மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்டின்) சிறப்பு அம்சங்கள்
Special Features of Union Budget 2025-2026
>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
• சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது
• தாமரை விதைகளுக்கு புதிய வாரியம்!
தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்
• கிரெடிட் கார்டு உச்ச வரம்பு உயர்வு
கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது
• அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்
• இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்
• ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம்
• தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
• பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை
• பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்
• லாஜிஸ்டிக் மையமாக மாற்றமடையும் இந்திய அஞ்சல்துறை
புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளுக்கு அடிப்படை இறக்குமதி வரியில் விலக்கு.
36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு-பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி.
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும்.
அடுத்த ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள்.
லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து; எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு.
பட்டியலின பெண்(எஸ்சி/எஸ்டி) தொழில்முனைவோர்களின் முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள். இவர்கள் சுயதொழில் மூலம் முன்னேற ரூ.2 கோடி வரை கடன்
இந்திய மின்சார தேவையை சமாளிக்கும் நோக்கில் அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம். 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகா.வாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 50,000 டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
உடான் திட்டம் மூலம் இந்தியாவில் மேலும் 120 இடங்களில் விமான நிலையங்கள்.
இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் அங்கன்வாடிகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை.