பார்த்தீனியம் செடிகளின் தீமைகளும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
Disadvantages of Parthenium plants and methods of control
மனிதர்கள் - கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
விழிப்புணர்வு வாரம்
பார்த்தீனியம் விழிப்புணர்வு குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், தொழில்நுட்ப வல்லுனர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அங்கமான ஜபல்பூரில் அமைந்துள்ள களை ஆராய்ச்சி இயக்குனரகம், பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் பரவியுள்ளது
பார்த்தீனிய செடிகள் மெக்சிகோ, தென் மற்றும் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் பார்த்தீனியம் செடிகள் 1950-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த செடியானது மராட்டிய மாநிலத்தில் கோதுமை இறக்குமதி செய்தபோது ஊடுருவியதாக கருதப்படுகிறது. தற்போது இந்த செடி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. ஒரு முறை பார்த்தீனியம் ெசடி உற்பத்தியாகி விட்டால் எந்த சூழ்நிலையிலும், அதாவது மழை, வறட்சி எதையும் தாங்கி வளரக்கூடியது.
பொதுவாக பார்த்தீனியம் ஒரு விஷ செடி. மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
இது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ள செடி. இவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்துமா, தொழுநோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.
பார்த்தீனியம் பரவியுள்ள பகுதிகளில் மேயும் கால்நடைகளில் இருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியது. பார்த்தீனியத்தின் மகரந்தத்தூள் சரும நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை உடையது.
பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்தும் முறை
பொது இடங்கள் அல்லது பயிரிடாத நிலங்களில் இருக்கும் பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற வேண்டும்.
ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய் வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும்.
இந்த செடிகளின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் கட்டுப்படுத்தி தடுத்து விடுகிறது. மழைப்பருவம் தொடங்கும் காலமே மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். இந்த மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது வண்டுகளை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.
கையுறை அணிந்து அகற்ற வேண்டும்
பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல் தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனிய செடிகளை ஆட்களைக்கொண்டு கையுறை அணிந்து கைக்களையாக அகற்ற வேண்டும். ஆட்களைக்கொண்டு அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன் பார்த்தீனி செடிகளால் ஏற்படக்கூடிய தோல் தொடர்பான நோய்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகமாகவும், மீண்டும் மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில், உடனடியாகக் கட்டுப்படுத்த அட்ரஸின், 2,4-டி, கிளைபோசேட் மற்றும் மெட்ரி பூசன் போன்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது பார்த்தீனிய செடியில் ஒரு வகை.
1 இந்த செடியின் வாழ்நாள் மூன்று மாதம்.
2. இந்த செடிகள் பூக்கும்போது காலை ஆறு மணி முதல் எட்டு மணிவரை இதன் அருகில் இருந்தாலே சுவாசப் பிரச்சனை ஏற்படும்.
3. இந்த செடி வாழும் இடங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சளி பிரச்சனையும், நுரையீரல் பிரச்சனையும் ஏற்படும்.
4. இந்த செடிகளின் பூக்கள் காய்ந்து உதிர்ந்ததும் முளைக்காது.
5. உதிர்ந்த விதைகள் மழை பெய்த மூன்றாம் நாளே முளைக்க துவங்கிடும்.
6. முளைத்த ஏழாம் நாள் முதல் பதினைந்து தினங்களுக்குள் பூ பூத்து விதையும் தயார் செய்துவிடும்.
7. தமிழ்நாடு அரசு, பார்த்தீனிய செடிகளை அழிக்கவும் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்திரவிட்டு நிதியும் ஒதுக்கியது.
8. இவற்றை அழிக்க வேண்டுமெனில் கோடை காலம் முடிந்ததும் ஏற்படும் முதல் மழையில் ஏழு முதல் 13 தினங்களுக்குள் வளர்ந்த செடிகளை பூப்பதற்கு முன்னரே எடுத்து பிடுங்கி நெருப்பிலிட்டு எரித்து விடவேண்டும்.
9. இச்செடிகளை வெறும் கையால் பிடுங்ககூடாது.
கையுறை முக்கியம்.
10. சொரி சிறங்கு படை தேமல் போன்றவை ஏற்படுத்தும்.
எனவே கவனமாக கையாளவும் என்பதைவிட நமது வீட்டருகிலோ தோட்டத்தின் அருகிலோ இருந்தால் அவற்றை மேற்சொன்னவாறு கண்டறிந்து நெருப்பின்மூலம் எரித்து அழிக்கவும். ...
இச்செடியை அழிப்பது கட்டாயமாகும். ஏனெனில், இவை விளைநிலங்களையும் வளிமண்டலத்தையும் பெரிதும் மாசுபடுத்துகின்றன. இயற்கையான பல தாவரங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவ்வினங்களே முற்றிலும் அழிவதற்கு பெருங்காரணமாய்த் திகழ்கின்றன. மனிதர்கள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு காற்று மாசுபடுதல் மூலம் சுவாசம், நுரையீரல் மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாக கொண்ட கரட் புல்/ மல்லிக்கிழங்குப் புல்/ காஜர் ஹான்ஸ்/ பார்த்தினியம் என்றழைக்கப்படும் பார்த்தீனியம் செடிகள் (Parthenium hysterophorus) களைச்செடிகளாக பயிர்களுக்குப் பாயும் நீரையும் பங்குபோடுகின்றன.
அவற்றை முறைப்படி அழிக்க செடிகளைப் பூக்கள் சிதறாமல் வேரோடு பிடிங்கி பள்ளத்தில் இட்டு, கல் உப்பு கலந்த சோப்பு நீர்க்கரைசல் தெளித்து அல்லது காமாக்சின் (எறும்பு மருந்தாகவும் பயன்படுகிறது) என்னும் வேதிப்பொருளை இட்டு, செடிகள் பட்டுப் போய் வாடிய பின், எரித்து, குழிகளை மூடி, அந்த இடங்களில் ஆவாரம் பூச் செடிகள் நட்டி வளர்ப்பதன் மூலம் மட்டுமே இக்களைகளை நாம் அழிக்கமுடியும்.
இவைகளை தழைச்சத்தாக இடுவதன் மூலம் மேலும் இதன் பூக்கள் மூலம் இவை வளர்ந்து பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஆடு, மாடு மற்ற கால்நடைகளுக்கு இரையாக போட்டாலோ, மேச்சலில் அவைகள் தவறுதலாக உண்டாலோ அவற்றிற்கு நோய்கள் வந்து இறைச்சி மற்றும் பால் மூலம் மனிதர்களைத் தாக்குவதோடு, சாணக்கழிவுகளில் இதன் மகரந்தங்கள் மீண்டும் இவை வளர்ந்து பரவிப் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஆகையால், இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.