ஓய்வூதியத்தில் வாழ்கிறது ஒரு உயிர் - கட்டுரை
Lives life in pension
*"ஓய்வூதியம் மட் டும் இல்லை என்றால், நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன் தம்பி,"* என்கிறார் முதியோர் இல்லத்தில் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டி ருக்கும்,*ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி.
இன்று பெற்ற பிள்ளைகள், உற்றார் உறவினர் கவனிப்பு இல்லாமல், வீட்டின் ஒரு மூலையில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு முடங்கி கிடக்கும் முதியவர்கள் ஏராளம்.
முதியோர் இல்லங்களில் லட்சக்கணக்கான முதியவர்கள், மருத்தை விட கசப்பான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர்.
தன் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பதற்காக, தன் வாழ்நாளில் சம்பாதித்த பணம், சொத்து முழுவதையும் பிள்ளைகளின் படிப்புக்காகவும், வேலைக் காகவும் கொடுத்து விட்டு, அவர்களின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழ்ந்த ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி, எந்த ஆதரவும் இல்லாமல், இப்போது முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.
*"ஓய்வூதியம் மட் டும் இல்லை என்றால் நான் எப்பவோ செத் துப் போயிருப்பேன் தம்பி,"* என்ற அவர் தொடர்ந்து பேச துவங்கினார்.
நான் சாதாரண கிளார்க்காக அரசு வேலையில் சேர்ந்து, பச்சை இங்கில் கையெழுத்து போடும் அதிகாரியாக ரிடையர் ஆனேன். என் சர்வீஸ் காலத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை. அதனால் என் கூட வேலை செய்தவர்களுக்கு பிடிக்காது, என் சொந்த பந்தங்களுக்கும், நண்பர்க ளுக்கும் கூட என்னை பிடிக்காது.
நேர்மையாக வாங்கிய சம்பளத்தில்தான், என் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தேன்.
படிப்புக்காக வட்டிக்கு கடன் வாங்கி, அதை கண்ணியமாக திருப்பி கொடுத்து இருக்கிறேன்.
மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தேன். மகன் வெளி நாட்டில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். வசதியான இடத்தில் அவனே பெண் பார்த்து கல்யாணம் செய்து கொண்டான்.
"அப்புறம் ஏன் ஹோமில் இருக்கீங்க...?"
"என் மனைவி இருக்கும் வரைக்கும் என் வீட்டில்தான் இருந்தேன். அவள் இறந்ததுக்கு அப்புறம் தனியாக இருந்தேன். நான் இருந்த வீடு, நகரத்தின் மையப்ப குதியில் இருந்ததால், ரூ.80 லட்சத்துக்கு விலைக்கு கேட்டார்கள்.
மகன் வீட்டை விற்று விட்டு, என் கூட ஆஸ்திரேலியாவுக்கு வந்து விடுங்கள் என்றான். சந்தோஷமாக வீட்டை விற்று, மகன் கையில் பணத்தை கொடுத்தேன். அவன் என் கையில் ஐந்து லட்சத்தை கொடுத்து விட்டு, 'இந்த ஹோமில் இருங்கள், நான் இரண்டு மாதத்துக்குள் விசா வாங்கி வந்து உங்களை கூட்டிக்கொண்டு போகிறேன்' என்று போனான்.
இன்றோடு எட்டு வருஷமாகி விட்டது. அவன் வந்து கூட்டிக்கொண்டு போக வில்லை. எப்பவாவது போன் செய்து இரண்டு நிமிஷம் பேசுவான்.
கூட்டி போகாததுக்கு ஏதேதோ காரணங்கள் சொன்னான். பிறகு கொரோனா வந்ததை, இறுதி காரணமாக சொன்னான். அதன் பிறகு போன் கூட செய்வதில்லை. பம்பாயில் இருக்கும் மகள் கூட போக விருப்பம் இல்லை.
அரசு கொடுக்கும் ஓய்வூதியம் மட்டும் இல்லை என்றால், நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன் தம்பி. ஓய்வூதியத்தில்தான் இந்த உயிர் வாழ்கிறது.
சொல்லி முடித்த முதியவர் *குலுங்கி, குலுங்கி அழ ஆரம்பித்தார்*. அவரை தேற்றும் வழி தெரியாமல்,நாம் விழித்து நின்றோம்.