முயற்சி திருவினை ஆக்கும் - இன்றைய சிந்தனை - Today's Thought
ஓரிரு முறை தோல்வியை சந்தித்து விட்டால் பின் சிலர் துவண்டு போய் விடுகிறார்கள்.! தோல்வி நிரந்தரம் அல்ல,
தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக் கொண்டு அதில் இருந்து மீண்டு முன்னேற வழியைப் பார்க்க வேண்டும்...! .
இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம் தான் வெற்றிக்கு நிச்சயமானவை".
தோல்விகள் கதவை மூடும் போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித் திறப்பது தான் வெற்றிக்கான சாவி..
இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணம் அடையும். எந்தச் செயலுமே ஆரம்பிக்கும் போது மலைப்பாகத் தான் தோன்றும்.
குழந்தைகள் கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்து தான் நடை பயிலுகின்றன. கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை.
விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பலர் தங்களின் சாதனைகளை நிகழ்த்தியிருக்க மாட்டார்கள்.."ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பது நமது பலவீனமே..
வெற்றிக்கான பாதையாக எடிசன் கூறுவது : "தேவையானது ஒரு சதவிகிதம் ஊக்கம் - 99 சதவிகிதம் விடாமுயற்சி"..
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூலிடிஸ் சொல்கிறார்,
"இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தைப் பெற்று விட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இவ்வளவு இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடைய வேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழி காட்டும் சர்வ வல்லமை படைத்தது" என்று.
பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியை அவரை உலக அறிஞராக்கியது.
விடாமுயற்சிக்கு உதாரணங்களாக, மேடம் கியூரி – மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
உலகில் சாதனையாளர்கள்
எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது. அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள்; சாதனை படைத்தார்கள்; தொடர்ந்தும் வருகிறார்கள்..
அய்யன் வள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார், "முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று!
*ஆம்.,நண்பர்களே.*
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை.
உள்ளத்தில் உறுதியும், தெளிவான திட்டமும், அதோடு
விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
சிகரங்கள் காத்து இருக்கின்றன..
சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்...