கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் Free ஆக 2 Years Nursing Training

 


Free 2-year nursing training at a government nursing training school.


ரூ.200 மட்டும் இருந்தால் போதும்.

அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் Free ஆக 2 வருட நர்சிங் பயிற்சி பெற அருமையான வாய்ப்பு.👌


 *Just Last 5 days only Last Date 31.07.2026* 


உடனே உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று *ரூ.200 DD எடுத்து Application Print எடுத்து நிரப்பி உங்கள் ஊரில் உள்ள Post office சென்று Speed Post* அனுப்பி விடுங்கள்.👌👍👏💐


*No College Fees No Hostel Fees Only Mess Fees* 


 *Free Nurse Training* 


 *only for +2 Girls* 


+2 முடித்த பெண் குழந்தைகளுக்கு அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகளில் 2 வருட ANM சான்றிதழ் Nursing படிப்பு படிக்க அரிய கடைசி வாய்ப்பு.


1. சென்னை எழும்பூர்

2. சென்னை பூந்தமல்லி

3. சென்னை திருவல்லிக்கேணி

4. *நாமக்கல் மாணிக்கம் பாளையம்* 

5. *திண்டுக்கல் காந்திகிராம்* 

6. மதுரை சமயநல்லூர்

7. தேனி வீரபாண்டி

8. *புதுக்கோட்டை திருவரங்குளம்* 

9. சிவகங்கை திருபுவனம்

10. தருமபுரி பாலக்கோடு

11. திருநெல்வேலி


ஆகிய 11 ஊர்களில் உள்ள தமிழ்நாடு அரசு ANM பயிற்சி பள்ளிகளில் உள்ள மொத்த ANM Nursing இடங்கள் ஒரு பள்ளிக்கு 60 வீதம் மொத்தம் 600 இடங்கள்


இதுவரை நிரம்பியவை 259

இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்கள் 341


Application link👇


https://live.tndphpm.com/admin/tndphpmfiles/1784436154_application_for_selection_of_anm_candidates_through_open_quota_in_11_government_anm_training_schools.pdf


மேலே உள்ள 29 பக்க விண்ணப்ப விளக்க படிவத்தில்


பக்கம் 27 28 29 ஆகிய 3 பக்கங்களை மட்டும் 2 copies Print எடுத்து


 *அழகாக பிழையின்றி மாணவிகள் தங்கள் சொந்த கையெழுத்தில் விண்ணப்பத்தை நிரப்பி* 


ரூ. 200 Bank Demand Draft எடுத்து


DD in favour of 


 *DPH&PM-ANM Training Course* 


 *29.07.2026 க்குள் கீழ்காண் சென்னை முகவரிக்கு speed post ல் அனுப்பி வைக்கவும்.* 👌👍👏💐


Speed Post அனுப்ப வேண்டிய முகவரி👇


To 


இணை இயக்குநர் (பயிற்சி)

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை

359, அண்ணா சாலை

DMS வளாகம் தேனாம்பேட்டை

சென்னை 600 006


மேலும் விபரங்களுக்கு

044 -29510136

044- 29510167

044- 29510183


உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMISல் பதிவு செய்திட பள்ளி கல்வித் துறை உத்தரவு



3 ஆண்டுகள் உயர் கல்வி வழிகாட்டி Career Guidance ஆசிரியராக பணிபுரிந்தவர்கள், பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், மற்றோர் ஆசிரியரை நியமித்து EMIS தளத்தில் புதுப்பித்து பதிவு செய்திட தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, Cut-off Marks கணக்கிடும் முறை



Method of calculating cut-off marks for admission to higher educational institutions (Engineering, Agriculture, Veterinary Medicine, Fisheries, Paramedical, Law and Arts and Science Colleges) in Tamil Nadu


தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ( பொறியியல்,  வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், துணை மருத்துவம்,  சட்டம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ) சேர்க்கை பெற , கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஒவ்வொரு துறையிலும் என்னென்ன படிப்புகள் படிக்கலாம்? - Career Selection Guide



ஒவ்வொரு துறையிலும் என்னென்ன படிப்புகள் படிக்கலாம்? - தமிழ்நாடு அரசின் முழுமையான வழிகாட்டல் கையேடு ( Career Selection Guide ) வெளியீடு


What courses can be studied in each field? - Tamil Nadu Government releases complete guidance manual


உயர் கல்வியே எங்கள் இலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின், பள்ளி கல்வித் துறையின் நான் முதல்வன் பிரிவு வெளியிட்டுள்ள நாட்காட்டி



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


"Uyarkalviye Engal Ilakku" எனும் நிகழ்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்


"உயர் கல்வியே எங்கள் இலக்கு" எனும் நிகழ்வு பள்ளி அளவில் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான "உயர் கல்வியே எங்கள் இலக்கு" எனும் நிகழ்வு பள்ளி அளவில் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


"Uyarkalviye Engal Ilakku" Event Guidelines 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> Great Republic Day Sale 2026 Offer...


அரசுப் பள்ளிகளில் +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல்

அரசுப் பள்ளிகளில் +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல்


உங்களுக்குத் தெரியுமா? 


அரசுப் பள்ளிகளில் இந்த வருடம் 2025ல் தற்போது +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல் தொடர் - அடுத்த வருடம் எந்த கல்லூரியில் சேரலாம் ? எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்? என்ன பாடம் படிக்கலாம் ?  : 


 *நீங்கள் தற்போது தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் +2 படிக்கிறீர்களா?* 


உங்களுக்கு 7.5 கோட்டா இருக்கிறதா ?


அதாவது அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்துள்ளீர்களா?


அவ்வாறு 6 - 12 அரசுப் பள்ளிகளில் நீங்கள் படித்திருந்தால் ....


உங்களுக்கு 7.5 கோட்டா உண்டு.


7.5 கோட்டா குழந்தைகள் கீழ்காண் 5 விதமான படிப்புகளை மட்டும் No college fees...No hostel fees கட்டாமல் படிக்க முடியும்.


என்னென்ன படிப்புகள் 7.5 கோட்டாவில் Free ஆக படிக்க முடியும்? எத்தனை Seats உள்ளது? +2 ல் எவ்வளவு மார்க் இருந்தால் 7.5 கோட்டா சீட் கிடைக்கும் ?


7.5 கோட்டாவில் வரும் 6 படிப்புகள் யாவை?


👉MBBS BDS BSMS BHMS BUMS BAMS - சுமார் 800 seats. Only through NEET Marks 450 க்கு மேல் தேவை.


  👉BE- சுமார் 14000 Seats Phy 80 Che 80 Maths 80 கட்டாயம் தேவை.


👉BVSc - only 44 Seats. Phy 99 Che 99 Bio 99 கட்டாயம் தேவை. ஆண்டு கட்டணம் மிக மிக குறைவு. ஆகவே Non 7.5 கோட்டாவில் மீதமுள்ள 540 Seats ல் இடம் கிடைத்தால் கூட சேர்ந்து படிப்பது சிறந்தது.👌👌👌👌


 👉BSc Agri & BFSc- சுமார் 350 seats. Phy 85 Che 85 Bio 85 and 4th Sub 85 கட்டாயம் தேவை.


👉 B.Tech in Agri Fisheries & Dairy & Food Technology & BBA சுமார் 16 Seats only Phy 75 Che 75 Maths 75 Bio 75 தேவை.


👉5 வருட சட்டப்படிப்பு Law. சுமார் 140 seats. தமிழ் ஆங்கிலம் தவிர பிற 4 பாட மொத்த மதிப்பெண்கள் 388 க்கு மேல் இருந்தால் Law College 7.5 கோட்டா சீட் உறுதியாக கிடைக்கும். தமிழ்நாட்டில் சட்டம் படிக்க 15 அரசு சட்டக் கல்லூரிகளிலும் மிகக் குறைந்த கட்டணமே. Annual Law college fees Rs.1000 only. ஆகவே 7.5 கோட்டா சீட் கிடைக்காவிட்டாலும் சட்டம் படிக்கலாம்.👍 


மேற்கண்டவாறு 7.5 கோட்டா Free Seats இடங்களை பிடிக்க அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமம் உள்ள குழந்தைகளும் ....


தமிழ்நாட்டிற்கு வெளியில் பிற மாநிலங்களுக்கு சென்று


"நான் முதல்வன் திட்டத்தின் கீழ்" படிக்க விரும்பும் குழந்தைகள் கீழ் காண் நீண்ட கட்டுரைக்கு நேரம் ஒதுக்கவும்.


"புதிய வாசல் திறக்கும். புதிய பாதை பிறக்கும். புரிய பயணம் சிறக்கும். "


வாழ்த்துகள்💐💐💐


கீழ்காண் 27 வகையான போட்டித் தேர்வுகளில் ...


 உங்களுக்கு மிகவும் பிடித்த 3 அல்லது 4 துறைகளை தேர்வு செய்து 


அதற்குரிய தேர்வுகளுக்கு உரிய நேரத்தில் விண்ணப்பித்து


 தேர்வு எழுதி Online Counselling ல் கலந்து கொண்டு 


கீழ்காண் 217 கல்லூரிகளில் இடம் பிடித்தால் .....👍👍👍


 *நான் முதல்வன் திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும்.* 👍👍👍


அந்த 217 கல்லூரிகள் எவை? எவை? 


அந்த 27 தேர்வுகள் எவை ? எவை?


 + 2 ல் எந்த Group மாணவர்கள் எந்த தேர்வை எழுத முடியும் ?👇👇👇


 *விரிவான விபரம் தேவைப்படுவோர் மட்டும் கீழே உள்ள நீண்ட கட்டுரையினை வாசிக்கவும்.* 


 *+2 கணிதப் பிரிவு குழந்தைகளுக்கான தேர்வுகள் - 9👇👇👇* 


👉JEE 90 colleges 

IMU 6 colleges 

NATA- Anna University 

IPMAT Indore Amritsar 

IPMAT Rohtak 

NTA-JIPMAT Bodh Gaya 

IIM- IPM - 5 Colleges 

ISI 1 MSE 1 NCET 3

= 9 Exams 106 Colleges


 *+2 Biology பிரிவு குழந்தைகளுக்கான தேர்வுகள் - 8👇👇👇* 


 👉CUET-ICAR 9  colleges 

AllMS 26 colleges JIPMER 1

 NIMHANS 1

 NISER 2

 IISER 7 colleges 

NEET 1 

BITS-SAT B.Pharm 1

= 8 Exams 48 colleges.


 *+2 படிக்கும் அனைத்து Group குழந்தைகளும் எழுதக் கூடிய 10 தேர்வுகள்👇👇👇* 


 👉CLAT 25 colleges CUET-DU BHU JMI TISS NFSU 6 

RIE Mysore 1

NID 7 

NIFT 6

 IIT-UCEED 7

 NCHM-JEE 4

 IITTM 2 Noida & Gwalior 

APU 2 Bengaluru Bhopal 

= 10 Exams 63 colleges 


 *Grand total* 

 *27 Exams* 

 *217 Colleges* 


 *மேற்காண் 217 கல்லூரிகளில் அட்மிசன் பெற ஒரு குழந்தை எழுத வேண்டிய தேர்வுகள் எண்ணிக்கை - 27* 


👉 *தேர்வு - 1 JEE* 


 Engineering படிக்க விரும்பும் குழந்தைகள் மட்டும் வாசிக்கவும் 👇👇👇 JEE (Phy Che Maths Students only)


👉JEE என்ற ஒரே தேர்வின் மூலம் கீழ் காண் 90 கல்லூரிகளில் B.Tech or  B.Arch or B.Plan or ISI - BSDS - Data Science படிக்க முடியும்.👇👇


IITs-23 

NITs-31+1

IIITs-26 


SPA-3 New Delhi Bhopal & Vijayawada 


NIFTEM-2 Tanjore & Haryana (Kundli) 25 kms from New Delhi 


IISc Bengalore -1 

IIST-Trivandram-1

RGIPT-Jais,Amethi-UP-1


ISI - Bengalore BSDS - 1


👉மேற்காண் 90 கல்லூரிகளில் உள்ள சுமார் 52000 B.Tech or B.Arch or B.Plan or M.Tech or MSc இடங்களில்  Admission பெற JEE ஒரு தேர்வு போதும். ஆனால் +2 ல் 450/600 மதிப்பெண் அவசியம். SC ST PWD குழந்தைகளுக்கு 390/600 போதும்.


👉JEE தேர்வு ஜனவரி 2026 & ஏப்ரல் 2026 என வருடத்திற்கு 2 முறை தேர்வு நடைபெறும். ஒருவர் 2 முறையும் தேர்வு எழுதலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறோமோ அந்த அதிக மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.


👉 ஆகவே ஒவ்வொரு மாணவரும் மாணவியும் ஜனவரி & ஏப்ரல் 2026 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதும் & தேர்வு எழுதுவதும் நல்லது.👌👌👌  


👉 JEE Mains தேர்வில் 99 Percentile க்கு மேல் எடுத்தால் தான் .... திருச்சி NIT யில் B.Tech Civil or Chemical or Material Science or Production கிடைக்கும்.


👉 ஆனால் 30 percentile எடுத்தாலும் இந்தியாவில் உள்ள சுமார் 127 மத்திய அரசு கல்லூரிகளில் ஏதாவது ஒரு சிறந்த மத்திய அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும்.👍👍👍


👉 ஆகவே தவறாமல் JEE Mains க்கு விண்ணப்பிக்கவும்.


👉JEE Mains தேர்வில் Paper 1 & Paper 2A & Paper 2B என மொத்தம் 3 Papers உண்டு. 


👉B.Tech மட்டும் படிக்க Paper-1 எழுதினால் போதும்.


👉B.Arch படிக்க Paper2A க்கும் விண்ணப்பிக்க வேண்டும். 


 👉B.Plan படிக்க விரும்புவோர் Paper 2B ஐ தேர்வு செய்ய வேண்டும்.


👉3 Paper-களையும் தேர்வு செய்து .... தேர்வு கட்டணம் செலுத்தி...

ஜனவரி 2026 & ஏப்ரல் 2026 ஆகிய 2 முறையும் 3 Papers தேர்வுகளையும் எழுதுவது சிறந்தது.👌👌👌


👉 2025 JEE தேர்வு மூலம் Premier கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் விபரம்👇👇👇


IITs 20 students 

NITs 28 students 

IIITs 11

IISC 2

IIST 4

RGIPT 15

SPA 19

NIFTEM 16

IIEST 2

Total JEE 117 Students👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐 


👉 *தேர்வு - 2 IMU-CET* 


கடல் அலைகளோடு கைகோர்த்து  Marine Engineering படிக்க விரும்பும் குழந்தைகள் மட்டும் வாசிக்கவும்.👇👇👇


 IMU - CET (Phy Che Maths Group )


Chennai Vishakapatnam Kolkata Kochi Mumbai & Navi Mumbai  ஆகிய 6 ஊர்களில் உள்ள INDIAN MARITIME UNIVERSITY களில் 


4 வருட B.Tech Marine Engineering


3 வருட BSc Nautical Science


1 வருட DNS எனப்படும் Diploma in Nautical science 


ஆகிய படிப்புகளை படிக்க முடியும்.


IMU CET மூலம் Admission பெற +2 Phy Che & Maths பாடங்களில் 60% மதிப்பெண் அவசியம். மேலும் +2 English பாடத்தில் 50% அவசியம்.


நான் முதல்வன் திட்டத்தில் 2025 ல் IMU சேர்ந்துள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் 174 பேர்👏👏👏👏👍👍👍👍💐💐💐💐


👉 *தேர்வு - 3* 

 *NATA*  Architecture - கட்டடக் கலை படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


NATA - National Aptitude Test in Architecture ஆண்டுக்கு 3 முறை நடக்கும். பெரும்பாலும் May மாதம் NATA தேர்வு நடைபெறும். 3 முறையும் ஒருவர் தேர்வு எழுதலாம். Best of 3 will be your final Score. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் B.Arch படிக்க NATA Score Card அவசியம்.


  👉 *தேர்வு - 4 IPMAT-I* MBA படிக்க. Only for +2 Maths students.


👉 கீழ்காண் IPMAT & JIPMAT தேர்வுகள்


 Indian Institute of Management - 

IIM INDORE 

IIM AMRITSAR

 IIM ROHTAK

 IIM BODH GAYA

 IIM JAMMU ஆகிய 5 கல்லூரிகளில் 5 வருட IPM = MBA படிக்க நடத்தப்படும் தேர்வுகள். சற்று கடினமானவை. 


10 & 12 ஆம் வகுப்பில் 80% மேல் மதிப்பெண் வைத்துள்ள மாணவ மாணவிகள் மட்டும் விண்ணப்பம் செய்வது நல்லது.👌👌👌👍👍👍


IIM Indore நடத்தும் IPMAT


👉 *தேர்வு - 5 IPMAT-R*

 IIM Rohtak நடத்தும் IPMAT மூலம் MBA படிக்க.


👉 *தேர்வு - 6 NTA-JIPMAT* 

NTA நடத்தும் JIPMAT தேர்வின் மூலம் MBA படிக்க.


👉 *தேர்வு - 7 ISI* 

கணிதம் & புள்ளியியல் துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு.


ISI - Indian Statistical institute Kolkata வில்

B.Stat & B.Math படிக்கலாம். கட்டணம் ஏதுமில்லை. மாதா மாதம் உதவித் தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். *தமிழ்நாடு அரசுப் பள்ளி  குழந்தைகள் இருவர் 2025 ல் Indian Statistical institute ல் இடம் பிடித்துள்ளனர்.* தற்போது ISI யில் படித்து வருகிறார்கள்👏👏👏👏💐💐💐💐


 👉 *தேர்வு - 8 MSE*


பொருளியல் படிக்க விரும்பும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு. 


MSE- Madras School of Economics,Chennai 

MA - Economics -only for Maths group students.


அரசுப்பள்ளி குழந்தைகள் 15 பேர் 2025ல் MSE ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.👏👏👏👏💐💐💐💐


*தேர்வு - 9  NCET - BEd* IIT & NIT களில் BEd படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


IIT காரக்பூர் & NIT திருச்சி & வாரங்கல் ஆகிய 3 கல்லூரிகளில் BSc BEd படித்து  சிறந்த ஆசிரியர் ஆக எதிர் காலத்தில் மிளிர கனவு காணும் குழந்தைகள் அனைவரும் NCET தேர்வு எழுதலாம். NCET தேர்வில் 7 பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். 

1. Physics or Economics 

2. Chemistry or Accountancy 

3. Mathematics or Biology or Business studies 

4. General Aptitude 

5. Teaching Aptitude

6. Tamil 

7. English


👉 *தேர்வு 10 CUET* *ICAR* விவசாய அறிவியல் படிப்பில் நாட்டம் உள்ளவர்களுக்கு.


CUET தேர்வில் ஒருவர் 5 பாடங்களை தேர்வு செய்யலாம்.


1. English

2. General Aptitude

3. Physics or Economics 

4. Chemistry or Accountancy 

5. Maths or Biology or computer science 


CUET தேர்வில் மேற்காண் Phy Che Maths or Bio எழுதிய குழந்தைகள் .... +2 ல் Phy Che Bio or Maths படித்திருந்தால் .... ICAR- Indian council for Agricultural Research நடத்தும் Online Counselling ல் கலந்து கொண்டு 13 வகையான விவசாய படிப்புகளை ICAR வழங்கும் மாதம் ரூ.3000  உதவித் தொகை பெற்றுக் கொண்டு படிக்கலாம்.👍👍👍 இந்த வருடம் 2025 ICAR Online Counselling கடந்த வாரம் 14.10.2025 அன்று தொடங்கியது. அடுத்த மாதம் 19.11.2025 நிறைவு பெறுகிறது.


👉 *தேர்வு - 11 AIIMS Nursing & PARAMEDICAL*  துணை மருத்துவப் படிப்புகளில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு.


ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES - நாடு முழுவதும் உள்ள 26 AIIMS மருத்துவக் கல்லூரிகளில் Nursing & Para Medical Degrees படிக்கலாம்.


👉 *தேர்வு - 12 NEET- JIPMER PARAMEDICAL* 


துணை மருத்துவப் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு


JIPMER-Pondicherry யில் NEET மதிப்பெண் அடிப்படையில் Nursing & Para Medical படிக்கலாம்.

Total Seats 195 only.


 *NEET மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவர் படிப்பு.👇👇👇* 


VCI - Veterinary Council of India - B.V.Sc - All India Quota Seats - NEET மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். ஆகவே அவசியம் NEET எழுதவும்.👍


👉 *தேர்வு - 13* 

 *NIMHANS* - *PARAMEDICAL* 


துணை மருத்துவப் படிப்பில் ஈடுபாடு உள்ள குழந்தைகளுக்கு.


NIMHANS -Bengaluru - Nursing & Para Medical 

Total All India Quota. *Just 45 Seats only* 🛑 அந்த 45 இடங்களில் தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகள் 4 இடங்களை இந்த ஆண்டு 2025ல் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 👏👏👏👏💐💐💐💐


👉 Biology படிக்காமல் Phy Che Maths மட்டும் படிக்கும் மாணவர்களும் AIIMS and NIMHANS PARAMEDICAL தேர்வுகளை எழுதலாம்.


👉 *தேர்வு 14 IISER - IAT* அடிப்படை அறிவியலில் நிறைய கேள்விகள் கேட்கும் ..... தேடல் உள்ள குழந்தைகளுக்கு ....

ஏற்ற Research படிப்புகள்.👇👇👇👇


No Medicine 

No Engineering 

No Law

No Design 

No Marine Engineering 

No Agriculture 

No Architecture

No social sciences 


"My Dream and Passion is to study basic sciences like Physics Chemistry Biology Maths and Economics."


Then your choice of exam must be IISER IAT 


Indian Institute of Science Education and Research -IISER 


IAT- IISER APTITUDE TEST.👇👇👇


IISER - Pune, Kolkata, Mohali, Trivandrum, Tirupati, Bhopal, Berhampur. ஆகிய 7 கல்லூரிகளில் படிக்க விரும்புவோர் IISER - IAT தேர்வு எழுதலாம்.

IISER - IAT தேர்வின் மூலம் சென்னை IIT யிலும் படிக்க முடியும்.


2025ல் IISER ல் இடம் பிடித்து சாதித்துள்ள அரசுப் பள்ளி குழந்தைகள் 18 பேர்.👌👌👌👌👍👍👍👍


👉 *தேர்வு - 15 NISER-NEST* 


அறிவியல் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு


Physics Chemistry Maths Biology & Economics போன்ற அடிப்படை அறிவியல் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கான தேர்வு.


👉 NISER -ல் கல்விக் கட்டணம் கிடையாது.


👉 மாதம் ரூ.5000 உதவித் தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். 


👉 NISER புவனேஸ்வர் & மும்பை பல்கலைக் கழகம் DAE - CEBS ஆகிய இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து 250 இடங்கள் மட்டுமே உள்ளன. தேர்வு சற்று கடினமான இருக்கும். 10th & 12th ல் 80% க்கு மேல் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பம்  செய்வது நல்லது.


*தேர்வு - 16 NEET* - B.Tech Food Technolgy at NIFTEM KUNDLI Sonepat HARYANA 25 KMs from Delhi 


உணவு தொழில் நுட்பத்தில் நிபுணர் ஆக விரும்பும்  குழந்தைகளுக்கு☝️☝️☝️☝️


 👉 *தேர்வு* - *17 BITS* *PILANI** - BITS - SAT (B.Pharm ) 2025 ல் அரசுப் பள்ளி குழந்தைகள் 3 பேர் BITS ல் சேர்க்கை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.👍👍👍👏👏👏💐💐💐


மருந்து தயாரித்தலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு☝️☝️☝️


👉 *தேர்வு - 18 NLU-CLAT* 


வழக்கறிஞர் அல்லது நீதியரசர் ஆக விரும்பும் குழந்தைகளுக்கு.


NLU எனப்படும் National Law University களில் June 2026 ல் சட்டம் படிக்க விரும்பும் குழந்தைகள் வருகிற 07.12.2025 அன்று நடைபெற உள்ள CLAT தேர்வை எழுத வேண்டும். CLAT application last date 31.10.2025 only 10 days ahead 🛑🛑🛑 Don't miss. CLAT FEES RS.4000 FOR SC ST PWD Rs.3500 Previous year Question papers Rs.500.


திருச்சி NLU உள்பட 25 NLU களில் சுமார் 2500 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60000 பேர் CLAT தேர்வில் போட்டி இடுகின்றனர். 10th ஆங்கில பாடத்தில் 80% மதிப்பெண் எடுத்த குழந்தைகள் அவசியம் CLAT தேர்வு எழுதுவது சிறந்தது.


இந்த 2025ல் அரசுப் பள்ளிகளில் இருந்து NLU களில் இடம் பிடித்த சாதனை குழந்தைகள் 16 பேர். 👌👌👌👍👍👍


👉 *தேர்வு - 19 CUET* 


CUET- COMMON UNIVERSITY ENTRANCE TEST 


என்ன படிப்பது என முடிவெடுக்காமல் உள்ள குழந்தைகளுக்கு  CUET ஒரு சிறந்த தேர்வு.

(For All Group Students)


CUET ஒரு தேர்வு போதும். நாடு முழுவதும் உள்ள சுமார் 44 மத்திய அரசு பல்கலைக் கழகங்கள் உள்பட


 சுமார் 200 க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் 


சுமார் 2 லட்சம் UG மற்றும் Integrated PG படிப்புகளில்


B.Tech & Law & Agri & Design & MBA & MSC என நீங்கள் விரும்பும் எந்த படிப்பையும்


குறைந்த செலவில்

தரமான பல்கலைக் கழகங்களில் சென்று படிக்க CUET ஒரு சர்வ ரோக நிவாரணி போன்ற ஒரு அற்புதத் தேர்வு 👍


CUET - தேர்வில் English and General Aptitude Test ஆகிய 2 தேர்வுகள் மட்டும் எழுதினால் போதும்.


TISS Mumbai யில் BA Social work & social sciences and BS ANALYTICS AND SUSTAINABILITY STUDIES படிக்கலாம்.👍


👉 2025 ல் அரசுப் பள்ளி குழந்தைகள் 27 பேர் Tata institute of social sciences -TISS ல் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்👍👍👍👏👏👏👏💐💐💐💐


 👉CUET தேர்வில் Phy Che Bio  தேர்வுகள் எழுதினால் ICAR Agri படிக்கலாம்.


 👉CUET தேர்வில் Phy Che Maths எழுதினால் ICAR - ல் B.Tech 

Dairy Technology 

Food Technology 

Bio Technology 

Agri. Engineering

படிக்கலாம்.


CUET - ICAR கல்லூரிகள் - 9


CUET தேர்வில்  ஒரு மாணவர் 5 பாடங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.


ஆகவே English & General Aptitude Test ஆகிய 2 பாடங்களை தேர்வு செய்த பிறகு


நீங்கள் +2 ல் படித்த .... உங்களுக்கு மிகவும் பிடித்த ....


ஏதேனும் 3 பாடங்களை தேர்வு செய்து CUET 2026 தேர்வை எழுதுவது நல்லது.


For Example:


Eng GT Phy Che Bio


or


Eng GT Phy Che Maths


or


Eng GT Accountancy Economics History 


or 


Eng GT Political science  Tamil and Geography 


 என +2ல் நீங்கள் படித்த .... உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதேனும் 3 பாடங்களோடு  Engish & General Test ஐயும் சேர்ந்து 5 பாடங்களை CUET தேர்வில் தேர்வு செய்து தேர்வு எழுதவும்.. 


 👉Engineering Data Science Law Agriculture Journalism Foreign Languages Social sciences B.Ed என எதுவும் படிக்க.... எல்லாம் படிக்க.... எங்கும் படிக்க...CUET - ஒரு தேர்வு நிச்சயம் கை கொடுக்கும். அவசியம் CUET தேர்வை எழுதுங்கள்.👍👍👍


அடுத்த பெரிய துறை Designing.🛑🛑🛑👇👇👇


👉Creative thinking கொண்டுள்ள


 Design துறையில் ஆர்வமுள்ள 


Drawing skill அதிகமுள்ள


4 வருட B.Des படிக்க விரும்பும் உள்ள 


Arts & Commerce & Humanities & Maths & Biology என அனைத்து Group குழந்தைகளும்


IIT யில் படிக்கலாம்.👍👍👍


கீழ் காண் IIT- UCEED,  NID- DAT & NIFT  தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


*தேர்வு - 20 IIT - UCEED* 245 Seats only


IIT களில் Design படிப்புகள் படிக்க 

UCEED Last Date 31.10.25 இன்னும் 10 நாள்களே உள்ளன.🛑🛑🛑 UCEED APPLICATION FEES RS.4000 and for ALL community GIRLS and for SC ST PWD STUDENTS ONLY Rs.2000👌👌👌


👉 *தேர்வு - 21 NID- DAT* 


 NID-National Institute of Design கல்லூரிகள் அமைந்துள்ள

Ahmedabad, Gandhinagar, Bengaluru, Vijayawada, Bhopal,  Kurukshetra, Jorhat-Assam  ஆகிய கல்லூரிகளில் B.Des படிக்க NID - DAT- Design Aptitude Test எழுத வேண்டும். 

NID - DAT Exam Date : 21.12.2025


Application fees for all Rs.4000.


👉 *தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இருந்து NID யில் சேர்க்கை கணக்கை தொடங்கி உள்ள *முதல் மாணவர் & ஒரே மாணவர்....* *வணிகவியல் பிரிவு மாணவர்....* 


 *திரு. வெற்றித் தமிழ் அவர்கள்.* 👌👌👌👌👍👍👍👏👏👏👏💐💐💐💐


 👉 *தேர்வு - 22 NIFT* 


 Design துறையில் ஆர்வமுள்ள குழந்தைகள் Chennai Delhi Kolkata Bombay Bengaluru Hyderabad ஆகிய 6  NIFT கல்லூரிகளில் B.Des படிக்கலாம். B.Des. Fees. ரூ.3000 


B.F.Tech (only for  Maths Group students) Fees Rs.1500


NIFT ல் B.Des & B.F.Tech படிக்க விரும்புவோர் தயாராக இருக்கவும். தேர்வு பிப்ரவரி 2026 ல் நடைபெறும். Application இன்னும் 20 நாள்களில் open ஆகி விடும்.👍👍👍


2025ல் NIFT ல் இடம் பிடித்த அரசுப் பள்ளி குழந்தைகள் 62 பேர்.👌👌👌👍👍👍👏👏👏👏💐💐💐💐


 👉 *தேர்வு - 23 NFSU-NFAT*  தடய அறிவியல் துறையில் புலனாய்வுத் துறையில் cyber security துறையில் ஆர்வமுள்ள குழந்தைகள் எழுத வேண்டிய தேர்வு.


NFAT- National Forensic Aptitude Test மூலம்

NFSU  - National Forensic Science University யில் M.Tech Cyber Security & MSc Forensic Science & MBA படிக்கலாம்.


NFSU வில் 2025ல் சேர்க்கை பெற்று பெருமை சேர்த்துள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகள் 17 பேர்.👌👌👌👍👍👍👏👏👏💐💐💐

 

👉 *தேர்வு-24* 

 *NCERT* *RIE* - *CEE* - *B.Ed*  எதிர் காலத்தில் ஆசிரியராக மலர விரும்புவோருக்கு.


Regional Institute of Education MYSORE ல் 4 year BA B.Ed & BSc BEd & 6 year MSc BEd - படித்து ஆசிரியராக விரும்புவோர் CEE Exam எழுத வேண்டும்.


👉 *தேர்வு - 25 NCHM-JEE* B.Sc Hotel Management படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


NCHM JEE தேர்வு மூலம்  IHM- CHENNAI NEW DELHI MUMBAI and SIHM TRICHY ஆகிய 4 கல்லூரிகளில் BSc Hospitality and Hotel Administration படிக்கலாம்.


2025ல் IHM ல் இடம் பிடித்துள்ள அரசுப் பள்ளி குழந்தைகள் 102 பேர் 👏👏👏👏👍👍👍👍💐💐💐💐


 👉 *தேர்வு 26 IITTM - BBA Tourism* ஊர் சுற்றுதல் ... வரலாறு அறிதல்.... பழமையை கொண்டாடுதலில் ஆர்வம்.... உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற படிப்பு BBA Tourism.


Indian Institute of Tourism and Travel Management NOIDA( 20 kms from Delhi) & GWALIOR- MP ஆகிய 2 கல்லூரிகளில் BBA - Tourism and Travel Management படிக்கலாம்👍👍👍


IITTM யில் BBA Tourism படிக்கும் அரசுப் பள்ளி கண்மணிகள் 260 பேர்.👌👌👌👌👏👏👏👍👍👍👍💐💐💐💐


 *தேர்வு - 27 APU* - Azim Premji University யில் 4 வருட BA (Hons) BSC (Hons) படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


 Bengaluru and Bhopal ஆகிய 2 நகரங்களில் உள்ள APU பல்கலைக்கழகத்தில் படிக்க


நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.


வெற்றி பெறும் குழந்தைகள் 100% scholarship பெற்று APU வில் படிக்க முடியும். 👍👍👍


APU - Bengalore and Bhopal வளாகங்களில் 2025ல் இடம் பிடித்து சாதித்த அரசுப் பள்ளி சாதனையாளர்கள் 96 பேர்.👍👍👍👍👏👏👏👏💐💐💐💐


 * *மேற்காண் 27 தேர்வுகளை எழுதி நாட்டின் 217 முதன்மை கல்வி நிறுவனங்களில் Premier Institutes கல்லூரிகளில் இடம் பிடிக்கும் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு "நான் முதல்வன் திட்டம்" கை கொடுக்கும்** 💐💐💐💐💐


மேற்காண் 27 நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா ?


மேற்காண் 27 தேர்வுகளுக்கு Online Application செய்திட தயாராக வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்.👇👇


1. SSLC Mark Sheet

2. Aadhar Card (SSLC & ஆதார் இரண்டிலும் மாணவர் பெயர் & பிறந்த தேதி ஒரே மாதிரி இருப்பது மிக மிக முக்கியம்🛑🛑🛑) இரண்டும் ஒன்றாக இருந்தால் தான் APAAR ID or ABC ID Generate ஆகும்.

3. BC BCM MBC DNC மாணவ மாணவிகள் OBC - NCL சான்று வைத்திருக்க வேண்டும்.

4. OBC NCL சான்று இல்லாதவர்கள் உடனே இ-சேவை மையத்தில் விண்ணப் பிக்கவும்.

5. OBC NCL பெற தேவையான ஆவணங்கள் ரேசன் கார்டு & பெற்றோர் Income Certificate Below 8 Lakhs.

6. Income Certificate இல்லாதவர்கள் முதலில் Income Certificate க்கு இ - சேவை மையத்தில் விண்ணப் பிக்கவும்.

7. OTP பெற ஒரு Phone Number தேவை.

8. இரண்டு email id Create செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

9. சாதிச்சான்று இல்லாத முற்பட்ட வகுப்பு அரசுப் பள்ளி குழந்தைகள்  மட்டும் General -OC - EWS சான்றுக்கு விண்ணப் பிக்கவும்.

10. Your Photo

11. Your Signature


Application போட்டாச்சு. 👏👏👏


அடுத்து என்ன?


எப்படி தயாராவது?

என்ன படிப்பது?

என்ன Syllabus ?

Question Paper எப்படி வரும்?


போன்ற விபரங்களுக்கு உங்கள் பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை அணுகவும்.


மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்  தமிழ்நாடு அரசின் கல்வித் துறை உதவி எண் 14417


 * *மிக* *முக்கிய** *குறிப்புகள்* 👇👇👇:

மேற்காண் 27 தேர்வுகளில் CLAT UCEED NID NIFT APU JEE January Session ஆகிய 6 தேர்வுகளும் +2 பொதுத் தேர்வுக்கு முன்பே முடிந்து விடும்.


NEET AIIMS NCET JEE NCHM JEE CUET IITTM ஆகிய 7 தேர்வுகளுக்கும் *மார்ச் - 10 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.* (பொதுத் தேர்வு நடைபெறும் நாள்களில் - கடைசி தேதி முடிந்து விடும். - கவனம்.🛑🛑🛑)


மீதமுள்ள கீழ்காண் 14 தேர்வுகளுக்கும் ... பொதுத் தேர்வு முடிந்த பிறகு April 2026 ல் விண்ணப்பங்கள் கோரப்பட்டு May 2026 ல் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ... June 2026 Result வெளியாகி .... July 2026ல் Counselling நடைபெற்று .... Admission முடிக்கப்பட்டு ... கல்லூரி வகுப்புகள் தொடங்கும்.👍👍👍


IMU CET

NATA

ISI

MSE

IPMAT - Indore - MBA

IPMAT - Rohtak - MBA

JIPMAT-MBA


RIE - CEE - B.Ed

NFAT


NIMHANS

JIPMER - NEET - Para Medical

IISER - IAT

NISER - NEST

BITS - SAT - B.Pharm


 *27 தேர்வுகளில் தவிர்க்க கூடாத முக்கிய  9 தேர்வுகள்.* 👇👇👇


👉 JEE Rs.1800 + 1800

👉MSE Rs. 1500

👉NCET BEd Rs. 1500


👉 NEET Rs. 1500


👉CUET Rs. 1750

👉 NIFT Rs. 4500

👉APU Rs. 500


👉NCHM JEE Rs. 1500

👉 IITTM Rs. 1000


👉9 Exams Total Fees Rs. 17500 Approximately


 *அடுத்த 10 நாள்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் தேர்வுகள்* .👇👇👇


👉 CLAT 

Last Date 31.10.2025 *Exam Date 07.12.2025* 

Sunday 2 PM

Result Date 15.12.2025 Exam Fees 4000 / 3500


👉APU Fees 500 

Last Date 14.11.2025

 *Exam Date 14.12.2025* 


👉NID - DAT 

Last Date 01.12.2025 Exam Fees 4000 

 *Exam Date 21.12.2025* Sunday 

Result Date 07.04.2026


👉 IIT UCEED 

Last Date 31.10.2025

With Late Fee 07.11.2025 *Exam Date 18.01.2026* 

Exam Fees  4000/ 2000 for Girls & SC ST PWD


👉 JEE (Mains) 

January Session

Last Date 

 *Exam Dates* 

 *21-30 January 2026* 

1-10 April 2026

Fees

Result Date


 *மிக முக்கிய பின் குறிப்பு* 👇👇👇: 


மேற்காண் 217 கல்லூரிகளில் இடம் பிடிக்க


+2 பொதுத் தேர்வில்


சில கல்லூரிகளுக்கு 450/600 மதிப்பெண்கள் அவசியம்.


சில கல்லூரிகளுக்கு 390/ 600 தேவை.


சில 360/ 600 தேவை.


சில 300/600 ஏற்கும்.


கவனம்.


+2 மதிப்பெண்களும் முக்கியம்.



Sunfeast Dark Fantasy - Dark Fantasy Choco Fills, 300g




Actual Price: Rs. 150

Offer Price : Rs. 87

Benefit : Rs. 63


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Jnm1sm


Way to Buy Option ல் Amazon Fresh தேர்வு செய்து கொள்ளவும் 


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்


உயர்கல்வி சார்ந்து இணைய வழி கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 30-09-2025

 

உயர்கல்வி சார்ந்து  இணைய வழி கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 30-09-2025


பள்ளிக் கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் அனைத்து வகையான தொழிற்கல்வி ஆசிரியர்கள் - உயர்கல்வி சார்ந்து  இணைய வழி கூட்டம் - இணைப்பில் உள்ளவாறு நடைபெறுதல் - சார்ந்து - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 30-09-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


வட்டார அளவிலான உயர் கல்வி மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம்


வட்டார அளவிலான உயர் கல்வி மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம்


வட்டார அளவிலான உயர் கல்வி மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமித்து (பட்டியல் அந்தந்த கல்வி மாவட்ட மின்னஞ்சலில்) பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


9 - 12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் Assessment தேர்வை எழுதும் முறை

 9 - 12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் Assessment தேர்வை எழுதும் முறை


CG பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 9 to 12ஆம் வகுப்பு போதிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் இந்த Assessment தேர்வை 26.08.2025 முதல் 28.08.2025 தேதிக்குள் EMIS இணைய தளத்தில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


https://exams.tnschools.gov.in/login



உயர்கல்வி வழிகாட்டுதல் Career Guidance பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வை எவ்வாறு செய்வது என்பதற்கான காணொளி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 - பள்ளிக் கல்வி இயக்குநா்



பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 - பள்ளிக் கல்வி இயக்குநா்


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்ல ஏதுவாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக உயா்கல்விக்கான போட்டித் தோ்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவா்களுக்கென வட்டார அளவில் உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சிகள்

இத்தோ்வுகளுக்கு தயாா்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களிலிருந்து உயா் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயா்கல்வி வழிகாட்டி மையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவா்களின் உயா்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.


இதேபோல, கிளை பள்ளி (ஸ்போக் ஸ்கூல்) தலைமை ஆசிரியா்களின் மூலம் அப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களும் விருப்பத்தின் அடிப்படையில் வட்டார உயா்கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.


ரூ.1,000 மதிப்பூதியம்

இந்த மையங்களில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய முதுநிலைப் பாட ஆசிரியா்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.


பயிற்சிகள் தடையின்றி நடைபெறும் வகையில், அந்தந்த வட்டாரத்திலுள்ள மையப் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது உதவித் தலைமை ஆசிரியா் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதையும் உறுதி செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள், உதவித் தலைமை ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 மாதிரிப் பள்ளிகள் வழியாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அனைத்து மாவட்டங்களிலும் உயா்கல்வி வழிகாட்டும் மையங்கள், பள்ளி அளவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Assessment for Career Guidance Teachers - DSE Proceedings

உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு (Assessment) - பள்ளிக் கல்வித் துறையின் செயல்முறைகள்


Assessment for Higher Education Career Guidance Teachers - Proceedings of the School Education Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


உயர் கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க இயக்குநர் உத்தரவு


உயர் கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க இயக்குநர் உத்தரவு


வட்டார அளவிலான உயர் கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் முதுகலை ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


துணைத்தேர்வில் தேர்ச்சியானவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்



 துணைத்தேர்வில் தேர்ச்சியானவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்


Class 12 students who have passed the supplementary examination can apply for higher education.


துணைத்தேர்வில் தேர்ச்சியான 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் – மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் @Govichezhian அவர்கள் தகவல்.



உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 15.07.2025

 

 

உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 15.07.2025


👉 இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக எழுச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு உத்தரவு.


👉 தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் கல்விக்கண் திறந்த காமராசர் குறித்த பேச்சு ஓவியம் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும்.


👉 இன்று கடைசி தேதி.

TNAU - Agri - Counselling Fees கட்டி College preference order மாற்றி அமைத்து "SAVE" செய்வது மிக மிக முக்கியம். இன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே அவகாசம்.🛑🛑🛑


👉 இன்று கடைசி தேதி.

CUET தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவிகள் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில்  BSc Agri BTech Civil BSC BEd Microbiology MA Economics & Public Administration & Sociology உள்பட 19 விதமான பட்ட படிப்புகள் படிக்க Online மூலம் விண்ணப்பிக்க இன்று 15.07.2025 கடைசி நாள். ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அருமையான அட்டகாசமான வாய்ப்பு. Don't Miss🛑🛑🛑


👉 இன்று கடைசி தேதி.

டெல்லிக்கு அருகில் NIFTEM ஹரியானாவில் B.Tech Food Technology படிக்க இன்று கடைசி தேதி. JEE NEET CUET எழுதிய மாணவ மாணவிகளுக்கு அட்டசாசமான படிப்பு. Don't Miss🛑🛑🛑


👉 நாளை 16.07.2025 கடைசி நாள். தமிழ்நாட்டில் BE படிக்க 179 and above cut off எடுத்துள்ள 39000 மாணவ மாணவிகள் மட்டும் தங்களுக்கு பிடித்த BE படிப்புகள் & கல்லூரிகளை .... தங்கள் Login மூலம் உள்ளே சென்று Choice Filling செய்ய நாளை 16.7.25 புதன் மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.


👉 BE Counselling விண்ணப்பித்துள்ள 7.5 கோட்டா அரசுப் பள்ளி குழந்தைகள் மட்டும்


7.5 Free Seat Counselling & General Fee Payment Seat Counselling ஆகிய இரண்டு Login மூலம் தனித்தனியாக Login செய்து இரண்டிலும் Choice Filling செய்யலாம்.


👉 இரண்டிலும் நாளை மறுநாள் 17.07.2025 வியாழன் காலை 10 மணிக்கு Seat கிடைத்த பிறகு.... Free Seat ஆ ? Payment Seat ஆ? எதில் சேர்ந்து படிக்கலாம் என யோசித்து முடிவு செய்யலாம்.


👉 Choice Filling செய்யும் போது சுமார் சிறந்த 50-70 கல்லூரிகளை தேர்வு செய்து... ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள 10-12 படிப்புகளை தேர்வு செய்து சுமார் 500-700 Choices வைப்பது நல்லது.


👉 நாளை 16.07.2025 மாலை 4.30 வரை Lock செய்யக் கூடாது.


👉 நன்கு யோசித்து Choices மேலும் கீழும் நகர்த்தி முழு திருப்தி அடைந்த பிறகு


நாளை மாலை 4.35 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் Lock செய்வது நல்லது.


Lock செய்த பிறகு Choice order மாற்ற முடியாது.🛑🛑🛑


👉 நாளை 4.35 PM க்கு பிறகு Lock செய்த பிறகு .... Download Locked Choices என்ற option ஐ தொட்டு


Choice Filling Copy -ஐ Download செய்து Print எடுத்து வைத்து கொள்வது அல்லது Whatsapp ல் Save செய்து வைத்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.🛑🛑🛑


👉 அந்த Choice List கைவசம் இருந்தால் தால் .... Upward கொடுக்கலாமா ? வேண்டாமா? என 17.07.2025 காலை 10 மணிக்கு மேல் முடிவு செய்ய பேருதவியாக இருக்கும்.


👉 உங்கள் User id & Password ஆகியவை உங்கள் வீட்டு பீரோ சாவி போன்றது. மிக மிக ரகசியமானது. அதனை யாரிடமும் கொடுக்க கூடாது.🛑🛑🛑


👉 பொறுமையாக நிதானமாக பதற்றமின்றி இன்றும் நாளையும் செயல்படுங்கள்.


👉 அண்ணா பல்கலைக்கழகம் CEG MIT ACT SAP PSG CIT TCE - மதுரை GCT GEC - சேலம் திருநெல்வேலி GEC கரைக்குடி அழகப்பா ஈரோடு IRTT பர்கூர் GEC  போன்ற மிகச்சிறந்த கல்லூரிகளில் இடம் பிடித்து வாழ்வில் உயர வாழ்த்துகள்.💐💐💐


👉 மீண்டும் நினைவூட்டுகிறோம். எல்லா Branch படிப்பும் சிறந்த படிப்புகளே. Computer Science ம் Civil & Chemical & Mechanical எல்லாமே நல்ல துறைகள் தான். சொல்லப் போனால் லட்சம் பேர் படிக்கும் Computer ஐ விட சில ஆயிரம் பேர் படிக்கும் Civil & Mechanical சிறந்த எதிர்காலத்தை நிச்சயம் தரும்..👍 நாம் எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது தான் முக்கியம். Best படிப்பு என எதுவுமில்லை. Best கல்லூரிகள் தான் முக்கியம். எல்லா படிப்பும் Best தான். Best கல்லூரிகளில் படித்தால்.👍👍👍 நிதானம்.... பிரதானம்.💐💐💐


பதிவு நாள் : 15.07.2025


உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025

 

 

உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025 


👉 இன்று 14.07.2025 BE online General & 7.5 Quota Counselling தொடங்குகிறது.


👉 General Rank List லும் 7.5 கோட்டா Rank List இரண்டிலும் பெயர் உள்ளவர்கள் இரண்டு Window விலும் Login செய்து Choice Filling செய்யலாம்.


👉 General Counselling-ல் உள்ள 1, 73,000 BE இடங்களில் ஒரு Seat கிடைத்தால் Fees கட்டி படிக்க வேண்டும்.


👉 7.5 கோட்டாவில் உள்ள 13900 இடங்களில் Seat கிடைத்தால் Full Free. No College Fees. No Hostel Fees. Book Fees & Exam Fees உண்டு.


👉 இன்று 14.072025 BVSc Rank List வெளியாகிறது.


👉 நாளை  15.07.2025 BSC Agri online Counselling நிறைவு பெறுகிறது.


👉 BSC Agri - Counselling 7.5 கோட்டா இடங்கள் சுமார் 450. ஆகவே 450 Rank க்குள் இருக்கும் 7.5 கோட்டா மாணவ மாணவிகள் Counselling Fees கட்ட தேவையில்லை. உடனே Login செய்து My Application Menu வை Click செய்து வலது புறம் உள்ள Edit பட்டனை தொட்டு கல்லூரிகளை & படிப்புகளை உங்களுக்கு பிடித்த மாதிரி வரிசை படுத்த நாளை 15.07.25 மாலை 5 மணியுடன் அவகாசம் முடிகிறது.🛑🛑🛑🛑


👉 தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 6-12 படித்தால் என்ன நன்மை?


எந்த கல்லூரிகளில் சேர்ந்து படித்தாலும் மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை இளநிலை படிப்பு காலம் முடியும் வரை கிடைக்கும். 


👉BA BSC BCom BBA படித்தால் 3 வருடம் கிடைக்கும். 


👉BE B.Tech BSC Agri Paramedical Degree படித்தால் 4 வருடம் கிடைக்கும்.. 


👉BA LLB படித்தால் 5 ஆண்டுகள். MBBS படித்தால் 5 1/2 ஆண்டுகள் கிடைக்கும்.


👉7.5. கோட்டா என்றால் என்ன? மாதம் ரூ.1000 -ம் வழங்குவதோடு No Hostel Fees No College Fees என்பது தான் 7.5 கோட்டா.


👉7.5 கோட்டா எல்லா படிப்பிற்கும் உண்டா?

இல்லை. 

MBBS -ல் சுமார் 440 seats. BDS ல் சுமார் 220 seats.

BVSc ல் 44 Seats.

BE B.Tech ல் சுமார் 14000

BSC Agri சுமார் 450

BA LLB ல் சுமார் 186.


என 5 தொழில் படிப்புகளிலும் சேர்த்து School Toppers சுமார் 15000 பேருக்கு  மட்டுமே 7.5 கோட்டா எனப்படும் No College Fees. No Hostel Fees. + மாதம் ரூ.1000 என்ற சலுகை கிடைக்கும்.


👉7.5 கோட்டா சீட் யாருக்கு கிடைக்கும்?

6 - 12 அரசுப்பள்ளி.

தமிழ் ஆங்கிலம் எந்த மீடியம் படித்தாலும் உண்டு. முக்கிய 4 பாடங்கள் ஒவ்வொன்றிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த குழந்தைகளுக்கு மட்டுமே 7.5 கோட்டா Free Seat கிடைக்கும்.. 


👉BE படிப்பிற்கு மட்டும் Phy Che Maths மூன்றிலும் 70 அதாவது Cut off 140 and above மதிப்பெண்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. 


👉மேற்காண் 140 Cut off என்பது Special Counselling ல் கலந்து கொண்ட மாற்றுத்திறன் & Sports Quota & முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு பொருந்தாது. அவர்கள் விண்ணப்பம் செய்திருந்தால் போதும். 7.5 கோட்டா Free Seat  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கான BE  Counselling கடந்த வாரம் முடிந்து விட்டது.🔴🔴🔴


👉இப்போது எதற்கு இந்த தகவல்?

இன்று 14.07.2025 திங்கள் 


BE online Counselling தொடங்குகிறது. Above 179 Cut off உள்ள சுமார் 39000 பேருக்கு மட்டும்.


Below 179-143 Cut-off 26.07.2025 Second Round Counselling.


Second Round Counselling-ல் கலந்து கொள்ளும் 143 Cut off வரை உள்ள மாணவர்கள் சுமார் 1,39,000 பேர். 7.5 கோட்டா மொத்த BE இடங்கள் சுமார் 14000 மட்டுமே. ஆகவே 140 Cut off க்கு கீழ் எடுத்த  குழந்தைகளுக்கே 7.5 கோட்டா இடம் கிடைப்பது சற்று சிரமம்.


மேலும் இன்று 14.07.2025 TANUVAS தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் BVSc & B.Tech Rank பட்டியல் வெளியிடுகிறது.


தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 7 கல்லூரிகளில் உள்ள B.V.Sc இடங்கள்.👇👇👇

1. Chennai 102

2. Namakkal 85

3. Tirunelveli 85

4. Orathanadu 85

5. Thalaivasal 80

6. Theni 80

7. Udumalpet 80

Total 597 இந்த 597 -ல் 7.5 கோட்டா Free Seats 44 மட்டுமே. ஒரு கல்லூரியில் 6 Seats - Free Seats.


B.Tech Food Koduveli 34

B.Tech Dairy Koduveli 17

B.Tech Poultry Hosur 40

Total Seats 91 இதில் 7.5 கோட்டா Free Seats 7 மட்டுமே.


இன்று 14.07.2025 திங்கள் நிலவரப்படி


7.5 கோட்டா Free Seats வழங்கும் படிப்புகளும் அதன் இந்த வருட 2025 Admission நிலவரமும்.👇👇👇


👉5 ஆண்டு சட்டப்படிப்பு

Admission முடிந்து வகுப்புகள் தொடங்கி விட்டன.👍👍👍


👉 B.V.Sc கால்நடை மருத்துவ அறிவியல் Rank List இன்று 14.07.2025ல் வெளியாகிறது.


👉 யாருக்கு B.V.Sc Seat கிடைக்கும்? ஒரு தோராய கணக்கீடு.


👉 இன்று 14.07.2025 ல் வெளியாகும் B.V.Sc General Rank List ல் 553 B.V.SC இடங்கள் எந்த பிரிவு குழந்தைகளுக்கு எந்த Rank இருந்தால் கிடைக்க வாய்ப்புண்டு?


👉 மொத்தம் உள்ள BVSc Seats 597 இதில் 7.5 கேட்டா Seats 44 போக மீதம் உள்ள 553 Seats பிடிக்க போவது யார்? உங்கள் Rank 638 க்குள் இருந்தால் வாய்ப்பு பிரகாசம்👌👌👌👌👍👍👍👍💐💐💐💐


👉 முதல் 180 Rank -ல் உள்ள அனைவருக்கும் Seat உறுதி.👍👍👍💐💐💐


👉 முதல் 506 Rank வரை உள்ள BC MBC குழந்தைகளுக்கு Seat கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உண்டு.


👉 SC SCA குழந்தைகளை பொறுத்தவரை Rank 632 வரை Seat கிடைக்கலாம்.


👉ST குழந்தைகளை பொறுத்தவரை Rank 638 வரை வாய்ப்பு கிடைக்கலாம்.


👉 மேலே உள்ள கணிப்புகள் - உத்தேசமானவை.


👉 இன்று 14.07.2025 வெளியாகும் Rank List-ல் உங்கள் Rank 638 க்கும் கீழே இருந்தால்


👉 7.5 கோட்டாவில் உள்ள 44 இடங்களுக்கு 7.5 கோட்டா Rank List -ல் உங்கள் பெயர் 88 க்கும் அதிகமாக இருந்தால்....


👉 இன்று 14.07.2025 மற்றும் 26.07.2025 ஆகிய நாள்களில் நடக்கும் BE Online Counselling-ல் தவறாமல் கலந்து கொண்டு .... 


👉 அண்ணா பல்கலைக்கழகம்


👉CEG Campus


👉 MIT Campus


👉 ACT Campus


👉 SAP - School of Architecture & planning -ல் உள்ள B.Plan


👉 கோவை GCT


👉 கோவை PSG Tech Aided


👉 கோவை CIT Aided


👉 மதுரை தியாகராஜா Aided


👉 சேலம் GEC


👉 காரைக்குடி CECRI


👉 காரைக்குடி அழகப்பா


👉 சென்னை CIPET


போன்ற அரசு சார்ந்த கல்லூரிகளில் ஒரு 7.5 கோட்டா Free Seat ஐ பிடித்து வைத்துக் கொள்வது நல்லது.👌👌👌👌


Best கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்று மட்டும் எண்ணுங்கள்.


Best கல்லூரிகளை Choice List முதலில் வையுங்கள்.


Best படிப்பு என்று எதுவும் இல்லை.


Best கல்லூரிகளில் படிக்கும் எல்லா படிப்புகளும் Best தான்.


Computer Science-ம்

Civil & Chemical & Mechanical எல்லாம்


ஒரே தரமானவைதான்...

Best கல்லூரிகளில் படித்தால்.


அப்புறம் Feb 2026 ல் B.V.Sc Seat ஒன்று Waiting List -ல் கிடைக்கும் போது


BE படிப்பில் இருந்து TC வாங்கிக் கொண்டு


டாக்டர் ஆகி விடலாம்.


நன்றாக யோசித்து நிதானமாக முடிவெடுங்கள்.


வாழ்த்துகள்💐💐💐

பதிவு நாள் 14.07.2025 திங்கள்


உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

 

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு


நாளை 07.07.2025

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில்


BSC Nursing

B.Pharm

BPT

BOT

BASLP

உள்ளிட்ட 19 வகையான 4 வருட BSC பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும்


 3 வருட Diploma Nursing படிப்பிற்கும் (only Girls - 2000 seats - Arts Group Girls - க்கு 200 இடங்கள் இருக்கிறது. Don't Miss🔴🔴🔴 )


விண்ணப்பிக்க நாளை 07.07.2025 கடைசி நாள்.

BC MBC விண்ணப்ப கட்டணம் ரூ.500 & ரூ.300


SC ST குழந்தைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. Application Free.🔴🔴🔴


https://reg25.tnmedicalonline.co.in/pmc25/


நாளை 07.07.2025 

தமிழ்நாடு BE Counselling online மூலம் தொடங்குகிறது.


7.5 கோட்டா உள்ள அரசுப்பள்ளி குழந்தைகளில் 3 சிறப்பு பிரிவு குழந்தைகளுக்கு மட்டும் நாளை 07.07.2025 ஒரு நாள் மட்டும் online Choice Filling செய்ய முடியும். ஒரே ஒரு நாள் மட்டுமே. (7.5 கோட்டா உள்ள மாற்றுத்திறன் & Sports Quota & முன்னாள் ராணுவ வீரரின் மகள் or மகன் மட்டும் நாளை Counselling -ல் கலந்து கொள்ளலாம்)👍👍👍


https://www.tneaonline.org/



உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App



 உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App


உயர்கல்வி தொடர்பாக


எந்த கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது?


நீங்கள் ஆசைப்படும் படிப்பு எந்த கல்லூரியில் உள்ளது?


எந்த Website-ல் Apply செய்ய வேண்டும்?


எப்போது Last Date?


எப்போது Result வரும்?


Last year Cut off என்ன?


Cut off எப்படி கணக்கிட வேண்டும்?


உங்கள் Cut off க்கு உங்கள் மாவட்டத்தில் எந்த கல்லூரி கிடைக்கும்?


சென்னையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


கோவையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


எந்த Branch கிடைக்கும்?


Agri - Seats - Govt College-ல் எந்தனை ?


தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி எத்தனை?


அதில் BSC Nursing Seats எத்தனை உள்ளது?


அதில் Boys க்கு எத்தனை Seats ? Girls க்கு எத்தனை?


BSC Nursing படிப்பிற்கு Govt. College fees எவ்வளவு?


என எந்த சந்தேகம் இருந்தாலும்...


Bombay செல்ல train fare எவ்வளவு?


Train time என்ன?


என எந்த சந்தேகம் இருந்தாலும்


உடனே Perplexity Al App-ல் தயங்காமல் கேளுங்கள்.


உடனே "டக்" "டக்" என அழகாக பதில் வரும்.👌👌👌👌


உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.


நிறைய குழப்பங்கள் தீரும். தெளிவு பிறக்கும்.


இந்த Perplexity AI App . உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்


சலிக்காமல் பதில் சொல்லும்


அழகான அறிவான அற்புதமாக தோழன்.... Class mate.... போல ....


உடனே முயற்சி செய்து பாருங்கள்..... Start your test ....


👇👇👇


https://play.google.com/store/apps/details?id=ai.perplexity.app.android


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Neral To Matheran Toy Train

 🚂 நெரால் டு மாதேரான் : மேகங்களுக்கு நடுவே செல்லும் பொம்மை ரயில் பயணம்! 🌧️🌲 Neral To Matheran Toy Train சுற்றிலும் அடர்ந்த பச்சைக்காடுகள்...