கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sanjay Malhotra appointed as RBI Governor for next 3 years


ஆர்.பி.ஐ. ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்


Sanjay Malhotra appointed as Governor of Reserve Bank of India for next 3 years


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவு; சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11 முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார்.


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை, இப்பதவியில் நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாசின் பதவிக்காலம் வரும் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடர் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தானில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். வருவாய் மற்றும் வரி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா, ஐஐடி கான்பூரில் படித்தவர். அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் (Public Policy) முதுகலை பட்டம் பெற்றவர்.


மேலும், அவர் வருவாய்த் துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, நிதி சேவைகள் துறை செயலாளராக இருந்தார். குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம், நிதி, வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளில் கொள்கைகளை வடிவமைத்து, மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நற்பெயரை பெற்றவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.1 - Updated on 26-03-2026

     KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.1 *  IFHRMS   Kalanjiyam Mobile App New App New Update  *  Version 1.23.1 *  Updated on 26-03-20...