கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Information on income tax for monthly salary people in today's budget



 இன்றைய பட்ஜெட்டில் மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி குறித்த தகவல்கள்


Information on income tax for monthly salary people in today's budget


  வருமான வரி கணக்கிடுவதற்கு வருடம் முழுவதும் மொத்தம் ஒருவருடைய வருமானம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும் அவ்வாறு கணக்கிடும்போது அவருடைய ஆண்டு ஊதிய வருமானம் 12 லட்சத்து 75 ஆயிரத்திற்குள் இருந்தால் அவருக்கு வருமான வரி  வராது.


 ஆனால் ஒருவர் 12.75 லட்சத்திற்கு (12,75,000) மேல் வருடத்திற்கு வருமானம் ஈட்டுகிறார் எனில் அவர் வருமான வரி செலுத்த வேண்டும்.


முதல் நான்கு லட்சங்களுக்கு வருமான வரி இல்லை

 அடுத்த நான்கு லட்சத்திற்கு 5% அதாவது 20,000 

அடுத்த நான்கு லட்சங்களுக்கு 10% அதாவது 40 ஆயிரம் 

அடுத்த நான்கு லட்சங்களுக்கு 15 சதவீதம் அதாவது 60,000 

அடுத்த நான்கு லட்சங்களுக்கு 20% அதாவது 80,000 என வருமான வரியை நாம் கணக்கிட்டு செலுத்த வேண்டும்.

 

 இந்த வரி விதிப்பு முறை குரூப் சி & குரூப் டி ஆகிய பணியிடங்களில் பணியாற்றுபவர்களுக்கு நன்மை தரக்கூடியது 


அதே நேரம் குரூப் பி & குரூப் ஏ பணியிடங்களை சேர்ந்தவர்களுக்கு சிறிய அளவிலான நன்மைகளை மட்டுமே கிடைக்கும் வகையில் உள்ளது.


இருப்பினும் 12.75 லட்சம் வரை சம்பளம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்பது வரவேற்கத்தக்கது


 அதே நேரம் புதிய வருமான வரியில் சிபிஎஸ் உள்ளிட்ட தொகைகளை கழித்துக் கொள்ளும் வசதியை அமல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Budget 2025-2026 Announcements (In Tamil) - Speech by Finance Minister Nirmala Sitharaman - February 1, 2025

  பட்ஜெட் 2025-2026 அறிவிப்புகள் (தமிழில் - முழுமையாக) - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் உரை -  பிப்ரவரி 1, 2025 Budget 2025-2026 ...