கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்​வுத் ​துறை உத்​தர​வு



 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்​வுத் ​துறை உத்​தர​வு


பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு எழுதவுள்ள மாணவர்​களின் பெயர் பட்​டியலில் விவரங்களை சரிசெய்ய வேண்​டுமென தேர்வுத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.


இதுதொடர்​பாக தேர்​வுத்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்​கும் அனுப்​பிய சுற்றறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்வி​யாண்​டுக்​கான (2025-26) பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்​வு, வரும் மார்ச் - ஏப்​ரல் மாதம் நடத்​தப்பட உள்​ளது. இந்த தேர்​வெழுத உள்ள மாணவர்​களின் பெயர்ப் பட்​டியல் தயாரிக்​கப்பட இருக்​கிறது. இதையடுத்து அனைத்​துப் பள்ளி தலைமை ஆசிரியர்​களும் எமிஸ் தளத்​தில் மாணவர்​களின் விவரங்​கள் சரி​யாக உள்​ளதா என்​பதை சரி​பார்க்க வேண்டும்.


மாணவர்​களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்​றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்​களை சரி​பார்க்க வேண்டும். அதில் திருத்​தங்​கள் இருந்​தால் அக்​டோபர்) 6 முதல் 23-ம் தேதி வரை அவற்றை மேற்​கொள்ள வேண்​டும். மாணவரின் பெயர், பிறப்​புச் சான்​றிதழில் உள்​ள​வாறே இருக்க வேண்​டும். அரசிதழில் பெயர் மாற்​றம் செய்​தவர்​களுக்கு மட்​டுமே அதன் நகலை பெற்று அதன் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​து​கொள்ள அனு​மதி வழங்​கப்​படு​கிறது.


பாஸ்​போர்ட் புகைப்படம்: சமீபத்​தில் எடுக்கப்பட்ட மாணவருடைய பாஸ்​போர்ட் அளவு புகைப்​படத்தை மட்​டுமே பதிவேற்​றம் செய்​ய​வேண்​டும். இதுத​விர, தேர்வு முடிவு​கள் மாணவர்​களின் பெற்​றோர் செல்​போன் எண்ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக அனுப்பப்படும். அதனால் பதிவேற்​றம் செய்யப்​படும் செல்​போன் எண் சரி​யாக இருப்பதை உறுதி செய்து​ கொள்ள வேண்டும். தேர்​வில் சலுகை பெற விரும்​பும் மாற்​றுத் திற​னாளி தேர்​வர்​கள் அதற்​குரிய ஆவணங்​களு​டன் இணைத்து பதிவேற்​றம் செய்ய வேண்​டும். அதன்​பின்​னர் சலுகை கோரி பெறப்​படும் விண்​ணப்​பங்​கள் கண்டிப்பாக பரிசீலிக்​கப்​பட​மாட்​டாது. மேலும், மதிப்​பெண் சான்​றிதழ் வழங்​கிய பின்​னர் திருத்​தங்​கள் கோரி தேர்​வுத்​துறைக்கு அனுப்பக்​கூ​டாது. இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்​ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...