கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BJP leader Annamalai condemns Tamil character ‘ரூ' instead of Devanagari character '₹' in Tamil Nadu budget report



 தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையில் தேவநாகரி எழுத்துருவான ‘₹' குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ‘ரூ' இடம்பெற்றுள்ளதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்


BJP leader Annamalai condemns Tamil character ‘ரூ' instead of Devanagari character '₹' in Tamil Nadu budget report


இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபாய் சின்னத்தை (₹), தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ் எழுத்தான ‘ரூ' என மாற்றுகிறது.


தமிழ்நாடு அரசு மாற்றியுள்ள ரூபாய் குறியீடு (₹), திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் உருவாக்கியது. அதனையே மாற்றியுள்ளனர் - பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கண்டனம்.


தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் '₹'க்கு பதிலாக 'ரூ' என தமிழில் குறியீட்டை வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பட்ஜெட்டிற்கான இலச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ரூபாயைக் குறிக்கும் தேவநாகரிக எழுத்தான ‘₹’ என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ எனும் எழுத்தை பயன்படுத்தி இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.


புதியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழி கொள்கையையும் ஏற்கமாட்டோம் என்றும், தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை தான் நீடிக்கும் என தமிழ்நாடு அரசு வலுவாக சொல்லிவருகிறது. இந்நிலையில், இந்தி மொழிக்கு அடிப்படையாக இருக்கும் தேவநாகரி குறியீடான ‘₹’ என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ என பயன்படுத்தியிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழர் ஒருவர் உருவாக்கி, பாரதம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபாய் சின்னத்தை (₹), தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாற்றுகிறது. தமிழ்நாடு அரசு மாற்றியுள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் உருவாக்கியது” என பதிவிட்டுள்ளார்.



இந்நிலையில் "ரூ." எனும் தமிழ் குறியீட்டைப் பயன்படுத்த தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ள அண்ணாமலை, தனது முந்தைய பதிவுகளில் "ரூ." எனவே பதிவிட்டு வந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள பதிவு இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Jobs in Anganwadi - Educational Qualification : 10th/12th standard - Monthly Salary Rs. 7700 - Number of vacancies: 7,783 - G.O. Released

அங்கன்வாடியில்  காலியாக உள்ள 7,783 பணியிடங்களை நிரப்புவதற்கு திருத்திய / ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை (நிலை) எண்: 31, நாள் : 1...