கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்



 அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் - கட்சி நிர்வாகி மீது புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பு


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டாத்தூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பாக்கியராஜின் மகன் 10-ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் குரூப் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பாக்கியராஜ், மற்றொரு கட்சி நிர்வாகியான வேலுவுடன் பள்ளிக்குள் சென்று தலைமை ஆசிரியர் தமிழ்முருகனிடம் வாக்குவாதம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அரசு பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியருக்கு விசிக நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கட்சி நிர்வாகி மீது பள்ளி தரப்பில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், போராட்டம் நடத்தப் போவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Meeting on 25.07.2025 - Agenda and guidelines - SPD Proceedings

      ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 25.07.2025 (வெள்ளிக் கி...