கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Arittapatti Tungsten Mining Project Abandoned

 


அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் திட்டம் கைவிடப்பட்டது


மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு


நாயக்கர்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு

 மினரல் பிளாக் 

இடுகையிடப்பட்டது: 23 ஜனவரி 2025 4:54PM ஆல் PIB Dethi 

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், ஸ்ரீ ஜி. கிஷன் ரெட்டி, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலகாரர்களை (பாரம்பரிய சமூகத் தலைவர்கள்) புது தில்லி சுரங்க அமைச்சகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் சந்தித்தார். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமவளத் தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுச் சின்னம் மற்றும் ஏராளமான கலாசார பாரம்பரிய இடங்கள் அடங்கியுள்ளதாக மத்திய அமைச்சரிடம் அம்பலகாரர்கள் தெரிவித்தனர். 

சுரங்க அமைச்சகம் டிசம்பர் 24, 2024 தேதியிட்ட செய்திக்குறிப்பில், தொகுதி ஏலத்திற்குப் பிறகு, அந்தத் தொகுதிக்குள் ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் மேற்படி ஏலத்திற்கு எதிராக பல பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளன என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

2025 ஜனவரி 22ம் தேதி நடந்த கூட்டத்தில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என அம்பலகாரர்கள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். தூதுக்குழுவின் பேச்சை பொறுமையாக கேட்ட மத்திய அமைச்சர், பல்லுயிர் மரபு பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். 

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten

Mineral Block

Posted On: 23 JAN 2025 4:54PM by PIB Dethi

Union Minister of Coal and Mines, Shri G. Kishan Reddy met with Ambalakarars(traditional community leaders) from Madurai district of Tamil Nadu at the Minister's chamber in the Ministry of Mines, New Delhi. The Ambalakarars informed the Union Minister that the Nayakkarpatti Tungsten mineral block includes the Arittapatti Biodiversity Heritage Site and a number of cultural heritage sites.

It may be noted that Ministry of Mines in a press release dated 24th December, 2024 had stated that after auction of the block, a number of representations have been received against the said auction on the ground that there is a Biodiversity Heritage Site within the block area.

During the meeting on 22nd January, 2025, the Ambalakarars requested the Union Minister to cancel the auction of the Nayakkarpatti Tungsten block. The Union Minister patiently heard the delegation and expressed that the Union Government fully supports the bio diversity heritage protection.

After detailed deliberations, considering the importance of the Biodiversity Heritage Site in the area and the commitment of the Government of India under Prime Minister Shri Narendra Modi's leadership towards protecting traditional rights, it has been decided to annul the auction of Nayakkarpatti Tungsten mineral block.

Shuhaib T




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains

   பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் Even words or acti...