GST வரி குறைப்பு : நாளை (22-09-2025) முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்
“வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்”
“12% GSTல் இருந்த 99% பொருட்கள், 5% GSTக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும்”
நாட்டு மக்களுக்கு பிதமர் மோடி உரை:
நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன;நாளை முதல் மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும்.
விரும்பியதை எளிதாக வாங்கலாம்; ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.
இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது; ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.
வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தாண்டு மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை செலவு குறைவும் - பிரதமர் நரேந்திர மோடி.
ஜிஎஸ்டியில் 5%, 18% வரி வரம்புகள் மட்டுமே பெரும்பாலான பொருள்கள் மீது விதிக்கப்படும்.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99% பொருட்களின் வரி 5%ன் கீழ் வந்துள்ளது; இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும்.
சிறு, குறு தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருள்களை உள்நாட்டில் தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்கள் சிறந்த தரத்தோடு அமைய வேண்டும்.
சர்வதேச அளவில் சிறந்த தரத்தோடு இந்திய நிறுவனங்கள் பொருள்களைத் தயாரிக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்டத்தில் கை கொடுத்த சுதேசி கொள்கை, இந்தியாவை வலுவாக உருவாக்க கை கொடுக்கும்.
உள்நாட்டு தயாரிப்புப் பொருள்களை இந்தியர்கள் கர்வத்தோடு பயன்படுத்த வேண்டும்.
நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்-நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.