பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உட்பட 38 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வாலாயம் எண்: 502, நாள் : 09-02-2025 வெளியீடு
Transfer of 38 IAS Officers including Principal Secretary School Education - Government of Tamil Nadu Ordinance G.O.No: 502, Dated : 09-02-2025 Issued
38 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக திரு. பி. சந்திரமோகன் அவர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரத சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக மதுமதி, உயர்கல்வித்துறை செயலராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலராக மணிவாசன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலராக சந்திரமோகன், மனிதவள மேலாண்மைத்துறை செயலராக கோ.பிரகாஷ், பொதுப்பணித்துறை செயலராக ஜெயகாந்தன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்