கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார்



 நடிகர் மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார்


பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார்.


தாஜ்மஹால், சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகர் மனோஜ் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் ஒரே மகன். தேனி மாவட்டம், கம்பத்தில் 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்த மனோஜ், திரைத்துறையில் நடிப்பதில் மட்டுமின்றி, இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், தனது தந்தை பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.


இவர் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார். அந்த வகையில், பாரதிராஜா தான் இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் மனோஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து, சமுத்திரம், மாநாடு, அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'மார்கழி திங்கள்' வெளியானது. 


இவர் ஈரநிலம் என்ற படத்தில் நடித்தபோது அதில் கதாநாயகியாக நடித்து நடிகை நந்திதா உடன் காதல் ஏற்பட்டது. மனோஜ் - நந்திதா ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.


ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (SA) எழுத உத்தேச Time Table

  Work bookல் உள்ள  தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers, Work bookல...