கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உங்கள் குழந்தைகளின் ஆதாரை புதுப்பித்து விட்டீர்களா? பெற்றோருக்கு 10 முக்கிய தகவல்கள்

 


உங்கள் குழந்தைகளின் ஆதாரை புதுப்பித்து விட்டீர்களா? பெற்றோருக்கு 10 முக்கிய தகவல்கள்


Have you updated your children's Aadhaar? 10 important information for parents


5 வயதுக்கு மேல் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட பெற்றோர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திலிருந்து (Unique Identification Authority of India- UIDAI) ஒரு செய்தி வந்தது.


உங்கள் பிள்ளைகளின் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பிக்க (அப்டேட்) வேண்டும் என்பதுதான் அதன் சுருக்கம்.


இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பிலும், பயோமெட்ரிக் அப்டேட் பற்றிய எஸ்எம்எஸ் மொபைல் எண்களுக்கு அனுப்பப்படுவதாக UIDAI தெரிவித்துள்ளது.


இந்த கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் என்பது என்ன? பிள்ளைகளின் ஆதார் அட்டை எந்த வயதில் புதுப்பிக்கப்பட வேண்டும்? அப்டேட் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

1. பயோமெட்ரிக் அப்டேட் என்பது என்ன?

5 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு 5 வயது தாண்டிய பிறகு கட்டாயமாக மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.


இதை Mandatory Biometric Update (MBU) அதாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு என்று அழைக்கின்றனர்.


இது முதல் பயோமெட்ரிக் அப்டேட். இந்த அப்டேட் சமயத்தில் முழுமையான பயோடேட்டாவை சமர்ப்பிக்க வேண்டும்.

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

இந்த சமயத்தில் பிள்ளைகளுக்கு சம்பந்தப்பட்ட விவரங்களில் எந்த தவறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் இது புதிய பதிவு போன்றதே. ஆனால் பிள்ளைகளின் ஆதார் எண்ணில் எந்த மாற்றமும் இருக்காது.


பிள்ளைகளின் Aadhar பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம் என்று UIDAI கூறுகிறது. ஆதார் விதிமுறைகள், 2016இல் இது இடம்பெற்றுள்ளது.


2. பயோமெட்ரிக்கை ஏன் அப்டேட் செய்யவேண்டும்?

பிறந்த பச்சிளம் குழந்தைகளிலிருந்து 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டை பால ஆதார் என்று அழைக்கின்றனர்.

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

அந்த ஆதாரில் குழந்தைகளின் புகைப்படம், பெயர், பிறந்த நாள் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் மட்டும் இடம்பெற்றிருக்கும்.


பால ஆதாரில் குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களான விரல் ரேகைகள் மற்றும் கருவிழி பதிவு சேகரிக்கப்படுவதில்லை.


எனவே, 5 வயதுக்கு பிறகு விரல் ரேகைகள், கருவிழி பதிவு போன்றவற்றுடன் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய வேண்டும் என்று UIDAI கூறியுள்ளது.


3. செய்தியில் என்ன உள்ளது?

UIDAI அனுப்பும் செய்திகளில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம் என்றும், அவர்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் குழந்தையின் ஆதார் செயலிழக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

4. பிள்ளைகளின் ஆதார் பயோமெட்ரிக்கை எங்கு அப்டேட் செய்ய வேண்டும்?

உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ஆதார் மையம் அல்லது ஆதார் சேவா கேந்திரங்களுக்கு சென்று பயோமெட்ரிக் தரவுகளை புதுப்பித்து கொள்ளலாம்.


5. ஆதார் பயோமெட்ரிக்கை அப்டேட் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

பிள்ளையின் ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்காவிட்டால், அவர்களின் ஆதார் செயலிழக்க செய்யப்படும்.


5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் அப்டேட் இரண்டு ஆண்டுகளுக்குள் செய்யப்பட வேண்டும். அதாவது, அவர்கள் 7 வயதாகும் முன் இதை முடிக்க வேண்டும்.


இல்லையெனில், ஆதார் விதிமுறைகள் 2016இன்படி குழந்தையின் ஆதார் எண் டீஆக்டிவேட் ஆகும்.

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

இருப்பினும், 2016இல் இதேபோன்ற விதி இருந்தபோதிலும், 7 வயதை முடித்த பிறகும் பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்படாத குழந்தைகளின் ஆதாரை UIDAI செயலிழக்க செய்யவில்லை.


இருப்பினும், ஆதார் செயலிழப்பை தவிர்க்க அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று தகவல்களை அப்டேட் செய்யுமாறு பெற்றோர்களின் மொபைல் எண்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டன.


இந்த செய்திகள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்த தாய், தந்தை அல்லது பாதுகாவலரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டன.


6. ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்?

ஆதார் விதிமுறைகளின்படி, 7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பிப்பு இலவசமாக செய்யப்படும். அதற்கு பிறகு வயதுடைய பிள்ளைகளுக்கு, அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

சமீபத்திய செய்திக்குறிப்பில், 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் அப்டேட் செய்ய 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


7. ஆதார் செயலிழந்தால் என்ன ஆகும்?

ஆதார் விதிமுறைகளின்படி, பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்படாவிட்டாலும் ஆதாரை நீக்கக் கூடாது.


அது டீஆக்டிவேட் மட்டுமே ஆகும். பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஆக்டிவேட் ஆகும்.


ஆதார் இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளிட்டு, உங்கள் பிள்ளையின் ஆதார் செயல்பாட்டில் உள்ளதா அல்லது செயலிழந்துவிட்டதா என்பதை சரிபார்க்கலாம்.


8. குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு என்ன தேவை?

பிள்ளைகளுக்கு முதல் முறையாக ஆதார் எடுக்கும்போது, பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் கார்டு தேவைப்படும்.

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

5 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு ஆதார் எடுக்கும்போது அவர்களை ஆதார் மையங்களுக்கு கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. ஆனால், பயோமெட்ரிக் அப்டேட் சமயத்தில் குழந்தைகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்களின் விரல் ரேகைகள், கருவிழி மற்றும் புகைப்படத்துடன் அப்டேட் செய்ய வேண்டும்.


9. ஆதார் பயோமெட்ரிக்கை ஏன் அப்டேட் செய்ய வேண்டும்?

பள்ளி சேர்க்கை, நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, உதவித்தொகை பெற, மற்றும் நேரடி பயன் மாற்று (DBT) திட்ட சேவைகளைப் பெற ஆதார் கட்டாயம்.


எனவே, விதிமுறைகளுக்கு ஏற்ப ஆதாரை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.

https://kalvianjal.blogspot.com/2025/08/10_24.html

10. பிள்ளைகளின் ஆதாரை மீண்டும் எப்போது அப்டேட் செய்ய வேண்டும்?

பிள்ளைகளின் ஆதாரை 5 வயதுக்கு பிறகு ஒரு முறை அப்டேட் செய்தது போல, 15 வயதுக்கு பிறகு மற்றொரு முறை அப்டேட் செய்ய வேண்டும்.


15 முதல் 17 வயதுக்கு குறைவானவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம். விரல் ரேகைகள், கருவிழி மற்றும் புகைப்படத்தை 15 வயதுக்கு பிறகு மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

    தற்போது TNSED Schools  App-ல்  Noonmeal bug fixes and enhancements added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: ...