுமட்டுமின்றி அவரது செல்போன் மூன்று நான்குமுறை ரீ செட் செய்யப்பட்டுள்ளதும் அதன்பின்பே காவல்துறையினரிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது. போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறும் கோபாலகிருஷ்ணன், ஏன் போன் ரீ செட் செய்யப்பட்டது என்பது தொடர்பாக எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வாட்ஸ் அப் குழு தொடர்பான செய்திகள் பொதுவெளியில் வந்து கவனம் பெற்ற பிறகே கோபால கிருஷ்ணன் இதுதொடர்பாக புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.


அதிகாரிகளின் கேடர் ஒற்றுமையை சீர்குலைக்கவும், வகுப்புவாத ஒற்றுமையை வளர்க்கவும் இந்த குழு உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்திய சேவை நடத்தை விதிகள் 1968ன் பல்வேறு பிரிவுகளை மீறுவதாகவும் கருதப்பட்டது. கோபாலகிருஷ்ணன் துறைசார்ந்த ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டார்.


இந்நிலையில் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கோபாலகிருஷ்ணனை முதலமைச்சர் பினராயி விஜயன் இடைநீக்கம் செய்தார். 


வேளாண் துறை சிறப்பு செயலாளர் என். பிரசாந்த் என்ற ஐஏஎஸ் அதிகாரியும், கூடுதல் தலைமைச் செயலாளரான ஜெயதிலக்கிற்கு எதிராக பதிவுகளை பதிவிட்ட புகாரின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


2017-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான பிரசாந்த், கடந்த மூன்று நாட்களாக சக ஐஏஎஸ் அதிகாரியான கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ.ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல கருத்துகளை  வெளியிட்டு இவரும் சர்ச்சையில் சிக்கினார்.


தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரனின் அறிக்கையின் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். முந்தைய நாள், வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன், “அதிகாரிகளை அவர்கள் நினைப்பது போல் செயல்பட அரசாங்கம் அனுமதிக்காது… அதிகாரிகள் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி செயல்பட வேண்டும்” என்று கூறினார்.




WhatsApp introduces new feature to Block unknown account messages...


அடையாளம் தெரியாதவர்களின் மெசேஜ்களுக்கு செக் - வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்...


WhatsApp introduces new feature to Block unknown account messages...


வாட்ஸ்அப்பை அப்டேட் செய்த ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.


வாட்ஸ்அப்பில் > Settings > Privacy > Advanced > Block unknown account messages என்ற முறையை பாலோ செய்வதன் மூலம், இந்த புதிய அம்சத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.


குறிப்பாக, ஸ்பேம் மெசேஜ்களினால், செல்போனின் செயல்திறன் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக, இந்த புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



>>> வாட்ஸ்அப் செயலியை Update செய்ய இங்கே சொடுக்கவும்...


செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள புதிய Whatsapp Channel தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...


 செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள புதிய Whatsapp Channel தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...


தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகத்தின் whatsapp சேனல் தொடக்கம்...


தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது. 



எனவே , சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டை ( QR Code ) ஸ்கேன் செய்து பின் தொடரவும் .


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼



>>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





வாட்ஸ்அப் சேனல்கள் - நான்கு புதிய அம்சங்கள்...


 வாட்ஸ்அப் சேனல்கள் - நான்கு புதிய அம்சங்களைப் பெற்றுள்ளன - WhatsApp Channels just got four new features...


வாட்ஸ்அப் குரல் குறிப்புகள் மற்றும் வாக்கெடுப்புகளை சேனல்களுக்கு அறிமுகப்படுத்துகிறது, பிராண்டுகள் மற்றும் பிரபலங்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் புதிய வழிகளில் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது... 


கூடுதலாக, அரட்டை பயன்பாடு சேனல் உரிமையாளர்களை பல நிர்வாகிகளை அமைக்க அனுமதிக்கும், அதே நேரத்தில் சந்தாதாரர்கள் நிலை புதுப்பிப்புகள் வழியாக சேனல் இடுகைகளைப் பகிரவும்... 


இந்த புதிய சேர்த்தல்களை மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப்பில் ஒரு சேனல் இடுகையில் அறிவித்தார். வாட்ஸ்அப் சேனல்கள் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிராண்டுகள், பிரபலங்கள் மற்றும் பொது நபர்களுக்கான ஒளிபரப்பு கருவியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு புதிய கருத்து இல்லை என்றாலும், உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலிகளில் ஒன்றான சேனல்களின் வருகையால் மில்லியன் கணக்கானவர்கள் தங்களுக்குப் பிடித்த நபர்கள்/ நிறுவனங்களிடமிருந்து நேரடியாகப் புதுப்பிப்புகளைப் பெற முடியும். திரைக்குப் பின்னால், வாட்ஸ்அப் டெவலப்பர்கள் வாக்கெடுப்புகள் மற்றும் குரல் செய்திகளை அனுப்புதல் போன்ற சேனல்களுக்கான சில புதிய செயல்பாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அரட்டை பயன்பாடு இப்போது உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சங்களை (மேலும் பல) பரவலாக வழங்குகிறது... 


Meta CEO Mark Zuckerberg இன் சேனல் இடுகையின் படி (WABetaInfo வழியாக), WhatsApp சேனல்கள் மொத்தம் நான்கு புதிய அம்சங்களைப் பெறுகின்றன. 


அவற்றில் முதலாவது குரல் குறிப்புகள் அல்லது ஆடியோ செய்திகள். ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் பதிப்பு 2.23.23.2 உடன் இந்த அம்சம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்... 


சேனல் நிர்வாகிகள் எப்போதுமே தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு குறுஞ்செய்திகளையும் மீடியாவையும் அனுப்ப முடியும் என்றாலும், குரல் குறிப்புகளைச் சேர்ப்பது பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான புதிய வழியைத் திறக்கிறது. 


அடுத்த அம்சம் சேர்த்தல் வாக்கெடுப்பு, 

சேனல் நிர்வாகிகள் தங்கள் தளத்தின் மனநிலையை விரைவாக அளவிட முடியும். இந்த பண்புக்கூறு இப்போது வாட்ஸ்அப் குழு அரட்டைகளில் பிரதானமாக உள்ளது, எனவே இது சேனல்களுக்கும் நீட்டிக்கப்படுவது தர்க்கரீதியானது. இருப்பினும், இது அம்சத் தொகுப்பின் ஒரு பகுதியாக மாறுவதற்கு இவ்வளவு நேரம் எடுத்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Zuckerberg பகிர்ந்துள்ள கருத்துக்கணிப்பின் அடிப்படையில் (கீழே உள்ள படம்), பங்கேற்பாளர்கள் ஒரே நேரத்தில் பல விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்... 



WhatsApp MZ சேனல் 4 அம்சங்கள் சேனல் உரிமையாளர்கள் இறுதியாக பல நிர்வாகிகளை அமைக்க முடியும் என்றும் ஜூக்கர்பெர்க் கூறுகிறார். 24 மணிநேரமும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டிய பெரிய நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். 


கடைசியாக, பேஸ்புக் இணை நிறுவனர், மக்கள் தங்கள் நிலைகளில் சேனல் இடுகைகளை எவ்வாறு சேர்க்கலாம் என்பது பற்றியும் பேசினார். டிசம்பரில் வெளியிடப்பட்ட பீட்டா பதிப்பின் மூலம் இந்த குறிப்பிட்ட அம்சம் செயல்பாட்டில் இருப்பதைக் கண்டோம், இதில் டெவலப்பர்கள் சேனல் புதுப்பிப்பிலிருந்து எடுக்கப்பட்ட நிலை புதுப்பிப்புகளுக்கு கூடுதல் சூழலைச் சேர்த்துள்ளனர்... 


இந்த சேர்த்தல்களை வெளியிடுவதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை, ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக பீட்டா கட்டத்திற்கு அடுத்து உள்ளன என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. ஆண்ட்ராய்டு, iOS, வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடுகளில் இந்த அம்சங்கள் வாட்ஸ்அப்பின் நிலையான பதிப்பைப் பெறுவதற்கு சில நாட்கள் முதல் வாரங்கள் வரை ஆகலாம். இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை சேனல் உரிமையாளர்கள் மீது கவனம் செலுத்துகின்றன, நிலை புதுப்பிப்புகள் மூலம் சேனல் இடுகைகளைப் பகிரும் திறன் மட்டுமே சந்தாதாரர்களை மையமாகக் கொண்ட கூடுதலாகும். 


ஆயினும்கூட, இந்த புதிய சேர்த்தல்கள் வாட்ஸ்அப்பின் ஒருவழி ஒளிபரப்பு கருவியில் பிராண்டுகளுக்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஈடுபாட்டை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும்...


வாட்ஸ்அப்பில் (Offline) புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2GB வரையிலான கோப்புகளை ஷேர் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்...


ஆண்ட்ராய்டில் உள்ள Near by share போன்று 'ஷேர் ஃபைல்ஸ்' என்ற Option-ஐ பயன்படுத்தி Files-ஐ ஷேர் செய்து கொள்ளலாம். 


பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் Request-ஐ காண இயலும்.


இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மெட்டா தகவல். 


புதிய அப்டேட்கள் மூலம் பயனர்களை ஈர்த்து வருகிறது வாட்ஸ்அப்.


வாட்ஸ்அப் புதிய அப்டேட்ஸ் - இனி முக்கியமான வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘Pin' செய்து வைக்கலாம்...

 வாட்ஸ்அப் புதிய அப்டேட்ஸ் - இனி முக்கியமான வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘Pin' செய்து வைக்கலாம் (WhatsApp New Updates - Now you can 'Pin' important WhatsApp messages)...



ஒரே வாட்ஸ்அப் செயலியில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை (How to use two accounts on the same WhatsApp app)...


 ஒரே வாட்ஸ்அப் செயலியில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி அறிமுகம்...


ஒரே வாட்ஸ்அப் செயலியில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை (How to use two accounts on the same WhatsApp app)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (Click Here to Download)...


வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அந்த செய்தியை திருத்தம் செய்து கொள்ளலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு (WhatsApp company announced that within 15 minutes of sending a message on WhatsApp, the message can be edited)...

 வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அந்த செய்தியை திருத்தம் செய்து கொள்ளலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு (WhatsApp company announced that within 15 minutes of sending a message on WhatsApp, the message can be edited)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சைபர் கிரைம் குற்றத்திற்குள் வரும் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் - குழு நிர்வாகி காவல் நிலையத்தில் ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு அறிவுறுத்தல் (Information shared in WhatsApp group falling under cybercrime - District Crime Branch instructs Group Administrator to appear at police station)...



>>> சைபர் கிரைம் குற்றத்திற்குள் வரும் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் - குழு நிர்வாகி காவல் நிலையத்தில் ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு அறிவுறுத்தல் (Information shared in WhatsApp group falling under cybercrime - District Crime Branch instructs Group Administrator to appear at police station)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்