கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள் - UGCன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்

 

உயர் கல்வியில் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள் - UGCன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்


UGC Guidelines Pursuing Two Academic Programmes


உயர் கல்வியில் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள்:


பல்கலைக்கழக மானியக் குழுவின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்!!!


உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை UGC தற்போது வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு பட்டம், பட்டயப் படிப்புகளைப் பயில்வது தொடர்பாக UGC சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது..


அதன்படி ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாகப் பயில முடியும். அந்த படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இல்லாதவாறு அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணைய வழியில் பயிற்றுவிக்கப்படலாம். UGC-யின் அங்கீகாரத்தைப் பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.


இந்த வழிகாட்டுதல்கள் P.hd., தவிர்த்துப் பிற படிப்புகளுக்குப் பொருந்தும். இவற்றைக் கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளைப் பயில்வதற்கான வாய்ப்புகளை  ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...