அழகான பசுமைவெளியை ரசிக்க ஒரு அற்புதமான வாகனம் இரட்டை அடுக்கு பேருந்து
A double decker bus is an amazing vehicle to enjoy the beautiful greenery in Munnar
கேரள மாநிலத்தின் மூணாறு மலைவாழிடத்தின் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று மூணாறில் புதிய இரட்டை அடுக்கு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த திரு. கணேஷ் குமார், இரட்டை அடுக்குப் பேருந்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்றார்.
மூணாறு ராயல் வியூ இரட்டை அடுக்குப் பேருந்து, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உயர் மலைத்தொடரின் 360 டிகிரி காட்சியை பேருந்திலிருந்து வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிப்படையான கண்ணாடிப் பலகை கொண்ட இந்தப் பேருந்தில் மேல் தளத்தில் 38 பேரும், கீழ் தளத்தில் 12 பேரும் அமரலாம். இந்தப் பேருந்து மூணாறு-தேவிகுளம் வழித்தடத்தில் தினசரி நான்கு சேவைகளை இயக்கும்.