கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை



 5ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை


சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் எம்.ஜி.ஆர். நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் ரோஷினி (10 வயது). இவர், பொழிச்சலூர் ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா வேலைக்கு சென்று வருகிறார். அவர் வேலைக்கு சென்று விட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி மகள் ரோஷினியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது.


இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த மாணவி ரோஷினி, தனது தம்பி கண் எதிரேயே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதி...