பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க EMISல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக மாணவர்களிடம் பெறவேண்டிய உறுதிமொழி படிவம்
Declaration form to be obtained from students regarding the information uploaded in EMIS for preparing the Nominal Roll of class 10 students
நிகழ் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம்.
1. அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் 'எமிஸ்' தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
2. மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து, திருத்தங்கள் இருந்தால் அக்டோபர் 6 முதல் 23-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும்.
3. மாணவரின் பெயர், பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு இருக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அதன் நகலைப் பெற்று பெயர் மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
4. அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5. தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோர் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால், பதிவேற்றம் செய்யப்படும் கைப்பேசி எண் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
6. தேர்வில் சலுகை கோரும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.