5,300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் உருக்கு இரும்பின் தொழில்நுட்பம் - முதலமைச்சர் அறிவிப்பு
Technology of Wrought Iron in Tamil Nadu 5,300 Years Ago - Chief Minister's Announcement
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது.
5,300 ஆண்டுகளுக்கு முன்னரே உருக்கு இரும்பின் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகம் ஆகின.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியில்துறை ஆராய்ச்சிகளின்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகில் உள்ள தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பகுப்பாய்வுகளின் முடிவுகளின்படி கி.மு.3,345ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமானது தெரியவந்துள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் (ஜனவரி 23) அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், " கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்றார்கள்.
இன்று அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று கூறியிருந்தேன். பலரும் அது என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அறிவிப்பு என்னவென்றால், `தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. இதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். 5300 ஆண்டுகளுக்கு முன்னாடியே இரும்பின் பயன்பாடு அறிமுகம் ஆகிவிட்டது. அதற்கான ஆய்வு முடிவுகள் நம்மிடம் இருக்கிறது" என்று அறிவித்திருக்கிறார்.