இந்திய கடவுச்சீட்டில் முக்கிய மாற்றங்கள்
Major changes in Indian passport
இந்திய பாஸ்போர்ட்டில் முக்கிய மாற்றங்கள்
இந்திய அரசாங்கம் சமீபத்தில் பாஸ்போர்ட் வழங்கும் முறையில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இவை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன. முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:
1. புதிய நிற அடையாள முறை:
- அரசு அதிகாரிகளுக்கு: வெள்ளை நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.
- வெளிநாட்டு தூதர்களுக்கு: சிவப்பு நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.
- சாதாரண குடிமக்களுக்கு: முந்தையபோல் நீலம் நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.
இந்த நிற அடையாள முறை பாஸ்போர்ட் வகைகளை வேறுபடுத்துவதற்கு உதவுகிறது.
2. பிறப்புச் சான்றிதழ் அவசியம்:
அக்டோபர் 1, 2023 முதல் பிறந்த அனைவருக்கும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது உள்ளாட்சி/நகராட்சி/ மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் வழங்கிய பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3. முகவரி விவரங்கள்:
தனியுரிமை பாதுகாப்பு கருதி பாஸ்போர்ட்டில் இனி குடியிருப்பு முகவரி அச்சிடப்படாது. அதற்கு பதிலாக, முகவரி விவரங்கள் பார்கோடில் (Barcode) பதியப்படும், இது தேவையானபோது குடிவரவு (Immigration) அதிகாரிகளால் மட்டும் ஸ்கேன் செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
4. பெற்றோரின் பெயர்கள்:
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் இனி பெற்றோரின் பெயர்கள் வழங்க தேவையில்லை. இது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
இந்த மாற்றங்கள் பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறையை பாதுகாப்பானதாகவும் தனியுரிமை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவை தளமான https://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink# சென்று தெரிந்து கொள்ளலாம்.