கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மன்ற செயல்பாடுகள் தொடக்கம் - CEO தகவல்

 

 மன்ற செயல்பாடுகள் தொடக்கம் - முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்


அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,


     இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம்  வானவில் மன்றம், கலை மற்றும்  பண்பாடு மன்றம் (கலைத்திருவிழா)  மற்றும் சுற்றுச் சூழல் மன்ற செயல்பாடுகள் அனைத்து நிகழ்ச்சிகளும்  இன்று *03.07.2025* அன்று அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துவங்கப்படவேண்டும்.  துவக்க  நிகழ்ச்சியினை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆவணப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


அனைத்து மன்றங்களும் முறையாக அமைக்கப்பட்டு வாரந்தோறும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாட வேலைகளில் மன்ற செயல்பாடுகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரும் , மன்றப்  பொறுப்பாசிரியரும் உறுதி செய்தல் வேண்டும். குறிப்பாக அனைவரும் மன்ற செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாட வேளையில் வேறு எவ்வித செயல்பாடுகளும் இடம் அளிக்காமல் மன்ற செயல்பாடுகள் மட்டுமே நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். இச்செயல்பாடுகள் அனைத்தும் மகிழ் முற்றம்  மாணவர் குழுக்கள் வாயிலாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். அதில் மாணவர்களின் பங்கேற்பையும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கண்காணிக்கவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மன்ற செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமித்தல் வேண்டும் மாதந்தோறும் பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் போட்டிகளை நடத்தி   வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து EMIS  வலைதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.                            

                       - முதன்மைக்கல்வி அலுவலர், கரூர் மாவட்டம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The secret of life: Be happy and helpful to others until the last moment

வாழ்வின் ரகசியம் : கடைசி நொடி வரையில் மகிழ்ச்சியாகவும், இயன்றவரை பிறருக்கு உதவிகரமாகவும் இருங்கள் The secret of life: Be happy and helpful t...