SLAS அறிக்கை : 38வது ஆய்வுக்கூட்டம் தென்காசியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம், ஜூன் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் எனது தலைமையில் நடைபெற்றது. அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களோடு ஆலோசித்தோம். அதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களைச் சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம்.
அதன்படி, முதல் ஆய்வுக்கூட்டம் ஜூன் 25ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் தொடங்கியது. பிற அலுவல்களுக்கு இடையிலும், தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திய நிலையில், 38வது மாவட்ட ஆய்வுக் கூட்டம் தென்காசியில் இன்று நடைபெற்றது. 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 700 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். SLAS தரவுகளை முன்வைத்தும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.