கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Higher Education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Higher Education லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

 

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு


நாளை 07.07.2025

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில்


BSC Nursing

B.Pharm

BPT

BOT

BASLP

உள்ளிட்ட 19 வகையான 4 வருட BSC பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும்


 3 வருட Diploma Nursing படிப்பிற்கும் (only Girls - 2000 seats - Arts Group Girls - க்கு 200 இடங்கள் இருக்கிறது. Don't Miss🔴🔴🔴 )


விண்ணப்பிக்க நாளை 07.07.2025 கடைசி நாள்.

BC MBC விண்ணப்ப கட்டணம் ரூ.500 & ரூ.300


SC ST குழந்தைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. Application Free.🔴🔴🔴


https://reg25.tnmedicalonline.co.in/pmc25/


நாளை 07.07.2025 

தமிழ்நாடு BE Counselling online மூலம் தொடங்குகிறது.


7.5 கோட்டா உள்ள அரசுப்பள்ளி குழந்தைகளில் 3 சிறப்பு பிரிவு குழந்தைகளுக்கு மட்டும் நாளை 07.07.2025 ஒரு நாள் மட்டும் online Choice Filling செய்ய முடியும். ஒரே ஒரு நாள் மட்டுமே. (7.5 கோட்டா உள்ள மாற்றுத்திறன் & Sports Quota & முன்னாள் ராணுவ வீரரின் மகள் or மகன் மட்டும் நாளை Counselling -ல் கலந்து கொள்ளலாம்)👍👍👍


https://www.tneaonline.org/



இன்றைய (04.07.2025) உயர்கல்வி செய்திகள்

 

 

இன்றைய (04.07.2025) உயர்கல்வி செய்திகள் 


இன்று 04.07.2025


FDDI - Counselling Result வெளியாகிறது.


IIT காரக்பூர் & IIT புவனேஸ்வர் BSC BEd - First Selection List வெளியாகிறது.


NIFT - Choice Filling கடைசி நாள்.


அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் CUET Result வெளியாகிறது.


திண்டுக்கல் காந்தி கிராம் 


பாண்டிச்சேரி


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்


டில்லி பல்கலைக்கழகம்


பனாரஸ் பல்கலைக்கழகம்


அலிகர் பல்கலைக் கழகம்


ஹைதராபாத் பல்கலைக் கழகம்


JNU


TISS


போன்ற நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களில் படிக்க சுமார் 15 லட்சம் பேர் எழுதியுள்ள CUET Result இன்று 04.07.2025 ல் வெளியாக உள்ளது.👍


உயர்கல்வி - அடுத்த 7 நாள்கள் - மிக முக்கிய நிகழ்வுகள்

 


உயர்கல்வி - அடுத்த 7 நாள்கள் - மிக முக்கிய நிகழ்வுகள் 


30.06.2025 NCET - IIT காரக்பூர் Last Date

Anna University BE EEE Stipended Course Last Date


01.07.2025 NIFT Registration Last Date


02.07.2025 10 AM JOSAA 3rd Round Seat Allocation Result

NCET IIT புவனேஸ்வர் Last Date

TNEA - Rank List - Discrepancies - Grievance Redressal Last Date - Approach nearest TFC with your Aadhar Card.


04.07.2025 NIFT Counselling Choice Filling Last Date 

IIT Kharagpur - First Selection List Release

IMU - BBA Second Selection List Release

FDDI - BDes BBA First Round Selection List Release


05.07.2025 NIT Warangal Telangana NCET - BEd Last Date Fees Rs.2000 / Rs.1000


07.07.2025 NIFT First Round Seat Allocation Result

 Tamil Nadu paramedical 19 Degree Courses Last Date Fees. Rs.500 and Diploma Nursing Last Date Fees, Rs.300

TNEA - BE Online Counselling Choice Filling for 7.5 Quota Special Category Students (PWD Sports Quota & Ex Service men)


உயர்கல்வி வழிகாட்டு தகவல்கள் , நாள் 26.06.2025



 உயர்கல்வி வழிகாட்டு தகவல்கள் , நாள் 26.06.2025


👉 27.06.2025 நாளை காலை 10 மணிக்கு BE Rank List வெளியாக உள்ளது. Rank List -ல் குறைகள் இருந்தால்... கவலை வேண்டாம். உங்கள் ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு அருகில் உள்ள TFC மையம் செல்லுங்கள். குறைகளை சரி செய்து தருவார்கள். குறைதீர் நாள் ஜூன் 27, 28 ,29 & 30 சனி & ஞாயிற்று கிழமையும் TFC மையம் செயல்படும்.👍


👉 27.06.2025 கடைசி நாள். 7.5 கோட்டா மாணவ மாணவிகளுக்கான இந்த வருடத்தின் கடைசி Application. தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக் கழகத்தில் B.F.Sc & B.Tech & BBA & B.Voc படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை 27.06.2025 வெள்ளி கடைசி நாள்.


👉 28.07.2025 சனி கடைசி நாள். FDDI - AIST எழுதியுள்ள மாணவ மாணவிகள் ரூ.10000 செலுத்தி Online Counselling -ல் Choice Filling செய்ய கடைசி நாள்.


👉 28.06.2025 சனி & 29.06.2025 ஞாயிறு NFSU நடத்தும் NFAT தேர்வு நடைபெற உள்ளது. Admit Card Download செய்து விட்டீர்களா?💐💐💐💐


👉 30.06.2025 திங்கள் NCET தேர்வில் Phy Che Maths  எழுதியவர்கள் மட்டும் IIT காரக்பூரில் BSC BEd படிக்க கடைசி நாள். (+2 மார்க் 300 தேவை)


👉 30.06.2025 திங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி காஞ்சிபுரம் UCE -ல் BE (EEE) மாத உதவித் தொகை ரூ.10000 பெற்றுக் கொண்டு படிக்க கடைசி தேதி.


👉 01.07.2025 செவ்வாய் NIFT - Fashion Technology - online Counselling - Choice Filling கடைசி நாள்.


👉 05.07.2025 NIT வாரங்கல் BSC BEd கடைசி நாள். NCET-ல் Phy Che Maths தேவை. +2ல் 360 மதிப்பெண்கள் தேவை.


👉 07.07.2025 கடைசி நாள் . BSc Nursing B.Pharm BPT Diploma Nursing Pharm.D படிப்புகளுக்கு Online மூலம் விண்ணப்பிக்க.


👉 09.07.2025 சென்னை அண்ணா பல்கலைக் கழக CEG கல்லூரியில் 5 வருட MSC Computer Science & Electronic Media படிக்க கடைசி நாள்.


👉 13.07.2025 ஞாயிறு NCERT - நடத்தும் Regional Institute of Education மைசூரில் 4 வருட & 6 வருட BSC BEd & BA BEd & MSC BEd படிக்க நடத்தப்படும் CEE தேர்வு நடைபெற உள்ளது. CBT தேர்வு.


மேலும் தகவல்களுக்கு . 14417



ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள் - UGCன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்

 

உயர் கல்வியில் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள் - UGCன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்


UGC Guidelines Pursuing Two Academic Programmes


உயர் கல்வியில் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகள்:


பல்கலைக்கழக மானியக் குழுவின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்!!!


உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை UGC தற்போது வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு பட்டம், பட்டயப் படிப்புகளைப் பயில்வது தொடர்பாக UGC சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது..


அதன்படி ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாகப் பயில முடியும். அந்த படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இல்லாதவாறு அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணைய வழியில் பயிற்றுவிக்கப்படலாம். UGC-யின் அங்கீகாரத்தைப் பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.


இந்த வழிகாட்டுதல்கள் P.hd., தவிர்த்துப் பிற படிப்புகளுக்குப் பொருந்தும். இவற்றைக் கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளைப் பயில்வதற்கான வாய்ப்புகளை  ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான  வழிகாட்டி கையேடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Cut-off மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?



 உயர்கல்வி - கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?


Higher Education - How to calculate cut-off marks?


மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியியல் படிப்புக்கு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.


இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களுக்கு, தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற் பயிற்சிப் பாடத்திற்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வைச் சேர்த்து 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனியே கவுன்சலிங் நடைபெறும்.


பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கு நேட்டா (National Aptitude Test In Architecture- NATA) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளர்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுத் தனியே கவுன்சலிங் நடைபெறும்.


கால்நடை மருத்துவப் படிப்புகள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் கால்நடை மருத்துவப் படிப்பில் (BVSc) சேர விரும்புபவர்கள் உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் சேர்த்து 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


தொழிற் பயிற்சி பாடப்பிரிவு மாணவர் களைப் பொறுத்தவரை உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவுகளில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் ஃபுட் டெக்னாலஜி, பவுல்ட்ரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பிடெக் படிப்பில் சேர விரும்புவோர் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய நான்கு பாடப்பிரிவு களிலும் தலா 50 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்த்து, 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பது கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


மீன்வளப் படிப்புகள்: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப் பட்டு (Aggregate Mark Calculation) தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


BFSc படிப்பில் சேர விரும்பும் தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இதே போல 200 மதிப் பெண்களுக்குக் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். B.Voc. பட்டப்படிப்பில் பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமல்ல பட்டதாரி மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஆனால், பிளஸ் டூ தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.லிட். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப் படும் தரவரிசைப் பட்டியல் மூலம் பி.ஏ. ஆங்கிலப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


பிளஸ் டூ தேர்வில் மொழிப்பாடங்கள் நீங்கலாக மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்களின் (400 மதிப்பெண்கள்) அடிப்படையில் தயாரிக்கப்படும் பொதுத் தரவரிசைப் பட்டியல் மூலம் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்டபிள்யூ ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


வேளாண் படிப்புகள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். எடுத்துக்காட்டாக, பிஎஸ்சி அக்ரி (ஆனர்ஸ்) படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்கள் கருத்தில் கொள்ளப்படும். இதேபோல மற்ற பாடங்களுக்கும் கணக்கிடப்படும்.


சட்டப் படிப்புகள்: நேஷனல் லா ஸ்கூல் என்று அழைக்கப்படும் தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு கிளாட் (Common Law Admission Test - CLAT) என்கிற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதன் அடிப்படையில் நேஷனல் லா ஸ்கூல்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வில் மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடங்களில் எடுத்த ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுச் சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


உயர்கல்வி - அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும்



உயர்கல்வி - அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளும், கடைசி தேதிகளும் Last Dates 


Higher Education - Official Website Addresses and Deadlines



1. TNEA – Engineering Admission


துறை: அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://www.tneaonline.org




2. TNGASA – Arts & Science Colleges Admission


துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்


கடைசி தேதி: 27.05.2025


இணையதளம்: https://www.tngasa.in




3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries


துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)


கடைசி தேதி: 31.05.2025


இணையதளம்: https://tnau.ac.in



4. Government Polytechnic Colleges Admission


துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்


கடைசி தேதி: 06.06.2025


இணையதளம்: https://tnpoly.in/



5. TNDALU – Law Colleges Admission


துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்


கடைசி தேதி: 31.05.2025


https://www.tndalu.ac.in



6, அரசு கவின்கலைக் கல்லூரிகள்:


கடைசி தேதி: 31.05.2025


https://artandculture.tn.gov.in


🐟 மெடிக்கல் கவுன்சிலிங் 

Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.

www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.net

(இன்னும் தேதி அறிவிக்கவில்லை)


🐟வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம்

www.tnagfi.ucanapply.com


🐟மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய..


அ) வேளாண்மைப் பல்கலைக்கழகம்

www.tnau.ac.in 

Last Date : 08/06/2025


ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம்

www.tnjfu.ac.in


I.T.I படிப்புகளுக்கு விண்ணப்பிக்க..

www.skilltraining.tn.gov.in


+2 முடித்துள்ள அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்த்தல் நிகழ்வு - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


+2 முடித்துள்ள அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்த்தல் நிகழ்வு சார்பு - திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Admission of all students who have completed +2 to higher education on the event regarding - Proceedings of the Tiruppur District Chief Educational Officer



+2 முடித்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் Last Date விவரங்களும்



+2 முடித்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் விண்ணப்பிக்க கடைசி நாள் விவரங்களும்


+2 முடித்த குழந்தைகள் சிறந்த கல்லூரிகளில் சென்று படிக்க மீதமுள்ள பொன்னான வாய்ப்புகளும் Last Date விவரங்களும்


*ஜூன் 4  வரை  விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ள நுழைவுத்  தேர்வுகள்  உங்களுக்காக 👇👇👇*


1. டிசம்பர் 2024 -ல் CLAT தேர்வு எழுதி கையில் CLAT Score Card வைத்திருக்கும் குழந்தைகள் மட்டும் IIM Rohtak Haryana வில் 5 ஆண்டு சட்டப்படிப்பு IPL படிக்க விண்ணப்பிக்க இன்று 18.04.25 கடைசி தேதி.🔴🔴🔴🔴 Fees Rs. 4937.


2. April 20 FDDI - Apply Both B.Des & BBA  Last Date. Super Chance, Don't Miss.🔴🔴🔴🔴🔴 All Group Students.


3. May 2 IMU CET Apply B.Tech BSC DNS and BBA Last Date🔴 All Group Students.


4. May 5 NFSU - M.Tech. MSC. MBA Cyber Security Artificial Intelligence Forensic Science  Last Date All Group Students.


5. May 5 Last Date for ICI Tirupati - BBA Culinary Arts - All Group Students


6. May 9 NISER Last Date only for Phy Che Maths Biology Students. 250 seats only. No Hoste Fees. No College Fees. Ful Free.


7. May 31 ISI - BSDS Last Date. (Admission Based on JEE Mains Scores or CUET Scores - இன்று 18.04.25 JEE Mains Result வெளியாகலாம்.)


8. June 4 IITTM BBA (Tourism)


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் +2 முடித்த குழந்தைகள் 


தமிழ்நாடு அரசு முழு  உதவியுடன் பட்டப்படிப்பு படிக்க விருப்பமா?


வருகிற 21.04.2025 முதல் 30.04.2025 வரை உங்கள் பள்ளிக்கு செல்லுங்கள்.


உங்கள் அப்பா அம்மாவையும் அழைத்து செல்லுங்கள்.


தமிழ்நாட்டில் படிக்க 7.5 கோட்டா (No College Fees & No Hostel Fees)


தமிழ்நாட்டிற்கு வெளியில் பிற மாநிலங்களில் சென்று படிக்க


உங்களுக்கு உதவிட

இதோ


" நான் முதல்வன் திட்டம்"


👇👇👇 உடனே பார்வையிடுக.


https://naanmudhalvan.tnschools.gov.in/


மேலும் உங்களுக்கு உதவிட உங்கள் உயர்கல்வி வழிகாட்டு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பள்ளியில் தினம் தினம் காத்திருக்கிறார்கள்.


அடுத்து என்ன படிக்கலாம் என அறிய


உயர்கல்வி குறித்து அறிந்து கொள்ள


சுழற்றுக 14417


தமிழ்நாடு அரசின்

பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வி வழிகாட்டு உதவி எண் : 14417


மேலும் அதிக விபரங்களுக்கு மணற்கேணியில் சொடுக்கவும் 👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis


Higher Education Contributors Counseling

உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு


Higher Education Contributors Counselling 



B.Lit., தமிழ் படிப்பானது, B.A., தமிழ் படிப்பிற்கு இணையானது அல்ல (Not Equivalent) - Higher Education Department G.O. (Ms) No: 111, Dated : 17-04-2023...



பி.லிட்., தமிழ் படிப்பானது, பி.ஏ., தமிழ் படிப்பிற்கு இணையானது அல்ல (Not Equivalent) - Higher Education Department G.O. (Ms) No: 111, Dated : 17-04-2023...


உயர்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 111, நாள் : 17-04-2023 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் B.Lit., தமிழ் படிப்பானது, B.A., தமிழ் படிப்பிற்கு இணையானது அல்ல (பக்கம் 3, வரிசை எண். 35) - உயர் கல்வித் துறையின் 2023ஆம் ஆண்டு அரசாணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Proceedings of the Joint Director of Elementary Education seeking full details of teachers who have pursued higher education without obtaining Departmental Permission Rc.No: 023458/ E1/ 2024, Dated: 24-09-2024...



துறை அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரம் கோரி தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 023458/ இ1/ 2024, நாள்: 24-09-2024...


Proceedings of the Joint Director of Elementary Education seeking full details of teachers who have pursued higher education without obtaining Departmental Permission Rc.No: 023458/ E1/ 2024, Dated: 24-09-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உயர் கல்வித்துறை - 15 புதிய அறிவிப்புகள்...



உயர் கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 20, புதிய அறிவிப்புகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



🔷 அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.


🔷 கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் ரூபாய் 14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதி கட்டணம் 21 கோடி மடிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு என தனி ஓய்வறைக் கட்டிடம் 8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


🔷 கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்த எந்திரனியல் ஆய்வகம் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


🔷 திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


🔷 காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


🔷 GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.


🔷 அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்படும்


🔷 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் ₹7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்


🔷 தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாறு ஆராய்ச்சி மன்றம் மீள்ருவாக்கம் செய்யப்படும்


🔷 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.


-பொன்முடி, உயர்கல்வித் துறை அமைச்சர்



உயர்கல்வி சேர்க்கை 35%க்கும் குறைவான 100 அரசுப் பள்ளிகளின் விவரம் வெளியீடு...

 

2022-23ஆம் கல்வியாண்டில் குறைவாக உயர் கல்வியில் சேர்ந்த 100 அரசுப் பள்ளிகளின் விவரம் வெளியீடு...


AY 2022-23 Class 12 Students Enrolled in Higher Education - The first 100 Government Higher Secondary Schools with the lowest enrollment in higher education - UMIS-EMIS Reconciliation Report...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கி அரசாணை (நிலை) எண்: 169, நாள்: 03-10-2023 வெளியீடு (Tuition fee for children of teachers studying higher education increased up to Rs.50,000/- G.O.(Ms) No: 169, Dated: 03-10-2023 Issued)...


உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கி அரசாணை (நிலை) எண்: 169, நாள்: 03-10-2023 வெளியீடு (Tuition fee for children of teachers studying higher education increased up to Rs.50,000/- G.O.(Ms) No: 169, Dated: 03-10-2023 Issued)...



>>> அரசாணை (நிலை) எண்: 169, நாள்: 03-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் - உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிக்கை - செய்தி வெளியீடு எண்: 1479, நாள்: 25-07-2023 (Implementation of New Model Syllabus in Colleges / Universities from Academic Year 2023-24 - Report of Minister of Higher Education - Press Release No: 1479, Dated: 25-07-2023)...

 

>>> கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் - உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிக்கை - செய்தி வெளியீடு எண்: 1479, நாள்: 25-07-2023 (Implementation of New Model Syllabus in Colleges / Universities from Academic Year 2023-24 - Report of Minister of Higher Education - Press Release No: 1479, Dated: 25-07-2023)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 - Answer Key - Part B & Part C

        TNPSC குரூப் 4 - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 12-07-...